தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 13
சென்ற பகுதியில்
வஞ்சப் புலழ்ச்சி அணி பற்றிப் பார்த்தோம்
அந்தப் பகுதியின் நிறைவு வினா
“பொன் மலர் மணம் பெற்றது போல் “
இதில் உள்ள அணி என்ன அணி ?
மிக எளிய வினா
இல்பொருள் உவமை அணி என்பது சரியான விடை
இல்லாத ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறுவது இல் பொருள் உவமை அணி
நறுமணம் உள்ள பொன்மலர் எதுவும் கிடையாது
ஆனால் அது உவமையாக வருகிறது
பாடல்
நீதிநெறி விளக்கம் 5 ஆவது பாடலில் வரும்
பொன் மலர் நாற்றம் உடைத்து
என்பதை
பொன்மலர் மனம் பெற்றது போல
என்று மாற்றி
இல் பொருள் உவமை அணிக்கு எடுதுக்காட்டாகக் கொடுத்திருக்கிறேன்
சரிதானே!
உவமை அணி என்று பாதி விடை அனுப்பிய
சகோ ஷர்மதாவுக்கு பாதி பாரட்டுகள்
முயற்சித்த சகோ ராஜாததிக்கு நன்றி (உருவக அணி )
அடுத்த வினாவுக்குப் போகுமுன் இது வரை பார்த்த 12 பகுதிகள் பற்றி சுருக்கமாக
இயல்பு நவிற்சி அணி
- உயர்வு, நவிற்சி அணி
அந்தாதி அணி
தற்குறிப்பேற்ற அணி
வஞ்சப் புகழ்ச்சி அணி
என ஐந்து அணிகள் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம்
அதற்கு முன்பு
எழுவாய் பயனிலை செயப்படு பொருள் செய்வினை செயப்பாட்டு வினை
குன்றா வினை ,குன்றிய வினை
தன்மை முன்னிலை-படர்க்கை
பால்
காலம்
போன்ற அடிப்படை இலக்கணப் பகுதிகள் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்தோம்
அணி , அடிப்படை இரண்டிலுமே பார்க்க வேண்டியது இவ்வளவு இருக்கிறதே என்று நினைத்தால் மிகவும் மலைப்பாக இருக்கும்
இவ்வளவு சிரமப்பட்டு இலக்கணம் படித்து என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் வரும்
அதை எல்லாம் பார்க்காமல் பொறுமையாக முடிந்த வரை, புரிந்த வரை பார்ப்போம்
நயன்தாரா நடித்த ஒரு திரைப்படம்
“ இமைக்கா நொடிகள் “
இந்தப் பெயருக்கு இலக்கணக் குறிப்பு என்ன?
இதுவே இன்றைய நிறைவு வினா
மிக எளிய வினா
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை தமிழில் சிந்திப்போம்
௨௦௦௯௨௦௨௨செவ்வாய்
20092022
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment