திருமறை குரான்
4:1 ஒன்றே குலம்
05082022
“ ------------
எந்த இறைவனின் பெயரால் நீங்கள் மற்றவர்களிடம் உரிமை கோருகிறீர்களோ அந்த இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்
இரத்த உறவுகளை சீர் குலைப்பதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் ----------“
இது குரானின் எந்தபகுதியில் வருகிறது?
விடை
சுராஹ் அந்நிஸா (பெண்கள் )முதல் வசனம் (4:1)
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் “
சகோ
ஷிரீன் பாருக், ----முதல் சரியான விடை
ஹசன் அலி
பீர் ராஜா
விளக்கம்
மனிதர்களுக்குள் உள்ள உரிமைகள்,
ஒரு நல்ல நிலையானகுடும்ப உறவுக்கு அடித்தளமாக அமைவது எது
போன்ற பல செய்திகள் பற்றி இந்த சூராஹ் அன்னிசாவில் இறைவன் சொல்லுகிறான்
அவற்றிற்கு ஒரு முகவுரை போல் அமைகிறது இந்த சூராவின் முதல் வசனம்
“ மனிதர்களே
ஒரே உயிரிலிருந்து உங்களைபடைத்த இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள் ; பிறகு அந்த உயிரிலிருந்தே ஒரு இணையையும் இறைவன் படைத்தான்
இந்த இருவரில் இருந்து மேலும் பல ஆண், பெண்களைப் படைத்.தான்
எந்த இறைவனின் பெயரால் நீங்கள் மற்றவர்களிடம் உரிமை கோருகிறீர்களோ அந்த இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்
இரத்த உறவுகளை சீர் குலைப்பதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்
-உங்கள் இறைவன் நிச்சயமாக உங்களைக் கண்காணிக்கிறான் (4:1)
ஒன்றே குலம் என்ற கருத்தை எடுத்துச் சொல்கிறது
ஒரே உயிரிலிருந்துதான் மனித இனம் பரவியது . எனவே ஒருவொருக்கொருவர் உடலாலும் ,உதிரத்தாலும் உறவுகள்
அந்த முதல் மனிதர் ஆதம் (அலை) , அவறை இறைவன் எப்படி உருவாக்கி உயிரூட்டினான் என்பது குர்ஆனில் வேறு பல இடங்களில் வருகிறது
இவை பற்றி பின்பொருநாள் சற்று விரிவாகப்பார்ப்போம் இறைவன் நாடினால்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
06 முகர்ரம் (1) 1444
05082022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment