திருமறை குரான்
தொழுகை 9
அத்தஹியாத்து
ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகை குர்ஆனில் மிகவும் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
தொழுகை பற்றிய சில அடிப்படை செய்திகளை வினா விடை வடிவில் சில வாரங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
ஜமாத்தில் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் மயங்கி விழுந்து விடுகிறார்
அப்போது இமாமும் மற்றவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முந்திய பதிவில் பார்த்தோம்
அன்றைய நிறைவு வினா
தொழுகையில் இருப்பில் உட்கார்ந்து அத்தஹியாத்து ஓதும்போது
ஆட்காட்டி விரலை உயர்த்துகிறோம்
அது எதற்காக ?
விடை விளக்கத்துக்கு முன் சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுக்கு உரியவர்களைப் பார்ப்போம்
சகோ
ராஜாத்தி – முதல் சரியான விடை
ஷர்மதா
ஹதீஸ் சொல்லும் விளக்கம் அனுப்பிய சகோ சிராஜூதீனுக்கு நன்றி
இதற்கான விளக்கம் ஒரு வெள்ளிகிழமை உரையில் கேட்டது
மிக அழகாக அவர் விளக்கியது அந்த சுவனக்காட்சியை நாமும் நேரில் பார்ப்பது போல் இருந்தது
நபி ஸல் அவர்கள் மிராஜ் எனும் சுவனப் பயணத்தின்போது இறைவனுக்கு முகமன் (சலாம் ) சொல்கிறர்கள்
“காணிக்கைகளும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்
இறைவன் ஒருவனுக்கே உரியன –
அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸவாத்து வத்தய்யிபாத்து “
அதற்கு மறுமொழியாக இறைவன் நபி அவர்களுக்கு சலாம் சொல்கிறான்
“நபியே தங்கள் மீது சாந்தியும் இறைவனுடைய அருளும் புனிதமும் உண்டாவதாக”
அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரக்காத்த்குஹு “
எல்லாம் வல்ல இறைவனே ஒருவருக்கு நேரில் இப்படி வாழ்துச் சொல்வது எவ்வளவு அரிய பெரிய பேறு!
இந்தக் கிடைத்தற்கரிய அருளைக்கூட நபி அவர்கள தமக்கு மட்டும் வைத்துகொள்ளவில்லை
அப்படியே அதை மனித குலத்துக்கு பொது உடமை ஆக்குகிறார்கள்
“இன்னும் எங்கள் மீதும் உத்தமர்களான இறைவனின் நல்லடியாரகள் மீதும் சலாம் எனும் சாந்தி உண்டாவதாக “
அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்
இந்த அற்புதக் காட்சியை
- இறைவனே நேரடியாக ஒரு நபிக்கு , ஒரு மனிதருக்கு வாழ்த்துக் கூறுவது
அந்த அரிய வாழ்த்தின் நற்பலனைக் கூட தனக்கே தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் நல்லடியார்களுக்கு பகிர்ந்து கொடுத்த நபியின் பொதுவுடமை சிந்தனை
இரண்டையும் கண்டு வியந்த வானவர்கள் ஒருமித்த குரலில்
“வணக்கத்துக்கு உரியவன் இந்த ஏக இறைவனைத் தவிர இல்லை என்று சான்று சொல்கிறேன்
இன்னும் உறுதியாக முகமது நபி (ஸல்) ஏக இறைவனுடைய நல்லடியாரும் திருத் தூதரும் ஆவர் என்று சான்றளிக்கிறேன் “
என்று சொல்கிறார்கள்
அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முகம்மதன் அப்துஹு வரஸுளுஹு”
அவர்களோடு நாமும் சேர்ந்து சான்று பகரும் விதமாக அஷ்ஹது அல்லஇலாஹ என்று சொல்லும்போது ஆட்காட்டி விரலை உயர்த்தி இல்லல்லாஹு என்று சொல்லும்போது விரலைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும்
சுருக்கமாக
“இறைவன் ஒருவன், நபி ஸல் இறைவனின் திருத் தூதர் “ என சான்று பகருகிறோம்
என் காதில் விழுந்ததை , நான் விளங்கிக்கொண்டதை என்னால் முடிந்த அளவுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டேன்
இனி இன்றைய வினா
எளிதானது மட்டுமல்ல சற்று வேடிக்கையானதும் கூட
“பள்ளியில் ஜமாஅத்தில் தொழுது கொண்டிருக்கும் ஒருவர்
ஒரே தொழுகையில்
தொடரந்து மூன்று ரக்கத்தில்
அத்தஹியாத்தில் உட்காருகிறார்
அது என்ன தொழுகை
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன்
நாளை தொழுகையில் சிந்திப்போம்
அதோடு தொழுகை வினா விடையை நிறைவு செய்ய எண்ணுகிறேன்
அதன் பின் இறைவன் அருளால் வழக்கமான குரான் வினா விடை தொடரும்
25 ஸfபர் (2) 1444
22 09 2022 வியாழன்
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment