அழகின் ஈர்ப்பு
ஊரெங்கும் இதே பேச்சு . ஒரு பெண் வழி தவறிவிட்டார், ---இதை விட சுவையான செய்தி உலகத்தில் வம்பு பேச கிடைக்குமா !
நாலுபேர் கூடினாலும் நாற்பது பேர் கூடினாலும் தெரு முனையில், வீடுகளில் ,கடைததெருவில் எங்கும் இதே பேச்சு .செய்தி காட்டுத்தீயை விட படு வேகமாமாக நுண்ணுயிர் வேகத்தில் பரவியது
பேச்சில் அடிபட்டுத் துவைக்கப்பட்டது ஒரு சாதாரணப் பெண் அல்ல . ஊர்த் தலைவியின் துணைவி என்பது பேச்சுக்கு இன்னும் விறுவிறுப்பு கூட்டியது
தவறியது பணியாளரிடம் என்பது கூடுதல் தகவல்- கூடுதல் விறுவிறுப்பு –குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகப்பரவலாகப் பேச்சு
பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மிக மிக வருந்தினார் ...சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறும் நிலைக்குப் போனது உண்மைதான் ஆனால் தவறவில்லை யாரும் தவறு செய்ய நேரும் ஒரு சூழ்நிலை
இதை எல்லோருக்கும் விளக்கி தன் மேல் பூசப்பட்ட களங்கம் எனும் சேற்றை நீக்கி தூய்மை அடைய விரும்பினாள் தலைவி ( தலைவன் மனைவி)
பலவாறாக சிந்தித்து ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார் அவர். அந்த விருந்துக்கு ஊரில் உள்ள பெரிய குடும்பத்துப் பெண்கள் அனைவரையும் அழைத்தார்
எல்லோரும் வந்து விருந்துண்டார்கள் . சாப்பிட்டது செரிக்க பழமும் பழத்தை நறுக்க கத்தியும் கொடுக்கப்பட்டது
ஆனால் யாருமே பழத்தை நறுக்கவில்லை
ஏன் ! என்ன ஆனது !!
அடுத்த வாரம் பார்ப்போமே
Blog Address
sherfuddinp.blogspot.com
B/F 14092018
No comments:
Post a Comment