Monday, 15 August 2022

தமிழ் மொழி அறிவோம் வேப்பங்கனி 3 செய்வினை ,செயப்பாட்டு வினை

 தமிழ் மொழி அறிவோம்

வேப்பங்கனி 3
செய்வினை ,செயப்பாட்டு வினை
16082022
செயலில் குரல் மற்றும் செயலற்ற குரல்
இது என்ன புதுச் சொல் ?
இது சென்ற பகுதியின் நிறைவில் நான் கேட்ட வினா
செய்வினை , செயப்பாட்டு வினையைக் குறிக்கும்
Active voice passive voice கூகிள் மொழி பெயர்ப்புதான்
செயலில் குரல் மற்றும் செயலற்ற குரல்
உண்மையிலேயே மொழியைப் பெயர்த்து விட்டார்கள்
இதை பார்க்குபோது எனக்கு சென்னை Hamilton Bridge காலப்போக்கில் பேச்சு வழக்கில் அம்பட்டன் வராவதி ஆகி
பின்னர் Barbers’ Bridge என்று மொழி பெயர்க்கப்பட்ட கதை நினைவில் வருகிறது
வினாவுக்கு சரியான விடை அனுப்பிய ஒரே சகோ
ஹசன் அலிக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
இனி செய்வினை செயப்பாட்டு வினை
ஆங்கிலத்தில் Active voice passive voice
இதை எளிதாக புரிந்து கொள்ள ஒரு எளிய எடுத்துக்காட்டு
கூட்டம் நிறைந்த ஒரு திரை அரங்கில் பாம்பு புகுந்து விடுகிறது
கேட்கவா வேண்டும் ! ஒரே கூச்சல் , குழப்பம் , அச்சம்
சிறிது நேரத்தில் பாம்பு அடித்துக் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வருகிறது
பாம்பை அடித்தவர் ராமு –
அவர் என்ன சொல்வார்
நான் பாம்பை கொன்று விட்டேன்
அவரைச் சார்ந்த மற்றவர்கள
ராமு பாம்பைக் கொன்று விட்டார் என்று பெருமை பேசுவார்கள்
இவை இரண்டிலும் அடித்தது யார் என்பது முக்கியமாக வருகிறது
இது செய்வினை Active Voice
கூட்டத்தில் உள்ள மற்றவர்களுக்கு
“பாம்பு செத்துப்போச்சு “
இதுதான் முக்கியம் . யார் அடித்தார்கள் எனபது அவர்களுக்குக் தேவை இல்லை
இங்கு செயப்பட்ட செயல் முன்னிலைப் படுத்தப்படுகிறது
இது செயப்பாட்டு வினை . Passive voice
எனக்கு நினைவு தெரிந்த நாளாய் ஆங்கிலத்தில் சொல்லப்படும் எடுத்துக்காட்டு
Rama killed the snake Active Voice
Snake was killed by Rama Passive voice
அதையே நானும் தமிழில் பயன்படுத்.தியிருக்கிறேன்
ராமன் பாம்பைக் கொன்றார் – செய்வினை Active Voice
பாம்பு ராமனால் கொல்லப்பட்டது -செயப்பாட்டு வினை Passive voice
பேச்சு வழக்கில் ராமன் பெயர் மறக்கப்பட்டு
பாம்பு கொல்லப்பட்டது /
பாம்பு செத்துப்போச்சு
என்று வரும்
இது ஓரளவு தெளிவாகி இருக்கும் என நினைக்கிறேன்
தமிழில் கொன்றார் என்பது
செயப்பாட்டு வினையில் கொல்லப்பட்டது என்று வருகிறது
ஆங்கிலத்தில் வினைச் சொல்லுக்கு மூன்று கால நிலைகள் உண்டு
Present tense (நிகழ் காலம் )
Past tense (கடந்த காலம் )
Future tense (எதிர் காலம் )
இது தமிழுக்கும் பொருந்தும்
ஆனால் ஆங்கிலத்தில் நான்காவதாக
Past Participles என்று ஓன்று இருக்கிறது
எடுத்துக்காட்டு
Give- given take taken kill- killed
ஆங்கிலத்தில் செயப்பாட்டு வினை,, perfect tense இல் இது பயன் படுகிறது
தமிழில் இது போல இல்லை . எனவே இது பற்றி அதிகம் வேண்டாம்
ராமன் பாம்பைக் கொன்றார்
என்று செய்வினையில் சொல்லும்போது ராமன் எழுவாயாக (noun) வருகிறது
அதற்கேற்ப வினைச் சொல் (verb) கொன்றான்/கொன்றார் என்றும்
எழுவாய் பெண்ணாக இருந்தால் கொன்றாள் என்றும் வரும்
எடுத்துக்காட்டாக
ரம்யா ------கொன்றாள்
இதுவே செயப்பாட்டு வினையில்
பாம்பு ராமனால் கொல்லப்பட்டது
என்று வரும்போது இங்கே பாம்பு எழுவாய் ஆக மாறி விடுகிறது
பாம்பு அக்றினைப் பொருள் என்பதால் வினைச்சொல் அதற்கேற்ப கொல்லப்பட்டது என்று வருகிறது
மிக எளிய அடிப்படை இலக்கணம் என்றால் கூட படிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன
--உயர் திணை ,அக்றிணை , ஆண்பால் , பெண்பால், ஒருமை ,பன்மை ,
நிகழ் காலம் , கடந்த காலம் , எதிர் காலம் என பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது
இவற்றை எல்லாம் தெளிவாகப் நான் படித்து புரிந்து கொண்டு பிறகு எழுத இறைவன் அருள் புரிய வேண்டும்
வேப்பங்கனி இனிப்பாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ஆகாது என்பார்கள்
எனவே சிறிது சிறிதாக சப்பிடுவோம்
இன்றைய பதிவில் பார்த்த செய் வினை செயப்பாட்டு வினையில் உள்ள நிறை குறைகளை தெரிவிக்கவும்
இது போன்ற பதிவுகளுக்கு உங்கள் கருத்து ததெரிந்தால்தான் நான் என்னை சரி செய்து கொள்ள முடியும்
‘செயப்படுபொருள் குன்றாவினை’
என்ன என்று புரிகிரதா ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன்
வேப்பங்கனியை நாளை மீண்டும் சுவைப்போம்
௧௬௦௮௨௦௨௨
16082022 செவ்வாய்
சர்புதீன் பீ
May be an image of food and tree
Like
Comment
Share

No comments:

Post a Comment