திருமறை குரான்
தொழுகை 8
16 09 2022 வெள்ளி
ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகை குர்ஆனில் மிகவும் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
தொழுகை பற்றிய சில அடிப்படை செய்திகளை வினா விடை வடிவில் சில வாரங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
நேற்றைய வினா
ஜமாத்தில் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் மயங்கி விழுந்து விடுகிறார்
அப்போது இமாமும் மற்றவர்களும் என்ன செய்ய வேண்டும் ?
விடை
மயங்கி விழுந்தவர் அருகில் இருக்கும் சிலர் தங்கள் தொழுகையை நிறுத்தி விட்டு விழுந்தவரை மீட்டு வேண்டிய முதலுதவி செய்து காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்
தேவைப்பட்டால் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
ஜமாஅத் தொழுகை நிற்காமல் தொடரும்
உதவியவர்கள் நின்று போன தங்கள் தொழுகையை
முழுமையாக மீண்டும் தொழுது நிறைவு செய்து கொள்ள வேண்டும்
இதுவும் நான் வெள்ளிக் கிழமை உரையில் காதில் விழுந்த செய்திதான்
வேறு ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை
வேறு விடையோ, ஆதாரமோ உங்களுக்குத் தெரிந்தால் பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன்
“கேட்கக் கேட்கத்தான் இஸ்லாம் “ என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது
எல்லோரும் எல்லாவற்றையும் படித்து அறிவது என்பது சிரமம்
பிறர் சொல்வதை சற்று கவனமாகக் காதில் வாங்கிக்கொண்டால் பல தகவகள் கிடைக்கும்
அப்படி என் காதில் விழுந்த சில:
தொழுகையில் முதல் ரக்கத்தில் ஓதும் துணை சூராவுக்கு முன் உள்ள சூராவை அடுத்த ரக்கத்தில் ஒதக்கூடாது
எடுத்துக்காட்டாக
முதல் ரக்கத்தில் நம் எல்லோருக்கும் மிகப் பிரியமான “குல்ஹு வல்லாஹ அஹத் “ சுராஹ் ஓதுவதாக வைத்துக்கொள்வோம்
சூரத்துல் இக்லாஸ் எனப்படும் இது குர்ரானில் 112 ஆவது சூராஹ்
அதே தொழுகையில் அடுத்தடுத்த ரக்கத்துகளில
113 (குல் அவுது பிரப்பில் பலக் என்று துவங்கும் சூரத்துல் பலக் )
அல்லது
114 (குல் அவுது பிரப்பின்னாஸ் என்று துவங்கும் சூரத்தன்னாஸ்)
இவற்றைத்தான் ஓத வேண்டும்
மிகச் சிறிய சூராவான 108 அல் கவ்தர் சூராவை ஓதக் கூடாது என்கிறார்கள்
(அப்படி ஓதினால் என்ன ஆகும்,
குல்கு வல்லாகு சூராவையே திரும்பத் திரும்ப ஓதலாமா
இதற்கெல்லாம் என்னிடம் விடை இல்லை
தெரிந்தவர்கள் விளக்கலாம் }
இன்னொரு காதில் விழுந்து , சில இடங்களில் படித்தும் அறிந்த செய்தி
ஜமாஅத் தொழகை துவங்கி விட்டால் அதற்குப்பின் யாரும் சுன்னத், நபீல் போன்ற தொழுகைகளைத் துவங்கக் கூடாது
இன்றைய நிறைவு வினா
தொழுகையில் இருப்பில் உட்கார்ந்து அத்தஹியாத்து ஓதும்போது
ஆட்காட்டி விரலை உயர்த்துகிறோம்
அது எதற்காக ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன்
அடுத்த வியாழன் 22092022 அன்று தொழுகையில் சிந்திப்போம்
அடுத்த வாரத்தோடு தொழுகை வினா விடையை நிறைவு செய்ய எண்ணுகிறேன்
அதன் பின் இறைவன் அருளால் வழக்கமான குரான் வினா விடை தொடரும்
19ஸfபர் (2) 1444
16 09 2022 வெள்ளி
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment