தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 4
‘செயப்படுபொருள் குன்றாவினை’
செயப்படுபொருள் குன்றிய வினை’
(Transitive verb and intransitive verb )
17082022
நேற்றைய பதிவின் நிறைவாக
‘செயப்படுபொருள் குன்றாவினை’
என்ன என்று புரிகிறதா ?
என்று கேட்டிருந்தேன்
விடையைப் பார்க்குமுன்
சரியான விடை எழுதிய
சகோ
தல்லத் – முதல் சரியான விடை
ஷர்மதா
இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
விடை, விளக்கம்
பெரிதாக குழம்பும் அளவுக்கு ஒன்றும் இல்லை
Transitive verb தமிழில் ‘செயப்படுபொருள் குன்றாவினை’
Intransitive verb தமிழில் ‘செயப்படுபொருள் குன்றியவினை’
முந்திய பதிவுகளில் செயப்படு பொருள் பற்றியும் , செய்வினை ,செயப்பாட்டு வினை பற்றியும் பார்த்தோம்
மீண்டும்
ராமு பாம்பைக் கொன்றான்
இதில் உள்ள கொன்றான் எனும் வினைச் சொல்
எதை, யாரை எனும் வினாக்களுக்கு விடையான
பாம்பு என்பதை ஏற்றுக் கொள்கிறது
எனவே இது செ. ப .பொ குன்றாவினை
இப்படி குன்றா வினை வரும் வாக்கியங்களை(வினைச் சொல்லை )
செய்வினைலிருந்து செயப்பாட்டு வினையாக மாற்றலாம்
கொன்றான் என்பது கொல்லப்பட்டது என்று மாறுவதை சென்ற பதிவில் பார்த்தோம்
ராமு இனிப்பு வழங்கினான் ,
ரம்யா பாட்டுப் பாடினாள்
இவை குன்றா வினையின் எடுத்துக்காட்டுகள்
வழங்கினான் – வழங்கப்பட்டது , பாடினாள்- பாடப்பட்டது என்று மாறும்
ஆனால்
ராமு பள்ளிக்கூடம் போனான்
ரம்யா வீட்டுக்கு வந்தாள்
இவற்றில் உள்ள போனான் ,வந்தாள் என்ற வினைச் சொற்கள் எதை, யாரை என்ற வினாக்களுக்கு விடை அளிக்காது
இவை செயப்படு பொருளை (object) ஏற்றுக் கொள்ளாத வினைச் சொற்கள்
இந்த வாக்கியங்களை செயப்பாட்டு வினையாக மாற்ற முடியாது
எனவே இவை செயப்படு பொருள் குன்றிய வினை என்று சொல்லப்படுகின்றன
சில வினைச் சொற்கள் பயன் பாட்டுக்கேற்ப குன்றாத , குன்றிய வினைச் சொற்களாக வரும்
எ-டு ----ராமு இட்லி சாப்பிடு கிறான் – குன்றா வினை
ராமு சாப்பிடுகிறான் – குன்றிய வினை
கூடிய மட்டும் சுருக்கமாக செ ப பொ குன்றிய ,குன்றா வினை பற்றி தெளிவு படுத்த முயற்சித்திருக்கிறேன்
அதன் விளைவு தாக்கம் என்ன என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்
வழக்கம் போல் நிறைவாக ஒரு எளிய வினா
படர்க்கை என்றால் என்ன ?
முழுதாக ஆறு நாள் இருக்கிறது
இளைய தலை முறை – குறிப்பாக ஆங்கில வழியில் பயின்றவர்- யாராவது விடை சொல்வார்களா ?
அவர்கள்தான் எனது இலக்குக் குழு (Target Group)
அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக நிறைய ஆங்கிலம் கலந்து எழுதுகிறேன்
(அதற்காக மற்றவர்கள் விடை அனுப்பத் தயங்க வேண்டாம். யார் அனுப்பினாலும் எனக்கு நிறைந்த மகிழ்ச்சிதான் )
குறை நிறைகளை – குறிப்பாக குறைகளை – சொன்னால் சரி செய்து கொள்ள முயற்சிப்பேன்
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை மீண்டும் 23082022 செவ்வாய் அன்று
சுவைப்போம்
௧௭௦௮௨௦௨௨
17082022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment