நயத்தக்க நபித் தோழர்கள் 11
ஹுதைFபா இப்னுல் யமான் (ரலி)
“சுவனத்தில் அழகான மாளிகை அவர் வருகைக்குக் காத்திருக்கிறது
அவர் வாயில் இறைவன்பேசுகிறான் “
இது போன்ற எண்ணற்ற சிறப்புகளுக்கு உரிய கலிபா
உமர் ரலி அவர்கள் நம்மால் அதிகம் அறியப்படாத ஒரு நபித் தோழரிடம் கேட்கிறார்
“வஞ்சகர்கள் (முனாபிக்குகள் ) பட்டியலில் என் பெயர் இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள் “
அதற்கு அந்த நபிதோழர் சொல்கிறார்
“அந்தப்பட்டியலில் உங்கள் பெயர இல்லை
இனி வேறு யாரவது என்னிடம் வந்து இது போல் கேட்டால் நான் சொல்ல மாட்டேன் “
என்கிறார்
மேலும் உமர் அவர்கள் இறந்தவர்களுக்கான ஜனாசாத் தொழுகையில் கலந்து கொள்ளுமுன் அதில் இந்த நபித் தோழர் கலந்து கொள்வதை உறுதிப்ப்டுத்திக்கொள்வார்
இப்படி உமர் ரலி வந்து கேட்கும் அளவுக்கு நபி பெருமானின் நமிக்கைப்புப் பாத்திரமாகி நபி பெருமான் ரகசிய செய்திகளைப் பகிர்ந்து கொண்ட நபித் தோழர்தான்
ஹுதைFபா இப்னுல் யமான் (ரலி)
நபி பெருமானின் ரகசியக்காப்பாளர் என்று பெயர் பெற்றவர்
சுருக்கமாக ஹுதைபா என்று குறிப்பிடுவோம்
மக்கா ,மதீனா அல்லாமல் வெளியூரைச் சேர்ந்த குடும்பம்
பின்னாளில் மதீனவுக்குக் இடம் பெயர்ந்தவர்கள்
நபி பெருமானோடு பத்ருப்போர் தவிர மற்ற எல்லாப் போர்களிலும் பங்கெடுத்தவர்
எதிரிகளிடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவே பத்ருப்போரில் கலந்து கொள்வதை நபி பெருமான் அனுமதி பெற்று தவிர்த்தார்
உஹதுப்போரில் அந்தக்கால வழக்கப்படி முகத்தை மூடிக்கொண்டு போர்புரிந்தார் இவரது தந்தை
அதனால் சரியாக அடையாளம் தெரியாமல் முஸ்லிம் வீரர்களாலேயே தாக்கப்பட்டு உயிர் நீத்தார்
அந்த சூழ் நிலையிலும் தந்தையைக் கொன்றவர்களிடம்
“இறைவன் உங்களை மன்னிப்பானாக “ என்று சொல்லி, தன வாளை எடுத்துக்கொண்டு போர்க்களத்தில் குதித்தார்
பின்பு இது பற்றி அறிந்த நபி பெருமான் தந்தை மரணத்துக்கு தகுந்த இழப்பீடு ஹுதைபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார்
மிகுந்த வற்புறுத்தலால் அந்தத் தொகையை வாங்கிய ஹுதைபா அடுத்த நொடியே அதை சதக்கா (தருமம் ) செய்து விட்டார்
நபி பெருமானிடம் தீயவை பற்றியே விளக்கம் கேட்டு அவற்றிலிருந்து விலகி இருப்பார்
அகழ்ப்போர் நடந்தது கடுமையான் குளிர் காலத்தில்
இரவில் வெளியே வந்தால் தோல், நகம் உதடு, குதிங்கால் , பாதங்கள் எல்லாம் வெடித்துப் போகும் அளவுக்குக் குளிர்
அதோடு வேகமாக வீசும் காற்று நிலைமையை இன்னும் மோசமாக்கியது
இந்தக் கொடும் குளிரில் இரவோடு இரவாக எதிரியின் நிலை பற்றி அறிந்து வர நபிகள் தேர்ந்தெடுத்தது ஹுதைபா வைத்தான்
அகழியைக் கடந்து போய் எதிரியின் நிலையை அறிந்து வர இரவு முழுதும் ஆகி பொழுது விடிந்து விடும்
ஆனால் நபி பெருமானின் கட்டளைப்படி இரவில் போய் அதிகாலையில் திரும்பி வந்த ஹுதைபாவை குளிர் ஒன்றும் செய்யவில்லையாம்
இது நபி பெருமானின் முக்ஜிசா என்னும் அற்புதங்களில் ஓன்று என்று நபி மொழி (ஹதீஸ்) ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்
நபியின் ஆணைக்கேற்ப மதினாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை ((Census) கணக்கெடுத்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு
மதாயின் நகருக்கு ஆளுநராக இவரை நியமித்தார் உமர் ரலி
ஆட்சித் திறனுக்கும் எளிமைக்கும் எடுத்துகாட்டாக விளங்கிய உமரே
“ஒரு ஆட்சியாளருக்கு உள்ள எந்த ஆடம்பரமும் இல்லாமல் ,மக்களோடு மக்களாக , ஏழை மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்கிறார் “
என்று ஹுதைபாவைப் பாராட்டினார்
நபி மொழியை சிறிதும் தவறாமல் கடைப்பிடித்து ,வாழ்ந்த ஹுதைபா அரசரவைகூட்ட விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்
அங்கு பலர் நின்று கொண்டு,உணவை விரயம் செய்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்
ஹுதைபா தன் கைதவறி கீழே விழுந்த உணவை எடுத்து சுத்தம் செய்து சாப்பிடுகிறார்
இதைபார்த்து மற்றவர்கள் முகம் சுளிக்க , “இவர்களுக்காக நபி வழியை விட்டு நான் விலக முடியாது “என்று சொல்லி உணவு ஒழுக்கத்தோடு உண்கிறார்
பல நபி மொழிகளின் அறிவிப்பாளராக இருந்தார்
உறங்குமுன், உறங்கி எழுந்ததும் ஓதும் துஆக்கள் எல்லாம் இவர் அறிவித்துக் கொடுத்ததுதான்
மதாயின் நகரில் வாழ்ந்து அங்கேயே உயிர் நீத்த ஹதைபா, தஜ்லா
(யூப்ரடீஸ்) நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டார்கள்
நதிக்கரை விரிவடையவே வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டியதாயிற்று
அதற்காக ஹுதைபாவின் உடலை அகற்றியபோது உடல் சற்றும் மாற்றம் இல்லாமல் கண் திறந்த நிலையில் இருந்தது;
உடலைத் தொட்டு தூக்கியவர்கள் கையில் அத்தர் மனம் வீசியது என்று ஒரு செய்தி உண்டு
சிறப்பாக வாழ்ந்து சிறப்பாக மறைந்த ஹுதைபாவை இறைவன் பொருந்திக்கொள்வானாக
(ஹுபைதா என்று எங்காவது தவறாக இருந்தால் அதை ஹுதைபா என்று திருத்திக்கொள்ளவும் - நன்றி )
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
21 முஹர்ரம்(1) 1444
20082022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment