Friday, 28 September 2018

கதைநேரம் 7 அழகின் ஈர்ப்பு 3



அழகின் ஈர்ப்பு  3


“நபியே மிக அழகான வரலாற்றை உமக்குக் கூறுகிறோம் “ என்று இறைவன் சொல்வதாக புனித குர்ஆன் அத்தியாயம் 12 யூசுப்  துவங்குகிறது

அந்த  அழகான வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம் 
பெயர்  (நபி)யூசுப் (அலை)   , யோசேப்பு , Joseph
தந்தை  நபி யாகூப் (அலை) Jacob                
ராம தேவ சித்தர் இவர்தான் என ஒரு கருtத்து பரவலாக இருக்கிறது

.யாகூப் நபி அவர்களுக்கு இரண்டு துணைவிகள் .முதல் மனைவிக்குப் பத்துப் பிள்ளைகள் ,இரண்டாவது மனைவியின் முதல் குழந்தை யூசுப் அலை .இரண்டவது குழந்தை பிறந்தவுடன் தாய் காலமாகிவிட்டார்.
தாயில்லாக் குழந்தை அதுவும் மிக அழகிய குழந்தை, என்பதால் மிக அதிகமான பாசத்தை யூசுப் அலை அவர்கள் மேல் பொழிகிறார் தந்தை. சிறுவன் யூசுப் தான் கனவில் சூரியனும் விண்மீன்களும் தனக்கு அடிபணிவதைக் கண்டதாகச் சொல்கிறார் . கனவுகளுக்கு பலன் சொல்லும் திறன் பெற்றிருந்த யாகூப் அலை அவர்கள் நபித்துவம் போன்ற ஒரு சிறப்பை இறைவன் தன் குழந்தைக்கு அருள இருக்கிறான் என்பதை உணர்ந்து மேலும் அதிக அன்பு செலுத்துகிறார்

இது மாற்றந்தாய்மக்களிடையே ஒரு அழுக்காறை உண்டாக்குகிறது. அதனால் வேட்டைக்குப் போகையில் அந்தச் சிறுவனை அழைத்துச்சென்று ஒரு கிணற்றில் போட்டு விட்டு அவர் சட்டையில் குருதியைப்பூசி தந்தையிடம் வந்து யூசுபை ஓநாய் அடித்துக்கொன்று விட்டது என்று சொல்கிறார்கள் .சட்டையில் கிழிசல் எதுவும் இல்லாததால் அவர்கள் சொல்வது பொய் என்று உணர்கிறார் தந்தை .இறைவன் நம் மகனைக் காப்பான் என்ற நம்பிக்கையில் பொறுமை காக்கிறார் தந்தை

வணிகக் கூட்டம் ஓன்று அந்தக் கிணற்றில் நீர் இறைக்க வாளியை உள்ளே விட அதைப்பிடித்துக்கொண்டு வந்த சிறுவனை சொற்ப விலைக்கு வேறு ஒரு வணிகக் கூட்டத்துக்கு விற்று விட்டது
சிறுவனின் அழகைப்பார்த்து வியந்து அவனின்  அருமை பெருமையை ஓரளவு புரிந்த அந்தக் கூட்டத் தலைவன் அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைத்தார்

சிறுவனாக அங்கு வந்து இளைஞனாக வளார்ந்த யூசுப் அலை அவர்களின் அழகில் மயங்கி அமைச்சர் துணைவி வழிதவறியதை சென்ற பகுதிகளில் பார்த்தோம் .தவறுக்கு உடன்பட   யூசுப் மறுத்து வாசலை நோக்கி விரையும்போது அந்தப்பெண் அவர் சட்டையை[ப பிடித்து இழுக்க, அந்த நேரத்தில் அமைச்சர் அங்கு வந்து விட அந்தப்பெண் யூசுப் மேல் பழி சுமத்துகிறார்

யூசுப் அவர்களின் சட்டை பின்னால் கிழிந்து இருப்பதைப் பார்த்த அமைச்சர் தவறியது தன துணைவிதான் என்பதைப் புரிந்து கொண்டாலும் இருவரின் பாதுகாப்ப்பு கருதி யூசுப் அவர்களை சிறைக்கு அனுப்புகிறார் 

.  .அந்த நாட்டு அரசன் தான் கண்ட கனவுக்கு பலன் சொல்லும் திறன் படைத்த ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தான் சிறையில் இரு கைதிகள் கனவின் கண்ட பலனை யூசுப் அவர்கள் சொன்னார்கள் என்ற  செய்தி அரசனுக்கு எட்ட  அவரை அரசவைக்கு அழைத்து அவர் சிறைக்குப் போக காரணமாய் இருந்த பெண்ணே தவறு செய்தது தான்தான் என ஒப்புக்கொண்ட பின் யூசுப் அலை அவர்களுக்கு விடுதலை அளித்தான்
பின் தன் கனவுக்கு பலன் கேட்டு, அதன் படி வரும் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ள உணவு தானியங்களை சேமித்து வைத்ததோடு நபி யூசுப் அவர்களுக்கு நிதி அமைச்சர் பதவி கொடுத்து சிறப்பித்தான் மன்னன்

``பஞ்சத்தை சமாளிக்க அரசாங்கம் எல்லோருக்கும் வழங்கிய  உணவுபொருட்களை வாங்க வந்த தன உடன் பிறப்புக்கள் பத்துப்பேரை யூசுப் நபி அடையாளம் கண்டு கொண்டார் . அனால் அவர்களுக்கு நபியைத் தெரியவில்லை

அடுத்த முறை நீங்கள் வரும்போது உங்கள் இன்னொரு தம்பியையும் (யூசுப் நபியின் தாய்க்குப் பிறந்தவர்) அழைத்து வந்தால்தான் உங்களுக்கு உணவு கிடைக்கும் என்கிறார் யூசுப் அலை
அப்படி வந்த தன் தம்பியை திருட்டுகுற்றம் சுமத்தி சிறையில் அடைக்கிறார் நபி

என் மகன் யுசுபைத் தொலைத்தது போல்  இவரையும் தொலைத்து விட்டீர்கள் என்று அழுதுகொண்டே இருக்கிறார் நபி யாகூப் அவர்கள் அழுதுஅழுது கண் பார்வை மங்கி விடுகிறது 
.
மீண்டும் பத்துப்பேரும் யூசுபிடம் போய் எங்கள் குடும்பம் மிக வறுமை நிலையில் இருக்கிறது . எங்கள் தந்தை கண் பார்வை மங்கி விட்டது . எனவே எங்களுக்கி நிறைய தானியங்கள் கொடுங்கள் என்று கேட்கிறார்குள் .உங்கள் தம்பி யூசுபை நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க அவர்கள் திகைத்துப்போய் நபியை அடையாளம் கண்டு கொண்டு நீ எப்படி இந்த நிலையில் என்று வினவ எல்லாம் இறைவன் அருள் என்று சொல்கிறார் நபி

பிறகு தன் கட்டையைக் கழட்டி கொடுத்து தந்தையின் முகத்தில் இதைத் தேயுங்கள் என்று நபி சொல்ல அப்படிச் செய்தவுடன் அவருக்கு கண் பார்வை திரும்புகிறது .பிறகு தந்தை, உடன் பிறப்புக்கள் எல்லாம் நபி யூசுப் அவர்களின் காலில் விழுந்து வணங்குகிறார்கள். அப்போது யூசப் நபி அவர்கள் தந்தையே நான் சிறு வயதில் கண்ட கனவின் பொருள் இதுதான் என்று கூறுகிறார் 

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியல்ல------நம்பிக்கை கொண்டவர்க்கு  நேர் வழியாகவும் இறைவன் அருளாகவும் இருக்கிறது  என்ற சொற்களோடு  யூசுப் சூராவை நிறைவ செய்கிறான் இறைவன் 

அதன் பிறகு யூசுப் நபி அவர்களுடன் நபி யாகூப் அவர்கள் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்

புனித குர்ஆனில் பனிரெண்டாம் அத்தியாயம் யூசுப் நபி அவர்கள் வரலாற்றை நூற்றிப்பதினொரு வசனங்களில் இறைவன் சொல்கிறான்
அதை மிகச் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன் .அப்படி சுருக்கும்போது அந்த வசனங்களில் உள்ள உயிரோட்டம், தத்துவங்கள், படிப்பினைகள் எல்லாம் மறைந்து வெறும் சக்கைதான் வருகிறது

வரலாறை முழுமையாகத் தருவது என் நோக்கம் அல்ல. குர் ஆனை எல்லோரும் பொருள் உணர்ந்து படிக்க ஒரு தூண்டுதலாக என் எழுத்து அமைய இறைவன் அருள் புரிவானாக

 மீண்டும் அடுத்த வாரம்


Blog Address
sherfuddinp.blogspot.com
B/F      28092018


No comments:

Post a Comment