தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 11
அணி--- தற்குறிப்பேற்ற அணி
அந்தாதி அணி பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்
காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ-நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை.
இந்த நளவெண்பா பாடலில் உள்ள அணி என்ன
அணி ?
இது முந்திய பதிவின் நிறைவு வினா
விடை ,விளக்கம்
தற்குறிப்பேற்ற அணி என்பது சரியான விடை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
செங்கை A சண்முகம் முதல் சரியான விடை
செல்வகுமார்
சிராஜுதீன்
ஹசன் அலி
விளக்கத்துக்கு முன் ஒரு எளிய திரைப்பாடல் –காட்டு ராணி படம் என நினைவு
“தோளுடன் தோள் சேர்த்து நிதமும் சுகம் பெறும் மரங்களிலே
வாயுடன் வாய் சேர்த்துக் கொஞ்சி வாழ்ந்திடும் பறவைகளே “
காட்டில் உள்ள மரக்கிளைகள் காற்றில் ஒன்றோடு ஓன்று உரசிக் கொள்வது ஒரு இயல்பான செயல்
ஆனால் கவிஞரின் கற்பனையில் ஒரு இணை தோள்களை உரசி இன்பம் காண்பது போல் தோன்றுகிறது
தன் கற்பனையை , தன் குறிப்பை ஒரு இயல்பான நிகழ்வில் ஏற்றிச் சுவைபடச் சொல்வது
தற்குறிப்பேற்ற அணி
அவ்வளவுதான்
காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ-நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை.
இந்த நளவெண்பா பாடலும் எளிமையான ஒன்றுதான்
இலக்கியம் புதிதாகப் படிக்க விரும்புவோர் நளவெண்பாவில்தான் துவங்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு எளிமையான இனிமையான பாடல்கள்
நண்டுகள் தம் வலையை விட்டு நீங்கி கடலுக்குள் செல்வது ஒரு இயல்பான் நிகழ்வு
காதலியை தனியே விட்டு வந்த பாவியை பார்க்கக் கூடாது என்று எண்ணி நளனைக்கண்டு ஓடுவதாக ஒரு கற்பனையை அந்த இயல்பு நிகழ்வில் ஏற்றிச் சொல்கிறார் புலவர்
அலவம் =நண்டு
ஆழி = கடல்
இனி இன்றய வினா
“தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்”
இதில் உள்ள அணி என்ன அணி ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை மீண்டும் நாளை சுவைப்போம்
௧௩௦௯௨௦௨௨
13092022 செவ்வாய்
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment