Sunday, 9 September 2018

வண்ணச் சிதறல் 31 சாவித்திரி கணேசன் 3




சாவித்திரி கணேசன் 3


சாவித்திரி கணேசன் சொத்து பற்றி விட்டுச்சென்ற ஆவணத்தை வங்கியில் இருந்து எடுத்து வழக்கறிஞர் எல்லோர் முன்னிலையிலும் பிரித்து படிக்கத் துவங்கியதை சென்ற பகுதியில் பார்த்தோம்
இனி அந்த ஆவணத்தில் என்ன எழுதி இருந்தது என்று பார்ப்போம் . பல பக்கங்களைக் கொண்ட ஒரு நீண்ட ஆவணமாக இருந்த அதன் சுருக்கமான கருத்து :

--அசையும் அசையா சொத்துக்கள் எல்லாம் முழுக்க முழுக்க நான் என் துணைவியின் ஒத்துழைப்போடு சுயமாகப் பொருள் ஈட்டி வாங்கியது
-- வேறு யாருக்கும் எவருக்கும் இதில் எந்தப் பங்களிப்பும் இல்லை . ஒரு ரூபாய் கூட யாரும் கொடுத்தும் இல்லை  நான் கேட்டு வாங்கியதும் இல்லை
-- அரசல்புரசலாக சில செய்திகள் காதில் விழுந்ததால்தான் இதை குறிப்பிட்டு  சொல்கிறேன்
-- நான் எளிய நிலையில் இருந்து உழைப்பால் ஒரு நிலைக்கு வந்தவன்
-- அந்த உழைப்பு என் மக்கள் யாரிடமும் இல்லை .அரசுப்பணியில் இருப்பவரைத் தவிர மற்ற யாரும் நான் எதிபார்த்த அளவுக்கு படிக்கவும் இல்லை உழைத்து முன்னேறவும் இல்லை
--சிலர் செய்யும் தொழில் எனக்குப் பிடிக்கவில்லை
-- நான்கு வீடுகளின் சந்தை மதிப்பு நான்  நினைத்ததை விட மிகப் பன்மடங்கு உயர்ந்துள்ளது
-- இவ்வளவு பெரிய தொகை கையில் கிடைத்தால் அது மேலும் உழைக்கும் ஆர்வத்தைக் குறைக்கும் , .வேண்டாத முதலீடுகளில் ஈடுபடச் செய்யும்
--எனவே சாவித்திரியும் நானும் பலமுறை சிந்தித்து பிள்ளைகள் நலன் கருதி ஒரு ஏற்பாடு செய்யத் துணிந்தோம்  
--அந்த ஏற்பாட்டின்படி வீடுகளின் விலை மதிப்பை பத்து பங்காகப் பிரிக்க வேண்டும்
--பத்தாவது பங்குதாரர்  என் காலத்தில் நான் நிறுவ விரும்பி முடியாமல் போன ஒரு கல்வி அறக்கட்டளையாகும்  
--இந்தப் பத்து பங்குதாரர்களும் தங்களுக்கு கிடைக்கும் சொத்து மதிப்பில் இருபது விழுக்காட்டை ஒதுக்கி அதை முதலீடாகக் கொண்டு ஒரு வணிக நிறுவனம் துவங்க வேண்டும் .வணிகம் என்பது வணிகம் அல்லது தொழில அல்லது சேவை நிறுவனமாக இருக்கலாம் ( Trade/ industry /service)
--சட்டம் அனுமதித்தாலும் நீதி அனுமதிக்காத மது, சூது, புகையிலை , வட்டி, ,வீணான பொழுதுபோக்கு, அவசியப் பொருட்களைப் பதுக்குதல்,இயற்கை வளங்களை சுரண்டும் தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. நிறுவனம் மிக நேர்த்தியாக நீதமான லாபத்துடன் செயல்பட் வேண்டும்
--ஆண்டு தோறும் கணக்குப் பார்த்து வரும் லாபத்தில் பத்து விழுக்காடு அறக்கட்டளைக்குப் போகும்
--அறகட்டளை சாதி, மத மொழி பேதம் பாராமல் கல்விக்கு உதவி செய்யவேண்டும் , .உதவித்தொகை  அல்லது வட்டி இல்லாக் கடனாக கொடுக்கலாம்
--மிகக்குறைந்த கட்டணத்தில் ஒரு மழலையர் பள்ளி துவங்கி ஒவ்வொரு ஆண்டும் வகுப்புக்களைக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் .மிகத் தரமான கல்வி வழங்கப்படவேண்டும் .பள்ளி கல்லூரியாக கல்லூரி பல்கலைக்கழகமாக வளர வேண்டும்
இந்த ஏற்பாட்டுக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன், என் பங்கைப் பிரித்துக் கொடுத்துவிட்டால் நான் எதாவது செய்து என் பிழைப்பை பார்த்துக்கொள்வேன் என்று எண்ணுபவர்கள், சொல்லுபவர்கள் அவர்கள் விருப்பம் போல் விலகிக்கொள்ளலாம்
அவர்களுக்கு அவர்களது  சொத்துமதிப்பில் பாதிதான் கிடைக்கும் மீதிப்பாதி அறக்கட்டளைக்கு சொந்தமாகும்
--இன்றில் இருந்து பதினைந்து மாதங்களுக்குள் வணிக நிறுவனம், அறக்கட்டளை  துவங்கும் பணிகள் நிறைவு செய்யப்படவேண்டும்
--மிகச் சரியான காரணம் இல்லாமல் கால தாமதமானால் சொத்து முழுதும் அறக்கட்டளைக்குப் போய் விடும்
--இதை செயல் படுத்தும் பொறுப்பை என் நண்பர் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கிறேன் . அதற்குள்ள ஊதியத்தை அவருக்குக் கொடுத்து விட வேண்டும்  
--முழுக்க முழுக்க என் மக்கள் மருமக்கள் பேரன் பேத்திமார் இன்று மட்டும் அல்ல என்றுமே நலமாக வாழவேண்டும், பாடு பட்டு சம்பாதித்த சொத்து நல்ல வழியில் பயன்பட்டு குடும்பப் பெயர் நிலத்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் , விருப்பம் , நோக்கத்தில்தான் இந்த ஏற்பாடு..
--நம் குடும்பத்தினர் அனைவரும் இந்த ஏற்பாட்டுக்கு முழு மனதோடு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன்

