மூலிகை அறிமுகம்
கானா வாழை
தொலைக்காட்சியில் கானாவாழை என்ற பெயர் அரைகுறையாகக் காதில் விழுந்தது
ஏதோ வாழை மரம், விசிறி வாழை போல் பெரிய செடியாக, அல்லது கல்வாழை அளவுக்கு ஒரு செடியாகவாவது இருக்கும் என்று நினைத்தேன்
ஆனல் இணையத்தில் தேடிப் பார்க்கையில் இது ஒரு சின்னஞ் சிறிய செடி , அதுவும் எங்கும் காணப்படும் ஒரு செடி என்பதை அறிந்து வியப்பு
அதை விட வியப்பு இந்தச் சின்னஞ்சிறு செடியின் எண்ணற்ற மருத்துவப் பயன்கள்
காணான் வாழை , கானான் கோழிக்கீரை காணாம் வாழை ,கன்றுக்குட்டிப்புல் என பல பெயர்கள் கொண்ட இந்தச் செடியின் தாவரவியல் பெயர
Commelina bengalensis
அழகிய சிறிய ஊதாப்பூக்கள் , நீள் வட்ட வடிவத்தில் இலைகள் உள்ள இந்தச் செடியை எங்கும் காணலாம் ,எளிதில் அறிந்து கொள்ளலாம்
பூ, இளை , வேர் என முழுச் செடியும் மருத்துவ குணம் கொண்டது
மேல் பூச்சாகவும் , உட்கொள்ளும் மருந்தாகவும், சமைத்து உண்ணும் கீரையாகவும் பயன் படுகிறது
தனியாகவும் ,முருங்கை கீரை, தூதுவளை ,பசும்பால், பனங்கல்கண்டு .,கொட்டைப்பாக்கு , பசு நெய், துவரம் பருப்பு போன்ற பல பொருள்களோடு சேர்த்தும் மருந்தாக பயன்படுத்தலாம்
பயன்கள் பற்றிச் சொல்லுமுன் வழக்கமான
எச்சரிக்கை
இது மருத்துவப் பதிவு இல்லை
தெருவோரங்களிலும், தோட்டங்கள் பூங்காக்களிலும் இயல்பாக முளைக்கும் செடி கொடிகளை மூலிகைகளாக அறிமுகப்படுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்
தகுதி வாய்ந்தவர்கள், , அனுபவம் மிக்கவர்களைக் கலந்து ஆலோசித்தே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்
பயன்கள்
நோய் கிருமிகளை அழித்து புண்களை ஆற்றும்
மார்பகக் கட்டிகள், புண், எரிச்சல் வலி, வீக்கம் குணமாகும்
கால்களில் நீர் தேங்கி வீக்கமும் வலியும் சேர்ந்து காணப்படும் வாத நோய்க்கு நல்ல மருந்து
உடலில் உள்ள நீரை வற்றச் செய்து உள் அழலை ஆற்றும்
குடும்ப உறவை பலப்படுத்தி உற்சாகம் உண்டாக்கும்
உடல் வலிமையைக் கூட்டி புத்துணர்வு தரும்
காய்ச்சலை போக்கும் , குருதியைத் தூய்மை செய்யும் சிறு நீரைப் பெருக்கும்
உடலில் உள்ள தேவையற்ற உப்புச் சத்தை நீக்கும்
சிறு நீரகம், கல்லீரல், மண்ணீரல் , இரைப்பை நுரையீரலைபலப்படுத்தி பிரச்சினைகளை சரி செய்யும்
சிருநீர்ப்பாதை தொற்றை , மார்புச் சளியை அகற்றும்
வாய், தொண்டை குரல்வளை தொடர்பான பிரச்சினைகளை சரி செய்யும்
கடுமையான காய்ச்சல் , உடல் வலியைப் போக்கும்
வயிற்றுப்புண் , ஆசன வாயில் குருதிக் கசிவு , பாலியல் நோய்களை சரி செய்யும்
முகப்பரு , படுக்கைப்புண்கள் (Bed sores). நாள் பட்ட புண்களை சரி செய்யும்
வெள்ளைப்படுதல் , அதிகப்போக்கு சரியாகும்
சுருக்கமாகச் சொன்னால் இது அற்புத மூலிகை .
எளிதில் எங்கும் கிடைப்பதால் அதன் அருமை நமக்கு தெரியவில்லை
மீண்டும் நினைவூட்டுகிறேன்
இது ஒரு மருதுவப்பதிவு இல்லை
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
13082022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment