தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 12
அணி--- வஞ்சப் புகழ்ச்சி அணி
தற்குறிப்பேற்ற அணி
பற்றி நேற்றுப் பார்த்தோம்
நேற்றைய வினா
“தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்”
இதில் உள்ள அணி என்ன அணி ?
விடை வஞ்சப் புகழ்ச்சி அணி
சரியான விடை அனுப்பியோர்
சகோ
இதயத் - முதல் சரியான விடை
ஹசன் அலி
செல்வகுமார்
கணேச சுப்பிரமணியம்
அனைவருக்கும் வாழ்த்துகள பாராட்டுகள்
பள்ளிபருவத்தில் என் வகுப்பில் ரவீந்திரன் என்றொரு மாணவன் படித்தான்
ஒரு ஆசிரியர் அவனைபார்த்து
ரவீந்திரர் பெரிய கவீந்த்ரர்
என்று அடிக்கடி சொல்வார்
“பெரிய கவிஞர் “ என்று புகழ்வது போல் இருக்கிறது
ஆனால் கவி என்ற சொல்லுக்கு குரங்கு என்றும் ஒரு பொருள் இருக்கிறது
கவிஞர் என்று புகழ்வதுபோல் குரங்கு என்று கேலி செய்கிறார் ஆசிரியர்
இதுதான் வஞ்சப் புகழ்ச்சி அணி
எங்கள் ஊர் பேச்சு வழக்கில் இது போல் நிறைய மிக இயல்பாக வரும்
“யோக்கியர் வர்றாரு சொம்பத் தூக்கி உள்ள வை “
என்பது நினைவில் வருகிறது
“தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்”
இப்பாடலில், தீயவர்களைத் தேவர்களுக்கு இணையாகப் புகழ்ந்து கூறுவதுபோலக் கூறித், தீயவர்கள் தம் மனம்போன போக்கில் தீய செயல்களைச் செய்து அழிவார்கள் எனப் பழித்துக் கூறப்பட்டுள்ளது.
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைமாறு கருதாமல் கொடுக்கின்றான்? மழையும்தான் கைமாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகத்தைப் புரக்கிறது.
இது பழிப்பது போலப் புகழ்வது ஆகும்.
இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது
இன்றைய வினாவுக்குப் போகுமுன் இந்த வேப்பங்கனி பற்றி வந்த இரு கருத்துக்கள் :
“குற்றிய லுகரம் “ பற்றி சொல்லவில்லையே . அது பலருக்கும் புரியாத பகுதி
அதை புரியும்படி விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் “
இதற்கு என் விடை
“ எந்த ஒரு வரிசையிலும் இந்தத் தொடரை நான் எழுதவில்லை
சலிப்புத் தட்டாமல் இருக்க அடிப்படையில் இருநது அணிக்கு வந்து விட்டேன்
ஒரு அளவில் அணி இலக்கணத்தை நிறைவு செய்து விட்டு மீண்டும் அடிப்படைக்குப் போவேன் இறைவன் நாடினால்
மேலும் குற்றிய லுகரம் பற்றி எழுதுமுன் அதை நான் படித்து முற்றிலுமாகப் புரிந்து கொள்ள வேண்டும்
படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி சொல்லத் தெரிய வேண்டும்
Copy paste/ cut paste மிகவும் எளிது . அதில் எனக்கு உடன்பாடு இல்லை
இன்னொரு கருத்து இதே வேப்பங்கனி பற்றி :
:”இதை யாராவது படிக்கிறார்களா ?
ஏற்கனவே இலக்கணம் தெரிந்தவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளப் போவது இல்லை
இலக்கணம் தெரியாதவர்கள் இதைப் படிக்க மாட்டார்கள்
எனவே பெரிதாகப்பயன் இல்லாத பகுதி “
இதற்கு என் விடை
நூற்றுக்கு மேல் சகோக்கள் உள்ள குழுவில் ஒருவருக்குப் பயன் பட்டாலும் அது எனக்கு ஒரு நிறைவைத் தரும்
மேலும் இதன் மூலம் நானும் பல புதிய செய்திகளை தெரிந்து கொண்டேன்
எனவே துவங்கியதை ஓரளவாவது முழுமை செய்யாமல் அரைகுறையாக விட முடியாது
இனி இன்றைய வினா
“பொன் மலர் மணம் பெற்றது போல் “
இதில் உள்ள அணி என்ன அணி ?
மிக எளிய வினா
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் 20 09 2022 செவ்வாயன்று வேப்பங்கனியை சுவைப்போம்
இ(க)டைச் செருகல்
“இன்னொரு பொதுவான கருத்தும் வந்தது
கணிதப் புதிர் பகுதி தொடங்கலாம் “
கணிதம் அறிவியல், பொது அறிவு என எல்லாவற்றிலும் வினா விடை நடத்த எண்ணம் உண்டு
காலம் , நேரம் கூடி வந்தால் இறைவன் நாடினால் நடக்கும்
அப்படி ஒரு மாற்றம் கொண்டு வர பெருமளவில் மற்ற சகோக்களின் பங்காளிப்பு தேவைப் படும்
அறிவு , திறமை மொழியாற்றல் மிகுந்த அறிஞர்கள் குழுவில் நிறைய இருக்கிறார்கள்
வெறும் பார்வையாளர்களாக , அவ்வப்போது என் வினாவுக்கு விடை சொல்பவர்களாக இருக்கும் அவர்களின் திறமை எல்லோருக்கும் பயன் படும் வகையில் அவர்கள் தங்கள் எழுத்துக்களை பகிர வேண்டும்
இது பற்றி சற்று விரிவாக சிந்தித்து , கலந்து ஆலோசித்து பிறகு செயல்பட வேண்டும்
௧௪௦௯ ௨௦௨௨
14092022 புதன்
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment