சாவித்திரி கணேசன் 2
சாவித்திரி அம்மாள் மறைவுக்குப்பின் அவர் குழந்தைகள் சொத்துப்
பிரிவினை பற்றி பேசக் கூடியதை சென்ற
பகுதியில் பார்த்தோம்
இனி
மிக சுமூகமாகத்தான் பேச்சு துவங்கியது சுவையான காலை உணவு மதிய உணவை
உண்டு சிறிது ஓய்வுக்குப் பிறகு விசாலமான
திறந்த வெளி மாடியில் எல்லோரும் உட்கார சாய்ந்து படுக்க விரிப்பு, நாற்காலி
எல்லாம் போட்டு மாலை சிற்றுண்டி காப்பியுடன கூடினார்கள்.
அப்பாவின் நேர்மை, உழைப்பு, சொந்த முயற்சியால் வாழ்வில் உயர்ந்தது
பற்றி நினைவு கூர்ந்தனர்
பின் அம்மா – அவரின் அலட்டிக்கொள்ளாத உழைப்பு , சிக்கனம், தருமங்கள் சுத்தம் இதெல்லாம் பேசப்பட்டது
நகை, வீடு இதெல்லாம் எல்லோருக்கும் சரி பங்கு கொடுத்தது பற்றியும்
பெருமையாகப் பேசினார்கள்.
இவ்வளவு சரியாகச் செய்த அம்மா காரில்தான் ஓர வஞ்சனை செய்து
விட்டார்கள். பல லட்சம் பெறுமான காரை ஏன் ஒருவரே அடைய வேண்டும்? அதையும்
காசாக்கி சரி பங்கு எல்லோருக்கும்
கொடுத்து விடலாம்
என்று ஒரு குரல் கிளம்ப , சட்டென்று மாறியது சூழ்நிலை
.கசமுசவென்று
ஒலிகள், வினாக்கள், என்று அமைதி குலைந்து இரைச்சல் நிறைந்தது.
அடுத்தடுத்து எழுந்த சில உரத்த கருத்துக்கள்
--பிள்ளை இல்லாச் சொத்து போல் ஏன் பணத்தை முதியோர் யாருக்கோ கொடுக்க
வேண்டும் .அவர்களுக்கு ஐநூறு ஆயிரம் கொடுத்தால் பத்தாதா
-- நகைகள் பெண் பிள்ளைகளுக்குத்தானே இதில் ஏன் ஆண்களுக்குப்பங்கு ?
-- அது சரி, ஆண்கள் நகை முழுதும் பெண்களுக்கே விட்டுக் கொடுகிறோம்
.நீங்கள் வீட்டில் உங்கள் பங்கை ஆண்களுக்கு விட்டுக்கொடுங்கள்
--பெண்களுக்குத்தான் நிறைய நகை போட்டு சீருடன் சிறப்பாக கல்யாணம்
செய்து வைத்தார்களே அப்புறம் எதுக்கு அவர்களுக்கு சொத்து ?
--ஆமாம் நாங்களாவது இருபது வயதில் கல்யாணமாகிப் போய் விட்டோம் .
நீங்களோ இருபத்தெட்டு ,முப்பது வயது என்று பிள்ளைகள், ஏன் சிலர் பேரன் பேத்தி
எடுத்தும் அப்பா அம்மாவை அட்டை போல் உறிஞ்சியது எங்களுக்குத் தெரியாதா ?.
இப்போது பேச்சு சூடு பிடிக்க ஆரம்பித்து ஒரு சிறிய வாய்ச்சண்டையாக
உருமாறியது
ஒரு கனத்த குரல் இந்தக் கூச்சலையும் மீறி ஒலித்தது
டிபன் ஹெவியாக சாப்பீட்டு கண் அயர்ந்து விட்டேன் .இப்போதுதான்
முழிப்பு வந்தது. என்ன பேசினீர்கள் என்று கவனிக்கவில்லை. என்ன பேசியிருந்தாலும்
சரி. . ஒரு அன்பான வேண்டுகோள்
எனக்கு நம் அப்பா அம்மா போல் நிறைய ஆணும் பெண்ணும்.. இன்னும்
எந்தப்பெண்ணுக்கும் திருமணம் செய்யவில்லை . எந்தப்பையனும் படித்து முடிக்கவும்
இல்லை
எனவே நீங்கள் எட்டுப்பேரும் உங்களுக்கு வரும் சொத்து மதிப்பில்
அரைக்கால் பங்கு விட்டுக்கொடுத்து எனக்கு இரண்டு பங்காகத் தர வேண்டும் என்றார்
அவர் சொல்லி வாயை மூடுவதற்குள் அவர்மேல் கண்டனக் கணைகள் ஏராளமாகப்
பாய்ந்தன
அடுத்து இன்னொரு குரல்
எனக்கு ஆண் வாரிசு இல்லை . முதுமையில் எங்களைப் பார்துக்கொள்ள யாரும்
இல்லை. எனவே எட்டு பேரும் கால் பங்கை விட்டுகொடுத்து எனக்கு மூன்று பங்காகத் தர
வேண்டும் என்றது
இப்போது வாய்ச்சண்டை கைகலப்பாக மாறும் நிலை
அப்படி மாறாமல் தடுத்தது இன்னொரு குரல் இது வரை வந்த கருத்துகள்
கோரிக்கைகள் எல்லாவற்றையும் முறியடித்து முத்தாய்ப்பாக ஒலித்தது அந்தக்குரல்
நாலு வீடுகளில் இரண்டு நான்
வாங்கியது . என் சொந்தக்காசில் வாங்கியது .அம்மா மிகவும் பிரியப்பட்டதால் அவர்
பேரில் வாங்கினேன், ,எனவே அதை எனக்கு முழுதாகக் கொடுத்து விட்டு மற்ற இரண்டையம்ம்தான் பங்கு போட வேண்டும்
என்றது
இதில் எல்லோரும் வாயடைத்துப்போய் திகைத்து நின்றனர்
.