வழக்கறிஞர் படித்து முடித்து விட்டார். யார் முகத்திலும் ஈயாடவில்லை ,ஒரு இறுக்கமான அமைதி நிலவியது

சிறிது நேரத்தில் அமைதி குலைந்து சலசலப்பு .
செத்தும் கெடுத்த சீதக்காதி ஆகி விட்டார் அப்பா

சொத்தே சேர்க்காமல் விட்டிருக்கலாம்

என் பங்கை பிரித்துக் கொடுத்து விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்
இப்படி பலப்பல குரல்கள்

அமைதியாக இருந்த வழக்கறிஞர் சலசலப்பு அடங்காமல் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்து தெளிவான குரலில் பேசினார்

--இப்போது முதல் வீட்டு ஆவணங்களும் வீடுகளும் என் பொறுப்பில் இருக்கும் .
--நீங்கள் உங்களுக்குள் கலந்து பேசி ஒரு முடிவு பண்ணி எனக்குத் தெரிவியுங்கள்
--ஆவணத்தில் உள்ள செய்திகளை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு சொல்லும் மிகத் தெளிவாக சிந்தித்து ,தீர்க்கமாய் முடிவெடுத்து, சட்ட நுணுக்கள் அனைத்தையும் உட்படுத்தி எழுதப்பட்டுள்ளது .
--எனவே காலம் தாழ்த்தாமல் விரைவில் செயல்படுங்கள்
என்று சொல்லி, யாருடைய மறுமொழிக்கும் காத்திராமல் புறப்பட்டார்

நேற்று வரை அப்பா அம்மாவின் புகழ் பாடிய வாய்கள் வசை பாடின . புரிந்தும் புரியாமல் பல கருத்துகள் .கண்டனங்கள் இப்படி முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள்

இப்போது அரசுப்பணியில் இருக்கும் மகன், ஒரு தலைவன் போல் இருந்து பேசினார்

நம் பெற்றோரை இழிவாகப்பேசும் பேசும் தகுதி, உரிமை நம் யாருக்கும் இல்லை .

