தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 5
தன்மை முன்னிலை படர்க்கை
படர்க்கை என்றால் என்ன ?
இது முந்திய பதிவின் நிறைவு வினா
விடையைப் பார்க்குமுன்
சரியான விடை எழுதிய
சகோ
தல்லத் – முதல் சரியான விடை
ஷர்மதா
செல்வகுமார்
மூவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
விடை, விளக்கதுக்கு முன்
படர்க்கையை நினைவூட்டும் ஒரு திரைப்படப் பெயர்
அவன் , அவள் , அது
இந்த மூன்று சொற்களும் படர்க்கையில் ஒருமை
அவன் ஆண் பால்
அவள் பெண் பால்
இவை இரண்டும் உயர்திணை
அது அக்றிணை (மடிக் கணினியில் ஆயுத எழுத்து இல்லை)
ஆங்கிலத்தில் first person, second person third person
தமிழில்
தன்மை , முன்னிலை , படர்க்கை
என்று வருகிறது
இவை இடம் என்று சொல்லப்படுகிறது
தன்னைப் பற்றிச் சொன்னால் தன்மை
நான்(ஒருமை) , நாங்கள் _(பன்மை)
தன் முன்னால் இருப்பவர் பற்றிச் சொன்னால் முன்னிலை
நீ (ஒருமை ) நீங்கள் (பன்மை )
இவை இரண்டும் அல்லாமல் வேறிடத்தில் இருப்பது படர்க்கை
அவன், அவள் அது (ஒருமை )
அவர்கள், அவை (பன்மை )
ஒருவரைக் குறிப்பது ஒருமை (singular)
ஒன்றுக்கு மேல் இருந்தால் பன்மை (Plural)
தன்மை, முன்னிலையில் பால் (gender ) வேறு பாடு இல்லை
படர்க்கை ஒருமையில் அவன் (ஆண்பால்) அவள் (பெண்பால் என இரண்டு உண்டு
இதற்கு மேல் விளக்கம் தேவை இல்லை ஏன நினைக்கிறேன்
“நீயும் நானும் வானும் மண்ணும் “
திரைப்பாடல்
சற்று மாற்றி
நானும் நீயும் வானும் மண்ணும்
என்று சொன்னால்
தன்மை , முன்னிலை படர்க்கை
வரீசையாக வருகிறது
(திரைப்படம் ஒரு மிக வலிமையான காட்சி ஊடகம்
இது பற்றிச் சொல்லும் செய்திகள் மனதில் எளிதாக பதிந்து விடும் )
மனிதர்கள் , தெய்வங்கள் தேவ தூதர்கள் இவை
உயர் திணையில் வரும்
விலங்குகள் , நாற்காலி வீடு போன்ற உயிர் இல்லாதவை
இவையெல்லாம் அக்றிணை
வழக்கம் போல் நிறைவாக ஒரு எளிய வினா
தமிழ் இலக்கணத்தில் பால் (gender) எத்தனை வகைப்படும்
இளைய தலை முறை – குறிப்பாக ஆங்கில வழியில் பயின்றவர்- யாராவது விடை சொல்வார்களா ?
அவர்கள்தான் எனது இலக்குக் குழு (Target Group)
அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக நிறைய ஆங்கிலம் கலந்து எழுதுகிறேன்
(அதற்காக மற்றவர்கள் விடை அனுப்பத் தயங்க வேண்டாம். யார் அனுப்பினாலும் எனக்கு நிறைந்த மகிழ்ச்சிதான் )
குறை நிறைகளை – குறிப்பாக குறைகளை – சொன்னால் சரி செய்து கொள்ள முயற்சிப்பேன்
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை மீண்டும் நாளை சுவைப்போம்
௨௩௦௮௨௦௨௨
23082022 செவ்வாய்
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment