பயன்பாட்டில் இருந்து, இப்போது மறந்து மறைந்து போன இன்னும் சிலவற்றை
இப்போது பார்ப்போம்
குதிர்
நெல் என்றாலே தெரியாதவர்கள் குதிரைப் பார்த்தோ, அந்த சொல்லைக் கேட்டோ
இருக்க முடியாது
நெல்லை பாதுகாத்து வைக்கும் மிகப்பெரிய மண் பானைதான் குதிர் (Granary ). அடியில்
சிறுத்தும் நடுவில் பெருத்தும் மேலே சற்று குறுகியும் மூடி போட்ட வாயுடன்
இருக்கும்
காற்றுப்போவதற்காக குதிரின் அடிப்பகுதியில் ஒரு துளை(Hole)
இருக்கும். அதற்குள் எலி(Mouse)
நுழைந்து விடும்
நெல்லின் அளவு, தேவைக்கேற்ப குதிர் பல அளவுகளில் பல வடிவங்களில் இருக்கும்.
இங்கு சொன்னது வீட்டில் இருக்கும் குதிர்
திருகை
,, உளுந்து(Black
Gram ) போன்ற பயிறு வகைகளை (Pulses) உடைக்கவும்
அரிசி மாவு அரைக்கவும் பயன் படுவது திருகை..
Dry grinder
/ mixi என்று சொல்லலாம்
திருகை கல்லினாlல் (Stone) ஆனது. ,
வட்டவடிவில் இருக்கும்
மேலும் கீழும் என இரண்டு பகுதிகளாக இருக்கும் . கீழ் பகுதியின்
நடுவில் ஒரு கம்பு (Stick) இருக்கும்
.
மேல் பகுதியில் அந்தக் கம்பில் பொருந்தும் அளவில் ஒரு துளை (Hole) இருக்கும்
..அதில் கைப்பிடியாக (Handle)
ஒரு கம்பு (Stick)
இருக்கும் .
துளை வழியே அரைக்க வேண்டியதை போட்டு
கையினால் சுற்ற வேண்டும் .மின்சாரம் தேவை இல்லை
அடிக்கடி வரும் மின்தடையால் அம்மி, (Grindstone)
, ஆட்டுக்கல்( Wet Grinder) ஓரளவு
பயன்பாட்டில் உள்ளது .எனவே அவை பற்றி விளக்கவில்லை
அம்மி ,ஆட்டுக்கல், திருகை இவைஎல்லாம் பயன்படுத்தும்போது உடலுக்கு
நல்ல பயிற்சியாக இருப்பதால் உடலும் உள்ளமும் நலமுடன் இருக்கும் .தனியாக காசு செலவு
செய்து உடல் பயிற்சி கூடம் போக வேண்டியதில்லை
நீர் நிலைகளில் போய் பெண்கள் வீட்டுக்குத் தேவையான தண்ணீரை தலையில்
ஒரு குடமும் இடுப்பில் ஒரு குடமும் சுமந்து நடந்து வருவார்கள். இதனால் கொடி இடையுடன் கூடிய மிக
அழகான வடிவான உடலமைப்பும் நிமிர்ந்த நன்னடையும் கிடைக்கும்
உரல் உலக்கை போன்ற இன்னும் சில பொருட்கள்
அடுத்தவாரம் அடுத்த பகுதியில்
Blog
Address
sherfuddinp.blogspot.com
B/F 06092018
.
No comments:
Post a Comment