மிக அருமையான முதலீட்டு வாய்ப்பை நமக்கு வழங்கி அதற்குள்ள பணத்தையும் அவர்களே கொடுக்கிறார்கள் .செத்தும் கொடுத்த (கெடுத்த அல்ல ) சீதக்காதிகள்

உங்கள் யாருக்கும் நமக்கு கிடைக்கப்போகும் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்பது சரியாக விளங்கவில்லை 
.,
பத்து பங்கு வைத்து அதில் இருபது விழுக்காடைப் பிடித்துக்கொண்டு பிறகு வருவதே நாம் நினைத்துப்பார்க்காத பெருந்தொகையாகும்
மேலும் யாருக்கும் தங்கள் பங்கில் பாதியை இழக்க மனம் ஒப்பாது ,எனவே எல்லோரும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்

இனி நாம் செய்யவேண்டியது வழக்கறிஞர் சொன்னது போல் கால விரயம் இன்றி  முடிந்தால் இன்றே இப்போதே கலந்து பேசி என்ன தொழில் எப்படி என்பதை தீர்மானிக்கலாம் -

இப்போது  சலசலப்பு ஓய்ந்து அமைதி நிலவியது

மீண்டும் அவரே தொடர்ந்தார் :
ஒரு உணவகம் தொடங்கலாம் என்பது என் கருத்து .சுத்தம், சுவை, கனிவான உபசரிப்போடு குறைந்த விலையில் நிறைவான உணவு என்ற நோக்கத்தின் அடிப்படையில் அது இயங்க வேண்டும்

இதற்கான ஏற்பாடுகளை செய்ய நான் தேவைபட்டால் சில மாதங்கள் விடுப்பு எடுத்து ஈடு படுகிறேன் , இதற்கான உங்கள் சம்மதத்தை எனக்கு எழுத்து மூலம் கொடுக்க வேண்டும் . இதற்காக எனக்கு ஊதியம் எதுவும் எனக்கு வேண்டாம் ,ஆகும் செலவுகளை எல்லோரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் 
அதுபோக ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இந்தப் பணிக்கு ஒதுக்கி முழு மனதோடு உழைக்க வேண்டும்
என்று சொல்லி அமர்ந்தார்

அவருடைய திறமை, உழைப்பு, நேர்மை அவருக்குள்ள தொடர்புகள்  பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் யாரும் அவருக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை

பிறகென்ன பணிகள் விரைவாக நடந்தன .உணவகம், அறக்கட்டளை, மழலையர் பள்ளி எல்லாம் ஓராண்டுக்குள் துவக்கப்பட்டன

இத்துடன் இந்தபகுதியும் சாவித்திரி கணேசன் கதையும் நிறைவுறுகின்றன

பின்கதை – பத்து ஆண்டுகள் கழித்து
சுத்தம் சுவை கனிவு என்பதையே பெயராகக் கொண்டு துவக்கப்பட்ட ஒரு உணவகம் ஆல மரம் போல் பரந்து விரிந்து நூறு கிளைகள் கொண்ட ஒரு அமைப்பாக உருவாகிவிட்டது
உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டு சிறப்பாக செய்லபடுகிறது
பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை வந்து, ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள் .அறக்கட்டளையும் தன் பணியை செவ்வனே செய்து உலக அளவில் பெயர் பரவி நிற்கிறது
சாவித்திரி கணேசன் கண்ட கனவு  இறைவன் அருளால் நனவாகிவிட்டது
எனக்கும் கதையை நல்ல விதமாக நிறைவு செய்த மகிழ்ச்சி