சற்று சுதாரித்துக்கொண்டு ஒருவர்
இதை ஏன் அம்மா அன்று சொத்து பற்றி தெளிவாகப் பேசியபோது சொல்லவில்லை
என்று கேட்டார்.
அன்று அம்மா இருந்த நிலையில் எனக்கு அதெல்லாம் சொல்லத் தோணவில்லை
என்று முதலைக்கண்ணீர் வடித்தார் அவர்
மிகத்தெளிவாக எளிதாகத் தோன்றிய சொத்துப்பிரிவினை இப்போது இடியாப்பச்
சிக்கலாகி விட்டது.
ஒரு கனத்த அமைதி புயலுக்கு முன் அமைதி அங்கே நிலவியது
அந்த அமைதியைக் குலைப்பது போல் கைப்பேசி ஒலித்தது . அழைத்தவர்
சாவித்திரி, கணேசனுக்கு நன்கு தெரிந்த வழக்கறிஞர்
இன்றுதான் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பி வந்தேன். அம்மா மறைவு
அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது .
அதையும் தாண்டி எனக்கு ஒரு கடமை இருக்கிறது . உங்கள் எல்லோரையும்
ஒருமிக்க சந்திக்க வேண்டும் என்றார்.
எல்லோருக்கும் மனதில் ஒரு திக் திக் . என்ன சொல்லப் போகிறாரோ என்ற
எண்ணம்.
உடனே புறப்பட்டு வாங்கள். நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம்
என்று சொல்ல அவர் இப்போது என்னால் வர முடியாது .நாளை காலை எட்டு மணிக்கு
வருகிறேன். எல்லோரும் இருங்கள் என்று சொன்னார்
வேறு வழியில்லை நாளை வரை பொறுத்துத்தான் ஆக வேண்டும் .ஒரு கடமை போல்
இரவு உணவை முடித்து விட்டு உறங்கப்போனார்கள்
சரியாக காலை எட்டு மணிக்கு வழக்கறிஞரின் மகிழுந்து வந்து சேர, ஒரு
வழியாக எட்டரை மணி அளவில் எல்லோரும் கூடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்
அங்கேயே சிற்றுண்டியை எல்லோரும் உண்டனர்
காபியைக் குடித்து விட்டு, ஒனபது பேரும் இருப்பதை உறுதி செய்து கொண்டு
வழக்கறிஞர் பேசத்துவங்கினார்
“ கணேசன் மறைவுக்கு சிலகாலம் முன்பு அவர் சாவித்திரி அம்மாளோடு என்
அலுவலகத்துக்கு வந்தார். .இருவரும் நீண்ட நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்
. சொத்து பற்றி பல விளக்கங்கள் கேட்டுத் தெளிந்து கொண்டார்கள்
அதன்பின் சில நாட்கள் கழித்து கணேசன் மட்டும் வந்தார் . கையில் ஒரு
தடித்த உறை. – முத்திரை இடப்பட்டது (sealed envelope) . எங்கள் சொத்துக்கள் முழு விவரம் அவற்றை
எப்படி பங்கு போட வேண்டும் என்பதை தெளிவாக ஒரு ஆவணமாக எழுதி இந்த உறையில்
வைத்திருக்கிறோம் .
இதை நீங்கள் வைத்திருங்கள்.
எங்கள் இருவர் மறைவுக்குப்பின் எங்கள் பிள்ளைகள் எல்லோர் முன்னிலையிலும் இதைப்
பிரித்துப் படித்துக் காண்பித்து அதை செயல் படுத்துவது உங்கள் பொறுப்பு என்றார்.
