திருமறை குரான்
தொழுகை 3
பர்ளு தொழுகையில் துணை சூராஹ்
01 09 2022
தொழுகை பற்றிய சில அடிப்படை செய்திகளை வினா விடை வடிவில் சில வாரங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
முந்தைய வினாவை விட எளிதான வினா
ஒரு நாளைக்கு மொத்தம் 17 ரக் அத் பர்ளு எனும் கட்டாயக் கடமைத் தொழுகை என்று பார்த்தோம்
இந்த 17 இல் எத்தனை ரக் அததுக்கு அல்ஹம்து சூராவை அடுத்து துணைசுராஹ் ஓத் வேண்டும்?
விடை 10
ஒவ்வொரு பர்ளு தொழுகையிலும் முதல் இரண்டு ரக் அததுக்கு அல்ஹம்து சூராவுக்குப்பின் துணை சுராஹ் ஓத வேண்டும்
5 வேளைx 2= 10
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி முதல் சரியான விடை
சிராஜுதீன் ஷிரீன் பாருக் தல்லத்
ஷர்மதா பாப்டி பர்வேஸ்
நஸ் ரீன் ராஜாத்தி ஜீனத் உம்மு சல்மா
சில மாறுபட்ட விடைகளும் வந்தன
முதலில் வந்த விடையே எனக்கு சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியது
விடை சரியா தவறா என்பதைதாண்டி unreasonable and illogical ஆக இருந்தன
17 இல் எத்தனை என்றால் விடை 17 அல்லது அதற்குக் குறைவாகத்தானே இருக்கவேண்டும் .
ஆனால் 85 என்று ஒரு விடை
எல்லாத்தையும் கூட்டினால் 85 வரும் என்று ஒரு விளக்கம் வேறு
எதை எல்லாம் கூட்டினார் என்பது எனக்குப் புரியவில்லை
17 , 60 , 32, எவ்வளவு வேண்டுமானாலும் ஓதலாம்
என பல விடைகள்
குற்றம் சொல்லவோ குறையை சுட்டிக்காண்பிக்கவோ இவற்றை வெளியிடவில்லை
இதை எல்லாம் படிக்கும்போது
நம் கேள்வி சரியாக இல்லையோ என ஒரு அச்ச உணர்வு எனக்கு , அதனால் என் வினாவை த்திரும்பத் திரும்பப் படித்து சரி பார்த்தேன்
இறைவன் அருளால் மாறுபட்ட விடை சொன்ன அனைவரும் திரும்ப சரியான விடை அனுப்பி விட்டர்கள் என்பதில் எனக்கு ஒரு நிறைவான மகிழ்ச்சி
இன்றைய வினா
இதுவும் பர்ளு 17 ரக்கத் பற்றித்தான்
இந்த 17 இல் எத்தனை ரக் அத்
அமைதியாக (silent ) ஆகத் தொழுக வேண்டும் ?
எத்தனை ரக் அத சத்தமாக தொழுக வேண்டும் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை
தொழுகையில் சிந்திப்போம்
04 ஸfபர் (2) 1444
01 09 2022 வியாழன்
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment