உரல் உலக்கை
பல வீடுகளில் இது இருந்தாலும் இதன் பயன்பாட்டை நான்
திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன் .---
படம் அன்னக்கிளி – இளையராஜா இசை அமைப்பில் முதல் படம் –பாட்டு அடி ராக்காயி மூக்காயி
------------நெல்லுக்குத்த வருனகளேன்------
இதில் வருவது போல் நெல்லைகுத்தி அரிசியாக்குவதில் பயன்பட்ட உரல்
உலக்கை இப்போது பெரும்பாலும் சில மதச்சடங்குகளில் மட்டும் பயன்படுகிறது
கைக்குத்தல் அரிசி எனபது மீண்டும் இப்போது பயன்பாட்டில் வருகிறது அது
உரல் உலக்கையில்தான் நெல்லை இடித்து எடுத்த அரிசியாகத்தான் இருக்கும் என்று
நம்புவோம்
திருகு சொம்பு (கூஜா)
பயணங்களில் தண்ணீர், வெந்நீர் ,மோர் போன்றவற்றைக் கொண்டு செல்லப்
பயன்படும் இது வெண்கலம்(Bronze) செம்பு(Copper) அல்லது பித்தளையில் (Brass) இருக்கும்.. பின்னர் எவர்சில்வர் எனப்படும்
துருப்பிடிக்காத எக்கிலும் வந்தது திருகி
மூடும் அமைப்புடன் மூடி இருப்பதால் திருகு சொம்பு எனப்படும் இதில் உள்ளே ஒரு
குவளையும் இருக்கும்
உப்புத் தட்டு( படம் கிடைக்கவில்லை )
கல் உப்பு
முன்பெல்லாம் கல் உப்புதான் பயன்பாட்டில் இருந்தது .இப்போது
கிடைக்கும் கல் உப்புபோல் இல்லாமல் ஒழுங்கற்ற உருவத்தில் இருக்கும் அதில்
நீர்க்கசிவு இருக்கும் .எனவே மரத்தில் செய்த உப்புத்தட்டில் உப்பை வைப்பார்கள் .
தள்ளித் திறக்கும் (sliding) மூடியுடன் இருக்கும்
ஊறுகாய் சாடி
செராமிக் என்னும் மண்ணில் செய்யப்பட்ட இந்த சாடிகள் சிறிதும்
பெரிதுமாய் பல அளவுகளில் இருக்கும்
குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான ஊறுகாயை வீட்டிலேயே செய்து
இந்தச் காடிகளில் பாதுகாப்பாக வைப்பார்கள்
இப்போது எளிதாக கடையில் ஊறுகாய் வாங்கி விடுவதால் சாடிக்கு வேலை இல்லை
உப்பு, புளி வைக்கவும் இந்த சாடிகள் பயன்படும்
மீண்டும் அடுத்த வாரம்
Blog
Address
sherfuddinp.blogspot.com
B/FB 13092018
No comments:
Post a Comment