அதற்கு நான், என்னிடம் இருந்தால் சில பிரச்சினைகள், தேவையற்ற ஐயங்கள்
எழலாம்.எனவே இதை வங்கியில் பாதுகாப்பாக வைப்பதுதான் நல்லது என்று சொன்னேன்
அன்றே வங்கிக்குப்போய் சாவித்திரி, கணேசன்,நான் மூவரில் யாரவது ஒருவர்
திறக்குமாறு ஒரு பெட்டகம் வாடகைக்கு எடுத்து, அதில் அந்த உறையை வைத்து சாவியை
கணேசன் கொண்டு போய்விட்டார்
குறைந்தது இரண்டு மக்களோடு வங்கிகுப்போய் உறையை எடுத்து ஒன்பது பேர்
முன்னிலையில் பிரித்து படித்து,செயல் படுத்த வேண்டும் என்றார்.
இதற்கு உங்களுக்கு உரிய கட்டணத்தை நான் தந்து விடுகிறேன் என்றார். இதை
நட்புக்காக நான் செய்கிறேன் கட்டணம் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்
.
பெட்டகச் சாவியை தேடி எடுத்து விட்டு, யார் யார் வங்கிக்கு
வருகிறீர்கள் என்பதையும் முடிவு செய்து கொண்டு ஒன்பது பேரும் இருப்பதை உறுதி
செய்து கொண்டு எனக்கு தகவல் தெரிவித்தால் நான் வந்து மற்றவற்றைக் கவனிக்கிறேன்
என்றார் வழக்கறிஞர்
ஒன்பது பேரும் இப்போது இங்கே இருக்கிறோம் .சாவியைத் தேடி எடுத்து
விட்டால் இன்றே வங்கிக்குப்போய் வந்து விடுவோம் என்று எல்லோரும் ஒரே குரலில்
பேசினார்கள்
பரபரப்பாகத் தேடி சாவித்திரி அம்மாவின் பெட்டியில் இருந்து சாவி
எடுக்கப்பட்டது .
வங்கிக்கு வர எல்லோருமே விரும்ப, ஒரு குழுவாக வங்கிக்குப் போனார்கள்
.வழக்கறிஞர், கணேசன் இருவருமே வங்கியின் நல்ல வாடிக்கையாளர்கள் . தொழில்
முறையிலும் வங்கிக்கு நெருக்கமானவர்கள் . எனவே வங்கி மேலாளர் முகம் சுளிக்காமல்
எல்லோரையும் வரவேற்று உட்கார வைத்து காபி கொடுக்கச செய்தார்.
முறைப்படி எல்லாம்
கணேசன் செய்திருந்ததால் கால விரயம் இல்லாமல் பெட்டகம் திறக்கப்பட்டு முத்திரையிட்ட
உறை எடுக்கப்பட்டது .
உறையில் முத்திரை உடைக்காமல் இருப்பதை எல்லோரும் உறுதி செய்து கொண்டு
வழக்கறிஞர் கையில் .கொடுத்தனர். மீண்டும் வீடு நோக்கிப்பயணம்
எல்லோர் முன்னிலையிலும் முத்திரை உடைக்கட்டுப்பட்டு உறை
பிரிக்கப்பட்டது.
அதற்குள் இரண்டு உறைகள் இருந்தன .இரண்டையும் பிரித்துப் படித்தார்
வழக்கறிஞர்
என்னதான் எழுதியிருந்தது அதில் ?
அடுத்த வாரம் பார்ப்போமே .
எனக்கும் சிந்திக்க, கற்பனிக்க அவகாசம் வேண்டுமல்லவா
இ(டை)ச்செருகல்
சென்ற வாரம் வெளியிட்ட இந்தக்கதையின் முதல் பகுதி பற்றி கருத்து
ஏதும் வரவில்லை .கருத்துச் சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை போலும் .அதற்காக அரைகுறையாக
விட முடியாது .இந்த வாரமும் அடுத்த வாரமும் அதன் தொடர்ச்சிதான்
மூளைக்கு வேலை
சென்ற வாரம்
ஓர் கட்செவி குழுவில் எத்தனை உறுப்பினர்கள் வரை இருக்கலாம் ?
இதுதான் சென்ற வாரப்புதிர்
256 என்ற
சரியான விடை அனுப்பிய
ஆத்திக்கா வுக்குப்
பாராட்டுக்கள்
(அது என்ன 256
? தெரியவில்லை . தெரிந்தவர்கள் யாரவுது சொல்லாம் )
இனி
இந்த வாரப் புதிர்
தலை முடிக்கு வர்ணம் (Hair Dye ) முதன் முதலாக யாருக்குப்
பூசப்பட்டது ?
இறைவன் நாடினால்
அடுத்த வாரம்
சந்திப்போம்
Blog
address
sherfuddinp.blogspot.com
B/F/W 02092018
.
--
No comments:
Post a Comment