திருமறை குரான்
தொழு கை 4
ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகை குர்ஆனில் மிகவும் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
தொழுகை பற்றிய சில அடிப்படை செய்திகளை வினா விடை வடிவில் சில வாரங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
நேற்றைய வினா
இதுவும் பர்ளு 17 ரக்கத் பற்றித்தான்
இந்த 17 இல் எத்தனை ரக் அத்
அமைதியாக (silent ) ஆகத் தொழுக வேண்டும் ?
எத்தனை ரக் அத சத்தமாக தொழுக வேண்டும் ?
விடை – அமைதியாக 11
சத்தமாக ஆறே ஆறு (6)
காலை பஜ்ர் 2
அந்தி மக்ரிப் 2
இரவு இஷா -2
மொத்தம் 6
பள்ளிவாசலில் அல்லது வீட்டில் கூட்டுத் தொழுகை, -ஜமாஅத்
தனியாகத் தொழுவது , ஆண் பெண் தொழுகை எலாவ்ற்றிற்கும் இது பொருந்தும்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் – முத;ல் சரியான விடை
ஷிரீன் பாருக்
ஹசன் அலி &
சிராஜுதீன்
முயற்சித்த சகோ சுராஜ், ராஜாத்திக்கு நன்றி
இதுவரை
1. ஒரு நாளில் பர்ளு தொழுகை எத்தனை ரக் அத ?
2. அதில் துணை சூரா எத்தனைக்கு ஓத வேண்டும் ?
3. எத்தனை ரக் அத அமைதியாக, எத்தனை ரக் அத சத்தமிட்டுத் தொழுக வேண்டும் ?
என்ற மூன்று அடிப்படையான வினாக்களுக்கு முறையே
17, 10, 6
என்று விடை பார்த்தோம்
இந்த வினா விடைத் தொடரை துவங்குமுன் இதே 3 வினைக்களை 10 பேரிடம் தொலைபேசியிலும் நேரிலும் கேட்டேன்
2 பேர் முதல் வினாவுக்கு சரியான விடை தெரியாது என்று சொல்லி விலகி விட்டார்கள்
இரண்டாவது வினாவுக்கு பலர் சரியான விடைசொன்னார்கள் .விடை சொல்ல எல்லோருக்குமே கால அவகாசம் தேவைபட்டது
10 பேரில் 3 வினாக்களுக்கும் சரியான விடை அளித்த
சகோ
கிஷோர், பர்வேஸ்
இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
பள்ளிவாசலுக்கு போனால் பல செய்திகள் காதில் விழும்
அன்த வாய்ப்பு பெண்களுக்கு இல்லாததால் பலவும் தெரியாமல் போய் விடுகிறது என நினைக்கிறேன்
எப்படியோ இறைவன் அருளால் ஓரிரண்டு பேருக்காவது ஒரு சில செய்திகள் இந்தத் தொடாரால் தெரிய வந்தால் அது எனக்கு பெரிய மகிழ்ச்சியும் மன நிறைவும் தரும்
இன்றைய வினா
தொழுகும் போது மறதி, ஐயம் ஏற்படுவது மிக இயல்பான ஓன்று
பெரிய பெரிய இமாம்களும் இதற்கு விலக்கு இல்லை
நாம் தொழுவது முதல் ரக் அத்தா , இரண்டாவதா மூன்றாவதா இல்லை நான்கவதா என்ற ஐயம் அடிக்கடி வரும்
இப்படி ஒரு ஐயம் (சந்தேகம் ) வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வரும் வியாழன் (08 09 2022) அன்று தொழுகையில் சிந்திப்போம்
05 ஸfபர் (2) 1444
02 09 2022 வெள்ளி
சர்புதீன் பீ
4 shares
Like
Comment
Share
No comments:
Post a Comment