தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 8
அணி
இன்று அடிப்படையான .எளிய செய்திகளிலிருந்து சற்று மேலே போய்
அணி இலக்கணம்
பற்றிப்பார்ப்போம்
அதற்கு முன் நேற்று வந்த காலம் பற்றி சகோ அஷ்ரப் ஹமீதா
தொடர் காலம் பற்றி
வந்து கொண்டிருப்பான் (எதிர்)
வந்து கொண்டிருக்கிறான் (நிகழ்)
வந்து கொண்டிருந்தான் (கடந்த)
என்று குறிப்பிட்டுள்ளார்
அவருக்கு நன்றி
அணி இலக்கணத்துக்கு ஒரு முன்னோட்டம் போல
நேற்று ஒரு எளிய வினா கேட்டிருந்தேன்
“ஆயத்த அணிகலன் அங்காடி”
என்ன பொருள் “
இது பல ஆண்டுகள் முன்பு நெல்லை நகர்பகுதியில் ஒரு நகைகடையின் பெயர்பலகையில் பார்த்தது
ஆயத்த – readymade
அணிகலன் - Jewellery
அங்காடி- Shop
Ready mage Jewellery Shop
மூன்று சொல்லையும் தனித்தனியாக பொருள் கண்ட பலர்
அதை சேர்த்து எழுதவில்லை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டப் பெரும் ஒரே
சகோ
இதயத்துல்லா
முயற்சித்த சகோ
நஸ் ரீன் , ஜோதி கனகராஜ்
மூவருக்கும் நன்றி
இன்னும் கொஞ்சம் முயற்சித்து சரியான விடை கண்டு பிடித்திருக்லாம்
இப்போது அணி இலக்கணம்
அணி என்றால் அழகு
அழகுக்காக அணிந்து கொள்ளும் நகை அணிகலன் எனப்படுகின்றது
இலக்கியத்தில் உள்ள சொல் அழகு, பொருள் அழகை எடுத்துக்காட்டுவது அணி இலக்கணம்
அணி இலக்கணம் பற்றி மிக விரிவாக எடுத்துச் சொல்லும் பழைமையான நூல்
தண்டி அலங்காரம்
இதில் சொல்லப்படும் 35 வகையான அணிகளில் எளிதான வெகு சில பற்றிப் பார்ப்போம்
1. இயல்பு நவிற்சி அணி
எந்த வித மிகைப்படுத்தலும் இல்லாமல் அழகாக அமைந்த
பாடல் /இலக்கிய வரிகளில் வருவது இயல்பு நவிற்சி அணி
ஒரு எளிய எடுத்துக்காட்டு
“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கு துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி “
மிக எளிமையான சொற்களில் பசுவையும் கன்றையும் தோட்டத்தையும் படம் பிடித்துக் கண்ணில் நிறுத்துகிறார் கவிஞர்
தன்மை நவிற்சி அணி என்றும் பெயர்கொண்ட இந்த இயல்பு நவிற்சி அணியில் உள்ள பல உட்பிரிவுகள் பற்றி நான் சொல்வதாக இல்லை
இந்த இ. ந. அணிக்கு எதிர்ச் சொல்லாக ஒரு அணி இருக்கிறது
அது என்ன அணி ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை மீண்டும் செவ்வாயன்று ( 0 6 09 2022) சுவைப்போம்
௩௧௦௮௨௦௨௨
31082022 புதன்
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment