தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 15
வினைத் தொகை
முந்திய பதிவில்
“ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்”
பற்றிப்பார்த்தோம்
அதன் நிறைவில்
“ஊறுகாய் “
இதற்கு இலக்கணக் குறிப்பு என்ன ?
என்று கேட்டிருந்தேன்
விடை விளக்கம் பார்க்கு முன் சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப பெறுபவரகளைப் பார்ப்போம்
சகோ
ஷிரின் பாருக் =-முதல் சரியான விடை
குமாரசாமி ஹிதயத் ஷர்மதா..
சிராஜுதீன் தல்லத் ஹசன் அலி
செல்வகுமார்
விடை விளக்கம்
“ஊறுகாய் “ இலக்கணக் குறிப்பு
வினைத்தொகை
இந்தச் சொல் இரண்டு பகுதிகள் கொண்டது
ஊறு—வினைச் சொல்
காய் – பெயர்ச் சொல்
• ஊறிய காய்-கடந்த காலம்
• ஊறுகின்ற காய்-நிகழ்காலம்
• ஊறும் காய்-எதிர்காலம்
கணிதத்தில் சில விதிகளை பார்முலா ) மனதில் வைத்துக் கொள்வோம்
இலக்கணத்திலும் அது போல் சில விதிகள் உண்டு
போன பதிவில் ஈறு கெட்ட எதிர் மறையைக் கண்டுபிடிக்க ஒரு விதி குறுக்க வழி என்று போட்டிருந்தேன்
வினைத் தொகைக்கு
ஓன்று அது வினைச் சொல்லும் பெயர்ச்சொல்லுமாக இரண்டு சொற்கள் கொண்டதாய் இருக்க வேண்டும்
அடுத்து
அதில் உள்ள வினைச் சொல்
மூன்று காலங்களையும் குறிப்பதாய் இருக்க வேண்டும்
எடுத்துக் காட்டுகளைப் பார்த்தால் தெளிவாகும்
• 1)படர்கொடி
•
o படர்ந்த கொடி-கடந்த காலம்
o படர்கின்ற கொடி-நிகழ்காலம்
o படரும் கொடி-எதிர்காலம்
o
• 2)சுடுசோறு
•
o சுட்ட சோறு-கடந்த காலம்
o சுடுகின்ற சோறு-நிகழ்காலம்
o சுடும் சோறு-எதிர்காலம்
o
• 3)குடிநீர்
•
o குடித்த நீர்-கடந்த காலம்
o குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்
o குடிக்கும் நீர்-எதிர்காலம்
வினைத்தொகை – ஓரளவுக்கு விளக்கி விட்டேன் என்று நினைக்கிறேன்
நிறைவாக இன்றைய வினா
மீண்டும் ஒரு எளிய வினா
காற்று சிலு சிலுவென்று வீசியது
கிளிகள் கூட்டம் கூட்டமாகப் பறக்கின்றன
சிலு சிலு , கூட்டம் கூட்டமாக என்ற சொற்கள் இவற்றில் இரு முறை வருகின்றன
இதற்கு இலக்கணக் குறிப்பு என்ன
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை வேப்பங்கணியை சுவைத்து சிந்திப்போம்
௨௭௦௯௨௦௨௨
27092022 செவ்வாய்
சர்புதீன் பீ
4 shares
Like
Comment
Share
No comments:
Post a Comment