இ(க)டைச்செருகல்
இந்தகதையின் சென்ற இரண்டு பகுதிகள் பற்றி பெரிதாக கருத்து எதுவும் வரவில்லை ..குறைகளையாவது தெரிவியுங்களேன்

மூளைக்கு வேலை
தலை முடிக்கு வர்ணம் (Hair Dye )  முதன் முதலாக யாருக்குப் பூசப்பட்டது ?
இதுதான் சென்ற வார வினா
இது வரை யாரும் விடை சொல்லவில்லை
நபி மூசா(அலை) அவர்களின் எதிரியான கொடுங்கோல் மன்னன் பிர் அவுன் என்பதே சரியான விடை

இனி இந்த வார வினா
திரு மறை குர் ஆனில் நபி மூசா அவர்களின் பெயர் 135  முறை வருகிறது (அதிக அளவில் வருவது இதுதான் )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் குர்ஆனில் எத்தனை முறை வருகிறது ?

இறைவன் நாடினால்
மீண்டும்
                     சந்திப்போம்


Blog  Address
sherfuddinp.blogspot.com



B/FB/W        09092018




  
 . .. .. .

--[08:03, 9/10/2018] noor 2: ஏற்கெனவே நம் பல குடும்பங்களில் நடந்நது கோண்டிருக்கும் சொத்துப் பிரச்னை சண்டைகளில் மண்டைகாய்ந்து  போயிருக்கும் நமக்கு இந்தத் தலைவேதனை வேறு வேண்டுமா? என்பது என் அபிப்ராயம். மற்றவர்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. தவறாக நினைக்காதே
[08:47, 9/10/2018] Sherfuddin Peermohamed: புரியவில்லை
[10:32, 9/10/2018] noor 2: இது புதிதான செய்தியாக இருந்தால் interest ஆக இரூக்கும். ஆனால் சொத்து விவகாரம் நம் வீடுகளில் கேட்டுக் கேட்டு புளித்துப் போன விஷயமாயிற்றே அதைத்தான் குறிப்பிட்டேன். ஒன்றாய்ப் பிறந்த  சகோதரர்கள் தாய் பிள்ளைகள் உறவையே வேறுபடுத்திவிடும் விஷமாக இருக்கிறதே அதைத்தான்‌ சொல்கிறேன்.. வேறோன்றுமில்லை.ற
[10:35, 9/10/2018] Sherfuddin Peermohamed: நான் எழுதியது கதைதான்
பலர் பாராட்டி குறிப்பாக முடிவு மிக நன்றாக இருப்பதாய் எழுதியிருக்கிறார்கள்
[16:49, 9/10/2018] noor 2: யாரும் இதைப்பற்றி ஒருcommentம் சொல்லவில்லையே என்று கூறியதால் தான் அப்படி இருக்கலாம் என்று கூறினேன். எல்லோரும் பாராட்டினார்கள் என்றால் மகிழ்ச்சிதானே
[11:36, 9/11/2018] noor 2: நானும் உன் எழுத்துக்கு ரசிகைதான்
[11:53, 9/11/2018] noor 2: எனக்கு அமைதியாக உட்கார்ந்து உன்னைப்போல் எழுத நேரம் கிடைக்கவில்லை.  Fully engaged through life. What can I do. Whatever may be the case I am fully satisfied and enjoying  this type of life. Life is to be lived. Not to be spoiled
[
[13:24, 9/11/2018] Sherfuddin Peermohamed: அமைதியான ஓய்வு என்பது ஒரு வரம்
உங்களைப்போல் உழைக்க என்னால் முடியாது தேவையும் இல்லை
கிடைத்த ஒய்வை வீணாக்காமல் தொழுகை வணக்கம் இறைதியாணம் குர் ஆன் பொருள் அறிந்து ஒதுதல் என்று பொழுதைக் கழிக்கின்றேன்
பணி ஓய்வு பெற்றதில் இருந்த இன்று வரை ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்று வருகிறேன்
தமிழிலும் ஆங்கிலத்திலும் தினமும் முக நூலிலும் கட்செவியிலும் எழுதுகிறேன்
இதற்கிடையில் வரும் நோயாளிகளுக்கு மருந்தில்லா மருத்துவ ஆலோசனை சொல்கிறேன்
But I am not fully  engaged like you
 நீங்கள் ரசிக்கும் அளவுக்கு என் எழுத்து அமைந்தது இறைவன் அருள்



1 comment:

  1. [08:03, 9/10/2018] noor 2: ஏற்கெனவே நம் பல குடும்பங்களில் நடந்நது கோண்டிருக்கும் சொத்துப் பிரச்னை சண்டைகளில் மண்டைகாய்ந்து போயிருக்கும் நமக்கு இந்தத் தலைவேதனை வேறு வேண்டுமா? என்பது என் அபிப்ராயம். மற்றவர்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. தவறாக நினைக்காதே
    [08:47, 9/10/2018] Sherfuddin Peermohamed: புரியவில்லை
    [10:32, 9/10/2018] noor 2: இது புதிதான செய்தியாக இருந்தால் interest ஆக இரூக்கும். ஆனால் சொத்து விவகாரம் நம் வீடுகளில் கேட்டுக் கேட்டு புளித்துப் போன விஷயமாயிற்றே அதைத்தான் குறிப்பிட்டேன். ஒன்றாய்ப் பிறந்த சகோதரர்கள் தாய் பிள்ளைகள் உறவையே வேறுபடுத்திவிடும் விஷமாக இருக்கிறதே அதைத்தான்‌ சொல்கிறேன்.. வேறோன்றுமில்லை.ற
    [10:35, 9/10/2018] Sherfuddin Peermohamed: நான் எழுதியது கதைதான்
    பலர் பாராட்டி குறிப்பாக முடிவு மிக நன்றாக இருப்பதாய் எழுதியிருக்கிறார்கள்
    [16:49, 9/10/2018] noor 2: யாரும் இதைப்பற்றி ஒருcommentம் சொல்லவில்லையே என்று கூறியதால் தான் அப்படி இருக்கலாம் என்று கூறினேன். எல்லோரும் பாராட்டினார்கள் என்றால் மகிழ்ச்சிதானே
    [11:36, 9/11/2018] noor 2: நானும் உன் எழுத்துக்கு ரசிகைதான்
    [11:53, 9/11/2018] noor 2: எனக்கு அமைதியாக உட்கார்ந்து உன்னைப்போல் எழுத நேரம் கிடைக்கவில்லை. Fully engaged through life. What can I do. Whatever may be the case I am fully satisfied and enjoying this type of life. Life is to be lived. Not to be spoiled
    [
    [13:24, 9/11/2018] Sherfuddin Peermohamed: அமைதியான ஓய்வு என்பது ஒரு வரம்
    உங்களைப்போல் உழைக்க என்னால் முடியாது தேவையும் இல்லை
    கிடைத்த ஒய்வை வீணாக்காமல் தொழுகை வணக்கம் இறைதியாணம் குர் ஆன் பொருள் அறிந்து ஒதுதல் என்று பொழுதைக் கழிக்கின்றேன்
    பணி ஓய்வு பெற்றதில் இருந்த இன்று வரை ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்று வருகிறேன்
    தமிழிலும் ஆங்கிலத்திலும் தினமும் முக நூலிலும் கட்செவியிலும் எழுதுகிறேன்
    இதற்கிடையில் வரும் நோயாளிகளுக்கு மருந்தில்லா மருத்துவ ஆலோசனை சொல்கிறேன்
    But I am not fully engaged like you
    நீங்கள் ரசிக்கும் அளவுக்கு என் எழுத்து அமைந்தது இறைவன் அருள்

    ReplyDelete