Thursday, 20 September 2018

தமிழ் (மொழி) அறிவோம் 13 வெற்றிலைப்பெட்டி




வெற்றிலைப்பெட்டி 

 Image result for வெற்றிலைப்பெட்டி


பயன்பாட்டில் இருந்து மறந்து மறைந்து போன இன்னும் சில பொருட்களைப் பார்ப்போம்

வெற்றிலைபெட்டி- (வெத்தலைப்பெட்டி)
வெற்றிலை போடும் பழக்கம் மெதுவாக மறைந்து வருகிறது .வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு அளவாக சுவைத்தால் உணவு நன்கு செரிக்கும் .பாக்கை மெல்ல முடியாத மூத்தவர்கள் சிறிய உரலில் வைத்து இடித்துப் போடுவார்கள் 

 Image result for வெற்றிலை உரல்
 வெற்றிலை உரல்
 Image result for வெற்றிலை உரல்
 வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்கை, கிராம்பு இதெல்லாம் வைக்கத் தனித்தனி அறைகள் கொண்ட பெட்டிதான் வெற்றிலைப்பெட்டி . அவரவர் செல்வ நிலைக்கேற்ப ஓலை, பித்தளை, வெள்ளி, தங்கம் என்று பலவாறாக பெட்டி வைத்திருப்பார்கள் 
.
வெற்றிலைப்பெட்டியை சுமந்து வரவும், வெற்றிலை மடித்துத் தரவும் செல்வந்தர்கள் ஒரு பணியாளை வைத்திருப்பர்கள் .- அடைப்பக்காரன் என்று பெயர் .

செட்டி நாட்டு அலங்கார வெற்றிலைப்பெட்டி ஓன்று வெளிநாட்டில் பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் போனதாக ஒரு செய்தி படித்திருக்கிறேன்

நான் பார்த்த ஒரு வெற்றிலைப்பெட்டி அன்னப்பறவை (Swan) வடிவில் இருக்கும் .அதன் கழுத்தை திருகினால்  சிறகுகள் இரண்டும் திறக்கும்  உள்ளே சிறிய பெட்டிகள் இருக்கும் 

மறைந்து போன நல்லவற்றில் ஓன்று வெற்றிலை போடுவது
அது பற்றி நிறைய எழுதலாம் . இப்போது வேண்டம் 


பாக்கு வெட்டி (nut cracker )

 Image result for பாக்கு வெட்டி
முழுதாக இருக்கும் கொட்டைப்பாக்கை சீவலாக வெட்ட உதவும் கருவி .இரண்டாம் வகை நெம்புகோlலுக்கு( 2nd Type of lever)  எடுத்துக்காட்டாக அறிவியல்-இயற்பியல் (Physics) பாட நூலில் வரும் 

 Image result for வெற்றிலை உரல்
 கொட்டைப்பாக்கு ,சீவல்
பணிக்கம் 
 Image result for பணிக்கம்

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பணிக்கங்கள் விருந்துகளில் கை கழுவவும் வெற்றிலை போட்டுத் துப்பவும் பயன் படும் 

பாதாள கரண்டி

 Image result for பாதாள கரண்டி

சமையலுக்கும் இந்தக் கரண்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை 
வீட்டுகுக் வீடு இருந்த  கிணறு (Well) இப்போது ஆழ்துளை கிணறாக (Bore well) மாறிவிட்டது
எனக்குத் தெரிந்து காரைக்குடியில் எங்கள் வீட்டில் கிணறு இருந்தது .அப்படி ஒரு சுவையான நீர் .
கிணற்றில் விழுந்த பொருட்களை எடுக்கப்பயன்படும் ஒரு கருவி பாதாள கரண்டி நிறைய கொக்கிகள் இருக்கும்
இதை கிணற்றில் போட்டு விழுந்த பொருளை எடுப்பது ஒரு சுவையான நிகழ்வு .அக்கம் பக்கமெல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்க்கும் ..நாம் தேடிய பொருள் போக , எப்போதோ கிணற்றில் விழுந்த பொருட்களும் கிடைக்கும் 

 Image result for பாதாள கரண்டி
 கிணறு
இளமை நினைவுகளை மலர வைக்கும் பழைய பொருட்கள் பலவற்றை பல பகுதிகளில் பார்த்தோம் எனக்கே போதும் என்று தோன்றுகிறது 

அடுத்த பகுதியில் வேறு எதாவது  பார்ப்போம்

Blog address
sherfuddinp.blogspot.com

B/F 20092018

No comments:

Post a Comment