Tuesday, 23 August 2022

தமிழ் மொழி அறிவோம் வேப்பங்கனி 6 பால் வகைகள் gender

 தமிழ் மொழி அறிவோம்

வேப்பங்கனி 6

24082022
தமிழ் இலக்கணத்தில் பால் (gender) எத்தனை வகைப்படும்
இது நேற்றைய பதிவின் நிறைவு வினா
இந்த எளிய வினாவை ஆசிரியர் இலக்கண வகுப்பில் கேட்கிறார்
ஒரு மாணவன் மூன்று என்று பதில் சொல்ல
சரியான விடை தெரியாவிட்டலும் திருக்குறளின் முப்பாலைத்
தெரிந்து வைத்திருக்கிறானே நம் மாணவன் என்ற மகிழ்ச்சியில்
“எங்கே சொல் பார்க்கலாம் “என்றார் ஆசிரியர்
மானவ்ன் சொன்ன பதிலில் திகைத்து மயங்கி விட்டார் ஆசிரியர்
அப்படி என்ன சொன்னான் அவன் ?
பின்பு பார்ப்போம்
விடையைப் பார்க்குமுன்
சரியான விடை எழுதிய
சகோ
ஷர்மதா முதல் சரியான விடை
தல்லத்
கணேச சுப்பிரமணியன்
நல்ல தமிழ் அறிஞர் – பேடு , பேடி , அலி இவையும் உயர்திணையில் வரும் என்று சொல்லியிருக்கிறார்
பர்வேஸ்
முதல் முறை ஒரு இளைய தலை முறை சரியான விடை அளித்ததில் எனக்கு மகிழ்ச்சி
அதுவும் என் பேரன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி
நால்வருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
விடை, விளக்கம்
ஆண் பால்
பெண் பால்
பலர் பால்
இவை மூன்றும் உயர்திணை
ஒன்றன் பால்
பலவின் பால்
இவை அக்றிணை (மடிக் கணினியில் ஆயுத எழுத்து இல்லை)
மொத்தம் பால் ஐந்து வகை
பெயர்ச் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் பால் வரும்
பெயர்ச்சொல்லுக்கு ஏற்ப வினைச் சொல் வரவேண்டும்
எ-டு
அவன் வந்தான்
அவள் வந்தாள்
அவர்கள் வந்தார்கள்
அது வந்தது
அவை வந்தன
அவர்கள் வந்தார் , அவர் வந்தார்கள் – இவை தவறு
இதற்கு மேல் விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்
முப்பால் – அந்த மாணவன் சொன்ன விடை
ஆட்டுப்பால் , மாட்டுப்பால் , அமலா பால்
இன்று ஒரு மிக எளிய வினா
இலக்கணத்தில் காலங்கள் எத்தனை >
இளைய தலை முறை – குறிப்பாக ஆங்கில வழியில் பயின்றவர்- அவர்கள்தான் எனது இலக்குக் குழு (Target Group)
அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக நிறைய ஆங்கிலம் கலந்து எழுதுகிறேன்
குறை நிறைகளை – குறிப்பாக குறைகளை – சொன்னால் சரி செய்து கொள்ள முயற்சிப்பேன்
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை மீண்டும் 30082022 (செவ்வாய்) அன்று சுவைப்போம்
௨௪௦௮௨௦௨௨
24082022 புதன்
சர்புதீன் பீ
May be an image of fruit and tree
Like
Comment
Share

No comments:

Post a Comment