இமைக்கா நொடிகள்
திரைப்படங்கள் மிக அதிகமாக நான் பார்த்த காலம் ஓன்று உண்டு .
திருநெல்வேலியில் நிறைய திரை அரங்குகள்,; வங்கியில் ஒரு நல்ல நண்பர் வட்டம் .வரும்
எல்லாத் திரைப்படங்களையும் தவறாமல் பார்த்து விடுவோம்
இப்போதெல்லாம் மிக அரிதாகவே படங்கள் பார்க்கிறேன்
இப்போதெல்லாம் மிக அரிதாகவே படங்கள் பார்க்கிறேன்
ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் அண்மையில் திரைஅரங்கில் படம் பார்க்க வேண்டியதாயிற்று .மகன் மகள் குடும்பத்துடன் படம் பார்க்க முன்பதிவு செய்திருக்க , பேரன் இந்த மாதிரி கேள்விப்படாத படத்துக்கெல்லாம் நான் வரமுடியாது என்று உறுதியாகச் சொல்ல நூற்றி எண்பது ரூபாய் வீணாகக் கூடாதே என்பதற்காக நானும் படத்துக்குப் போனேன் படம் இமைக்கா நொடிகள்
நான் படம் பார்க்காமல் தூங்கி விட்டால் எழுப்ப வேண்டாம் .என்று என்
குடும்பத்தாரிடம் சொல்லியிருந்தாலும் ஒரு நொடி கூட தூங்க வில்லை படம் அவ்வளவு
விறுவிறுப்பாக நல்ல கதை அமைப்புடன் இருந்தது .நாயகன் நாயகி எல்லாம் நயன்தாராதான்
சொல்ல வந்த செய்தியை விட்டுத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறேன்
தமிழ் இலக்கணம் என்றால் எனக்கு வேப்பங்காய் அளவுக்குப் பிடிக்கும்
.தேமா, தேமாங்காய், தேமாங்கனி, புளிமா,புளிமாங்காய், புளிமாங்கனி என்று என்னென்னமோ
சொல்வார்கள் . ஒன்றும் மண்டையில் ஏறாது
.
.
அடுத்து இலக்கணக்குறிப்பு
.ஈறு கெட்ட எதிர் மறைப் பெயர் எச்சம் என்று ஒரு நீண்ட சொற்றொடர் இது காதில் விழும்போதெல்லாம் ஈறு கெட்டால் பல்
மருத்துவரிடம் போய்த் தொலைய வேண்டியதுதானே நம் உயிரை ஏன் எடுக்கிறார்கள் என்று
எண்ணுவேன்
ஆர்கிமிடிஸ் குளித்துக்கொண்டிருக்கையில் ஒரு தெளிவு பிறந்து யுரேக்கா என்று கூவிக்கொண்டு ஓடினார்
என்று படித்திருக்கிறேன், .அதேபோல் படம் முடிந்து வீடு திரும்புகையில் என் பேத்தியிடம் (கல்லூரி மாணவி) ஈறு கெட்ட
எதிர் மறைப் பெயர் எச்சம் என்றால் தெரியுமா என்று கேட்டேன் .இது போல் புரியாத
மொழியெல்லாம் பேசி என்னைக் குழப்பாதீர்கள் என்று பேத்தி சொல்ல அதற்காக விட்டு விட
முடியுமா ? படிக்கும்போது புரியாமல் இருந்து இப்போது கிடைத்திருக்கும் இலக்கணத்
தெளிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது
இமைக்காத நொடிகள் என்பதில் இமைக்காத எனபது இமைக்கா என்று வருகிறது .
இறுதி எழுத்தான து என்பது தொலைந்து போகிறது , ஈறு என்றால் இறுதி
என்று பொருளாம் ..கெட்டு என்றால் விட்டுப்போனது , தொலைந்து போனது என்று பொருள்
இமைக்காத என்று எதிர் மறை (negative) பொருளில் வருகிறது . மேலும் நொடிகள் என்ற பெயர்ச் சொல்லுக்கு
விளக்கமாக வரும் செயல் முடியாத ஒரு சொல்லாக வருகிறது (செயல் நிறைவுற்றால் முற்று
.முடியாவிட்டால் எச்சம் )
எனவே ஈறு கெட்ட எதிர் மறைப்பெயர் எச்சம்
எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டுகள்
ஓடா மான் (ஓடாத மான் ) பாயா
நதி (பாயாத நதி)
இந்த இலக்கணக்குறிப்புக்கு எங்கேயோ கேட்ட ஒரு குறுக்கு வழியும்
நினைவில வருகிறது
எடுத்துகாட்டில் குறிப்பிட்டது போல் ஓடா மான், , பாயா நதி என் இரு சொற்கள் வந்து
முதல் சொல்லின் இறுதி எழுத்து ஆ ஒலியில் டா, யா,என்று இருந்தால் தயங்காமல்
ஈ.கெ.எ.ம.பெ.எ என்று இலக்கணக்குறிப்பு எழுதி விடுங்கள் ஒன்றோ இரண்டோ அத்ற்குள்ள
மதிப்பெண் முழுதாய்க் கிடைத்து விடும்
உண்மையிலேயே இதன் பின்னணி எனக்குப் புரியவில்லை . பதினாறு பதினேழு
வயதில் படித்துப் புரியாமல் போனது ஐமபது ஆண்டுக்குப் பின் எப்படி புரிகிறது ?
ஒருவேளை என் பள்ளிப்பருவத்திலேயே இது போன்ற பெயர் உள்ள படங்கள்
வந்திருந்தால் அப்போதே புரிந்து நல்ல மதிப்பெண் எடுத்திருக்கலாமோ!
உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்கள்
Blog
address
sherfuddinp.blogspot.com
B/F
27092018
No comments:
Post a Comment