தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 1
பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் எனப்படும் BBC லண்டனின் செய்தி அறிக்கையைக் கேட்டு நல்ல ஆங்கிலம் கற்றவர்கள் பலர் உண்டு
சரியான உச்சரிப்பு , நல்ல இலக்கணம் இவற்றை பி பி சி செய்திகளைத் தொடர்ந்து கேட்டால் அறிந்துகொள்ளலாம் எனப்பலரும் சொல்ல்க்கேட்டதுண்டு
பி பி சி தமிழோசை நிகழ்ச்சியில் மிக இனிய தமிழ் சொற்கள் காதில் விழும்
நினைவில் நிற்கும் எடுதுக்காட்டு – காற்று வாரி – (ventilator )
இலங்கை வானொலியில் கற்ற நல்ல தமிழ் சொற்கள்
செங்கம்பள வரவேற்பு (Red Carpet Welcome) நீதியரசர் (judge) இளைப்பாறிய (ஓய்வு பெற்ற)
நம்மூர் மக்கள் தொலைக்கட்சியில் கூடிய மட்டும் நல்ல தமிழ் பயன்படுத்தி வந்தார்கள் . இப்போது எப்படி என்று தெரியவில்லை
அவர்கள் பங்களிப்பில் சில :
உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) கமுக்கம் (ரகசியம் ) நிகழ்விடம்(சம்பவ இடம் )
டிஸ்கவரி போன்ற வெளிநாட்டு தொலைக் காட்சிகள் மிகத் தூய தமிழில் பேசுவது வியந்து பாராட்ட வேண்டிய ஓன்று
மற்றபடி பெரும்பாலான உள்ளூர் அலை வரிசைகள் பயன்படுத்தும் தமிழ் சொல்லிக் கொள்ளும்படி இல்லை
ல ள ழ வேறுபாடு மறைந்து வருகிறது , தமிழில் ஒரே ல தான் என்று பலர் எண்ணத்தில் பதிந்து விட்டது
அடுத்து இலக்கணத்தில் செய்வினை செயப்பாட்டு வினை
இப்போது மறந்து மறைந்து வருவது ஞ, ந, ன ண வேறுபாடு
இது தவறா சரியா என்ற குழப்பம் வருமளவுக்கு சந்திப் பிழைகள்
இந்த நிலையில் எனக்குத் தெரிந்த , புரிந்த தமிழ் இலக்கணத்தை இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க எண்ணுகிறேன்
எல்லாம் வல்ல இறைவன்தான் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் – மாணவப் பருவத்தில் தமிழ் இலக்கியம் எனக்கு ஒரு எட்டாக்கனி , இலக்கணம் எட்டிக்காய்
அதற்காக எட்டிக்காய் என்று தலைப்பு வைத்தால் படிக்கத் தோன்றாது
எனவே வேப்பங்கனி என்று போட்டிருக்கிறேன்
இந்த மூத்த வயதில்தான் இலக்கியச் சுவை கொஞ்சம் தெரிகிறது , இலக்கணம் கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது
இருந்தாலும் இப்படி ஒரு தொடரை எழுதும் ஊக்கத்தை எனக்குக் கொடுத்தது என் பேரன்தான்.
நன்றாகப் படித்து 10ஆம் வகுப்பில் பள்ளியில் இரண்டாவதாக வந்த அவன் சொன்னது
ஆங்கில இலக்கணம் புரிந்த அளவுக்கு தமிழ் இலக்கணம் மனதில் பதியவில்லை ;
எழுவாய் ,பயனிலை போன்ற துவக்க நிலை பாடம் கூட என்றான்
பிறகென்ன இதையே இன்றைய வினாவாக்கி விட்டேன்
தமிழ் இலக்கணத்தில் எழுவாய், பயனிலை ,செயப்படுபொருள் என்றால் என்ன ?
குழுவில் பெருமளவில் உள்ள தமிழ் அறிஞர்கள் “ எதற்கு இவ்வளவு எளிதான வினா ?” என எண்ண வேண்டாம்
முன்பே சொன்னது போல் இது இளைய தலை முறைக்கானது
.
மேலும் எனக்குத் தெரிந்த அளவில்தான் நான் வினா எழுப்ப முடியும்
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை வேப்பங்கனியை சுவைப்போம்
௦௯௦௮௨௦௨௨
09082022 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment