தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 9
அணி--- உயர்வு நவிற்சி அணி
இயல்பு நவிற்சி அணிக்கு எதிர்ச் சொல்லாக ஒரு அணி இருக்கிறது
அது என்ன அணி ?
இது முந்தைய பதிவின் நிறைவு வினா
விடை
உயர்வு நவிற்சி அணி
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் –முதல் சரியான விடை
கணேச சுப்ரமணியம்
ஷர்மதா
வஞ்சப் புகழ்ச்சி , புகழாபுகழ்ச்சி
பிறிது மொழிதல்
என வேறு சில விடைகள் வந்தன
அனுப்பிய சகோ தல்லத் , ஹசன் அலி ,ஷிரீன் பாருக்குக்கு நன்றி
இவற்றை எல்லாம் விட
உயர்வு நவிற்சி அணியே பொருத்தமான விடை எனத் தோன்றுகிறது
உ ந அணி – விளக்கம் (வியப்பு அணி என மற்றொரு பெயர் )
எளிதாக மிகைப்படுத்துதல் என்று புரிந்து கொள்ளலாம்
“அவன் வானத்தை வில்லாக வளைப்பான்
மணலைக் கயிறாகத் திரிப்பான்”
என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம்
இதையே சில மரபுகளுக்கு , விதிகளுக்கு உட்பட்டு இலக்கியத்தில் சொல்லி ஒரு பொருளின் அழகை கேட்போர் வியக்கும் வண்ணம் வர்ணிப்பது
உ. ந. அணியாகிறது
இலக்கியங்கள், திரைப்பாடல்களில் இந்த அணி எங்கும் பரவி மண்டிக்கிடக்கிறது
குறிப்பாக பெண்கள் அழகை வர்ணிக்கும்போது கவிஞர்களின் கற்பனை கொடிகட்டிப்பறக்கிறது
கம்பன் வள்ளுவன் , சிலம்பு என்று நுழைந்தால் அது மிகவும் நீண்டு விடும்
எனவே ஒரு எளிமையான தாலாட்டுப் பாடலைப் பார்ப்போம்
குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா.
தாய்மார்கள் பாடும் தாலாட்டுபாடல்களில் மிகப் பெரிய இலக்கியங்கள் இயல்பாக எளிமையாக வரும்
அதெல்லாம் --------கடந்த காலமாகி விட்டது
அடுத்து அந்தாதி அணி
இந்த அணி வரும் திரைபடப்பாடல்கள் பற்றி நான் ,முன்பு எழுதியிருக்கிறேன்
அவை என்ன பாடல்கள் ?
இதுவே இன்றைய எளிய நிறைவு வினா
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை மீண்டும் நாளை சுவைப்போம்
௦௬௦௯௨௦௨௨
06092022 செவ்வாய்
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment