Monday, 29 August 2022

தமிழ் மொழி அறிவோம் வேப்பங்கனி 7 காலம்

தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 7
காலம்
30082022
தமிழ் இலக்கணத்தில் பால் (gender) எத்தனை வகைப்படும் என்பது பற்றி போன பதிவில் பார்த்தோம்
இன்று மீண்டும் ஒரு அடிப்படையான .எளிய செய்தி
காலம் (tense)
அடிப்படையில் காலம் மூன்று வகை
கடந்து போனது கடந்த காலம் (Past tense)
நிகழ்வது(நடப்பது ) நிகழ் காலம் (Present tense)
நடக்கப்போவது எதிர்காலம் (Future Tense)
நேற்று இன்று நாளை என்று நினைவில் வைத்துக்கொள்ளலாம்
நேற்று நடந்தது கடந்த காலம்
இன்று நடப்பது நிகழ் காலம்
நாளை நடக்கவிருப்பது எதிர்காலம்
“கடந்த காலமோ திரும்புவதில்லை..
நிகழ்காலமோ விரும்புவதில்லை..
எதிர்காலமோ அரும்புவதில்லை....”
படப்பாடல் வரிகள்
எதிர்மறைக் கருத்தாக இருந்தாலும் சிறப்பான ,அழகான சொல் பயன்பாடு
"பதட்டமான தொடர்ச்சியான"
என்னமோ ஏதோ ஏன்று
பதற வேண்டாம்
- கூகிள் மொழி பெயர்ப்பு continuous tense : வ்ன்பதற்கு
ஆங்கிலத்தில் வரும் continuous tense, perfect tense அளவுக்கு தமிழில் பெரிய வேறுபாடு இல்லை
எடுத்து காட்டாக
முற்றுப் பெற்ற காலம் என தமிழில் வரும் perfect tense
பல வகையாக ஆங்கிலத்தில் வரும்
Go- gone come-come give-given
Put-put say –said rise-risen
தமிழில் அப்படியெல்லாம் வேற்றுச் சொல் இல்லை
போனான் - போய் விட்டான்
வந்தான் – வந்து விட்டான்
கொடுத்தான் – கொடுத்து விட்டான்
எழுந்தான் எழுந்து விட்டான்
அவ்வளவுதான்
அதே போல் continuous tense தொடர் காலம்
ஆங்கிலத்தில்
Shall, will
பயன்பாட்டில் வேறுபட்டு வரும்
தமிழில் எளிதாக
வருகிறான் – வந்துகொண்டு இருக்கிறான்
என்று வரும்
காலம் – தெரிந்த அளவுக்கு விளக்கி விட்டேன்
ஏதேனும் விட்டிருந்தால் தெரிவிக்கவும்
இன்றைய எளிய வினா
“ஆயத்த அணிகலன் அங்காடி”
என்ன பொருள் “
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை மீண்டும் நாளை சுவைப்போம்
௩௦௦௮௨௦௨௨
30082022 செவ்வாய்
சர்புதீன் பீ
May be an image of food
Like
Comment
Share

No comments:

Post a Comment