அழகின் ஈர்ப்பு 2
பெண்கள் எல்லோரும் வந்து விருந்துண்டார்கள் . சாப்பிட்டது
செரிக்க பழமும் பழத்தை நறுக்க கத்தியும் கொடுக்கப்பட்டது
ஆனால் யாருமே பழத்தை நறுக்கவில்லை
ஏன் ! என்ன ஆனது !!
பெண்கள் பழத்தை நறுக்கும்
நேரத்தில் அங்கு வந்த ஒரு இளைஞனின் அழகில் சொக்கி மதி மயங்கி
எல்லாப்பெண்களும்
ஆம் எல்லாப்பெண்களும்
தங்கள் கைகளை நறுக்கிக்கொண்டனர்
இவ்வளவு அழகான இவர் மனிதப்பிறவியாக இருக்க முடியாது ,என்று ஒருமித்த
குரலில் கூறினர்
அப்போது ஊர்த்தலைவி சொன்னார்
“ஒரு சில நொடிகள் பார்த்ததிலேயே நீங்கள் அனைவரும் அவர் அழகில் நிலை
தடுமாறி விட்டீர்கள் . ஒரே வீட்டில் இவரோடு இருக்கும் நான் தடுமாறியதில்
வியப்போன்றுமில்லையே
ஆம் இவர்தான் என் மனதை பேதலிக்க வைத்த என் பணியாள். இனிமேலாவது என்னை
பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் “
இது கதையுமில்லை கற்பனயுமில்லை . ஒரு வரலாறு. என்பது பலருக்கும்
புரிந்திருக்கும்
யூசுப் நபி (அலை) அவர்களின் வரலாற்றில் ஒரு சிறிய பகுதி
நபி வரலாற்றை முழுமையாக சொல்வது என் நோக்கமல்ல . புனித குர்ஆன், அது
தொடர்பான நூல்களை எல்லோரும் படிக்க வேண்டும் . –இதற்கு தூண்டுகோலாக இருக்கவே
இந்தக் கதை நேரம் .
இருந்தாலும் நபியின் வரலாறை சுருக்கமாகச் சொல்கிறேன். அப்போதுதான் தொடர் ஒரு முழுமை அடையும்
அதற்கு முன் யூசுப் நபி (அலை) அவகளின் சிறப்புக்கள் பற்றிப்
பார்ப்போம்
உலகில் மிகவும் சங்கைக்குரிய (மதிப்பிற்குரிய ) மனிதர் யாரென்றால் நபி
யூசுப் (அலை) அவர்கள்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
.
காரணம்.
நான்கு தலைமுறையாக நபி
என்பது உலகில் வேறு எவருக்கும் கிடைக்காத
சிறப்பு
நபி இப்ராகிம் (அலை) அவர்கள் மகன்
நபி இஸ்ஹாக் (அலை) அவர்கள் மகன்
நபி யாகூப் (அலை) அவர்கள் மகன்
நபி யூசுப் (அலை) அவர்கள்
மேலும் நபி பெருமான் அவர்கள் யூசுப் அலை அவர்களின் அழகைப் பற்றி
“இறைவன் உலக மக்கள் அனைவருக்குமாக படைத்த மொத்த அழகின் அளவில் சரி
பாதியை யூசுப் (அலை) அவர்களுக்கு கொடுத்துவிட்டு மீதமிருக்கும் பாதியைத்தான் மற்ற
எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தான் “ என்று குறிப்பிடுகிறார்கள்
------------இப்ராகிமின் சந்ததியாரையும் ---------இறைவன்
அகிலத்தாரைவிட மிக மேலாகத் தேர்ந்தெடுத்தான்
என்கிறது புனித மறை குர்ஆன் (3:33)
உலகப்பொதுமறை திருக்குர்ஆனின் பனிரெண்டாவது அத்தியாயம் யூசுப்
என்பதாகும்
இந்த அத்தியயத்துக்கு சில சிறப்புகள் உண்டு
பொதுவாக குரானின் அத்தியாயத் தலைப்புகளுக்கும் அத்தியாயத்தில்
சொல்லப்படும் கருத்துக்களுக்கும் பெரிய தொடர்பு இருக்காது . அத்தியாயத்தில் வரும்
ஏதாவது ஒரு சொல்லே தலைப்பாக வரும்
ஆனால் யூசுப் அத்தியாயம் முழுதும் யூசுப் நபியின் வரலாறே
சொல்லப்படுகிறது.
மற்ற அத்தியாயங்கள் போல் அல்லாமல் ஒரு தலைப்பைப் பற்றியே முழுதுமாகச்
சொல்வது இன்னொரு சிறப்பு
நபி=பெருமான் அவர்கள் துணைவி கதீஜா பெருமாட்டி அவர்களும் , சித்தப்பா
அப்துல் முத்தலிப் அவர்களும் மறைந்த துயரில் நபி அவர்கள் இருந்தபோது அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் முகமாக இந்த
அத்தியாயத்தை முழுமையாக ஒரே தடவையில் இறைவன் இறக்கி வைத்தான்
பெரும்பாலும் மற்ற அத்தியாயங்கள் எல்லாம் பல வேறுபட்ட காலங்களில் இறக்கப்பட்ட வசனங்களின் தொகுப்பாக இருக்கும்
“நபியே மிக அழகான வரலாற்றை உமக்குக் கூறுகிறோம் “ என்று இறைவன்
சொல்வதாக இந்த அத்தியாயம் துவங்குகிறது
இப்படி இறைவனே அழகான வரலாறு என்று சிறப்பித்த அந்த வரலாறு மிகச்
சுருக்கமாக
அடுத்த வாரம் ,
Blog
Address
sherfuddinp.blogspot.com
B/F 21092018
No comments:
Post a Comment