10 கட்டளைகள்
மூசா நபி(அலை) அவர்கள் வரலாற்றில் சிறு பகுதியை மிகச் சுருக்கமாக
சென்ற மூன்ற பகுதிகளில் பார்த்தோம்
மிக நீண்ட வரலாறு அது . முன்பே நான் குறிப்பிட்டது போல் வரலாறு
முழுவதையும் தருவது என் நோக்கம் அல்ல .
இருந்தாலும் எடுத்ததை நிறைவு செய்ய வேண்டும் அல்லவா ?
அதனால் நபியின் வாழ்க்கை பற்றி சில குறிப்புகள் ,அவரின் சிறப்புகள்
பற்றி இந்தப்பகுதியில் சொல்கிறேன்
பெயர் காரணம்
மூசா MOSES
ஹீப்ரு மொழியில் ‘மூ’ என்றால், தண்ணீர் என்று பொருள். ‘ஷா’ என்றால் மரம் என்று பொருள். அரபு மொழியில் மூஷா என்ற பெயர் மருவி மூஸா என்று
ஆகிவிட்டதாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.
திரு மறை
குர்ஆனில் மிக அதிகமாக பெயர் சொல்லப்படும் நபி மூஸா (அலை) ஆகும். 135 முறை அவர் பெயர் வருகிறது
நபி முகமது
ஸல் அவர்கள் பெயர் ஆறு முறை வருகிறது
தவ்ராத் (Torah) என்ற வேதம்
மூசா நபிக்கு இறைவன் அருளியது .அதோடு பத்துக் கட்டளைகளையும் அருளினான்
ஏக இறை
வணக்கத்தை வலியுறுத்தி உருவ வழிபாட்டை தடை செய்யும் பத்துக் கட்டளைகள் கொலை, களவு போன்றவற்றையும் தடை செய்கிறது
மூசா நபி
அவர்கள் தாம் விரும்பும்போது,,தாம் விரும்பிய இடத்தில் மரிக்கும்படியான அருளை
இறைவன் வழங்கியதாக சொல்லப்படுகிறது
மூஸா அலை அவர்கள் மறையும் போது அவர்களது வயது 123 என்றும் 150 என்றும் இரு
கருத்துக்கள் உள்ளன.
கொடுங்கோல்
மன்னன் பிர அவுனின் உடல் இன்றும் எகிப்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு
வருகிறது
வருங்கால சந்ததியினருக்கு ஒரு அடையாளமாக இதைப் பாதுகாப்பதாக இறைவன் திரு மறை குர்ஆனில் சொல்கிறான்
(10:92)
இதோடு மூசா
நபியின் வரலாற்றை நிறைவு செய்கிறேன்
அடுத்த வாரம்
வேறு கதை
Blog Address
sherfuddinp.blogspot.com
B/FB 07092018
No comments:
Post a Comment