திருமறை குரான்
தொழுகை 10
அத்தஹியாத்து 3 முறை
ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகை குர்ஆனில் மிகவும் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
தொழுகை பற்றிய சில அடிப்படை செய்திகளை வினா விடை வடிவில் சில வாரங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
தொழுகையில் இருப்பில் உட்கார்ந்து அத்தஹியாத்து ஓதும்போது
ஆட்காட்டி விரலை உயர்த்துகிறோம்
அது எதற்காக என்ற விளக்கத்தை நேற்றுப்பார்தோம்
நேற்றையா வினா
எளிதானது மட்டுமல்ல சற்று வேடிக்கையானதும் கூட என்று சொல்லியிருந்தேன்
“பள்ளியில் ஜமாஅத்தில் தொழுது கொண்டிருக்கும் ஒருவர்
ஒரே தொழுகையில்
தொடரந்து மூன்று ரக்கத்தில்
அத்தஹியாத்தில் உட்காருகிறார்
அது என்ன தொழுகை
விடை
மஹ்ரிப் தொழுகைக்கு தாமதமாக வருதல்
அவர் பள்ளியில் ஜமாத்தில் மஹ்ரிப் தொழுகைக்கு சற்று தாமதமாக வந்து இரண்டாவது ரக்கத்தில் சேர்ந்து கொள்கிறார்
இரண்டாவது, மூன்றாவது ரக்கத்துகளில் வழக்கம் போல் இரண்டு அத்தஹியாத்து
பிறகு தனியாகத் தொழும் ஒரு ரக்கத்திலும் அத்தஹியாத்து
என தொடர்ந்து 3 அத்தஹியாத்துக்கள் ஒரே தொழுகையில்
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி- முதல் சரியான விடை
சிராஜுதீன் &
தல்லத்
மஹ்ரிப் என்று பகுதி விடை அளித்த ராசாத்திக்கு பகுதிப் பாராட்டுகள்
பெரிதும் முயற்சி செய்த நஸ்- ரீனுக்கு நன்றி
இந்தப் பதிவோடு தொழுகை வினா விடையை நிறைவு செய்கிறேன்
வினாக்களுக்கு விடை அனுப்பி, முயற்சி செய்து, கருத்துகள் பாராட்டுகள் தெரிவித்து ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி
துவங்கியதை நல்ல விதமாக முழுமையாக நிறைவு செய்ய அருளிய ஏக இறைபவனுக்கு நன்றி
இந்தப் பத்துப் பதிவுகளில் சில புதிய தகவலகள் ஒரு சிலருக்காவது தெரிந்திருக்கும்
அதன் நன்மையை இறைவன் அவர்களுக்கும் எனக்கும் வழங்கட்டும்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
26 ஸfபர் (2) 1444
23 09 2022 வெள்ளி
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment