தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 2
எழுவாய் ,பயனிலை செயப்படு பொருள்
10082022
தமிழ் இலக்கணத்தில் எழுவாய், பயனிலை ,செயப்படுபொருள் என்றால் என்ன ?
இது நேற்றைய வினா
விடையைப் பார்க்குமுன் ஒரு சிறு கதை – உண்மைக்கதை
தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் தமிழ் படிக்க புலவர் பெரும்கக்கள் வருவர் .
அவரிடம் தமிழ் படித்தால் எளிதில் கவிஞன் ஆகிவிடலாம் என்றொரு சிறப்பு அவருக்கு
இதை அறிந்த மாணவர் ஒருவர் கவிஞர் ஆகும் ஆசையில் அவரிடம் தமிழ் பயில வந்தார்
நுழைவுத் தேர்வாக ஒரு சொற்றொடரைக் கொடுத்து அதில் எழுவாய் , பயனிலை செயப்படுபொருள் பிரித்து எழுதச் சொன்னார்ஆசிரியர்
இந்த எளிய வினாவுக்கே அந்த மாணவருக்கு விடை தெரியவில்லை .
மொழியின் அடிப்படை இலக்கணம் அறியாத நீ தமிழ் படிப்பதில் பயன் எதுவும் இல்லை நீ எழுந்து போய்விடு என்ற பொருளில்
தம்பி நீ
எழுவாய்
உன்னால் ஏதும்
பயனிலை
நீ எழுந்து நடப்பதே இப்போது
செயப்படு பொருள்
என்று சொல்லி அனுப்பிவிட்டார்
சரி விடைக்கு வருவோம்
முதலில் சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
கணேசன் சுப்ரமணியம் – முதல் சரியான விடை
&
செல்வகுமார்
இளைய தலை முறையினர் யாரும் விடை எழுதவில்லை
விடை பற்றி எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு சிறிய வாக்கியம்
ராமு பால் குடித்தார்
இதில் யார் பால் குடித்தது என்ற கேள்விக்கு விடை ராமு
இது எழுவாய் (subject))
என்ன செய்தார் என்பதற்கு விடை குடித்தார்
இது பயனிலை ( verb)
எதைக் குடித்தார் ? விடை பால்
இது செயப்படு பொருள் (object )
தமிழில் பெரும்பாலும்
முதலில் எழுவாய் , அடுத்து செயப்படு பொருள் ,அதற்கடுத்து பயனிலை வரும்
ஆங்கிலத்தில் subject, verb (predicate) object என்று வரும்
Ramu drank milk
நான் பால் குடித்தேன் என்பதில் எழுவாய் மறைந்து
பால் குடித்தேன் என்று வரும்
நீ பால் குடித்தாயா என்பது
பால் குடித்தாயா என்று வரும்
எழுவாய் ,பயனிலை ,செயப்படு பொருள் – இவை மூன்றும் ஒரு வாக்கியத்தின் பகுதிகள்
(parts of a sentence )
இதில் பயனிலை ( verb) இருந்தால்தான் ஒரு வாக்கியம் முழுமையாகும்
ஆங்கிலத்தில் முழுமையான மிகச் சிறிய வாக்கியம்
I am என்பது
தமிழில் வா, போ வருகிறேன் போன்ற சில சொற்களே ஒரு சொல் வாக்கியமாகி விடும்
நான் போகிறேன் என்ற வாக்கியத்தில் செயப்படு பொருள் இல்லை
இது பற்றி பின்பு ஒரு பகுதியில் பாப்போம் (transitive /intransitive verb )
எழுவாய் பயனிலை செயப்படு பொருள்
இவ்வளவு விளக்கம் போதும் என்று தோன்றுகிறது
நிறை குறைகளை சுட்டிக்காட்டினால் சரி செய்யலாம்
விளக்கம் ஏதும் தேவைபட்டால் கேளுங்கள் – தெரிந்த அளவுக்கு சொல்ல முயற்சிக்கிறேன்
நிறைவு செய்யுமுன்
நேற்றைய பதிவில்
Retired என்பதற்கு “இளைப்பாறிய “ எனும் இலங்கை ( வானொலி) தமிழ் சொல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்
இளைப்பாறுதல் என்பது சிறிது நேர ஓய்வைக் குறிக்கும் சொல் எனவே ஒய்வு பெற்ற என்பதே சரி என்று
சகோ மரு. கண்ணன் முருகேசனும் சேஷாத்ரி ராமசாமியும் கருத்துத் தெரிவித்தனர்
வட்டார வழக்கில் பல சொற்கள் மாறுபட்ட பொருளில் வருகின்றன
எடுத்துக்காட்டாக
திருமணப் பந்தல் என்பது ஒரு இயல்பான சொல்
ஆனால் செட்டி நாட்டு வட்டார வழக்கில் திருமணக் கொட்டகை என்றுதான் சொல்வார்கள்
பந்தல் என்பது அங்கு அமங்கலச் சொல்
எனவே இலங்கைத் தமிழ் சரி என்பது என் கருத்து
மேலும் இணையத்தில் ஆக்ஸ்போர்ட் தமிழ் அகராதியில் இளைப்பாறுதல் என்ற சொல்லுக்கு ஒய்வு பெறுதல் என்று பொருள் போட்டிருக்கிறது
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்
செயலில் குரல் மற்றும் செயலற்ற குரல்
இது என்ன புதுச் சொல் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை 16082022 செவ்வாய் அன்று மீண்டும் சுவைப்போம்
௧௦௦௮௨௦௨௨
10082022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment