ஊதியமும் பொருளாதாரமும்
24092022 சனிக்கிழமை
மாதம் பத்தாயிரம் என்பது மிக உயர்ந்த சம்பளமாகப் பேசப்பட்டது ஒரு காலம் –
I T எனும் மாய உலகம் இந்தியாவுக்கு வரும் வரை
இருந்தாலும் மாதம் ஒரு லட்சம் என்பது மிக நல்ல சம்பாத்தியம் என்றுதான் எனக்கெல்லாம்இன்றும் தோன்றுகிறது
இந்த நிலையில் கூகுள் தலைமை அதிகாரி நம்மூர் சுந்தர் பிச்சை பற்றி ஒரு வியப்பான மிக மிக வியப்பான செய்தி வந்தது
அவரது ஊதியம் 4 கோடி-
ஒரு ஆண்டிற்கா ! இல்லை !!
ஒரு மாதத்துக்கா ! இல்லை இல்லை !!
ஒரு நாளைக்கா ? !
ஆம் ஒரு நாள் ஊதியம் 4 கோடி
இது பல ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த செய்தி
பல பொது அறிவுப் போட்டிகளிலும் , விநாடி வினாக்களிலும் பேசப்படும் அளவுக்கு ஒரு உயர்வான செய்தியாய் இன்றும் அது வலம் வருகிறது
ப்பூ இவ்வ்வலவுதான இதெல்லாம் என்ன பெரிய சம்பாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு அண்மைச செய்திகள்
ஒரு நாள் சம்பாத்தியம் 16 ௦,௦௦,௦௦,௦௦,௦௦௦
பதினாறாயிரம் கோடி
மூச்சு வாங்குகிறது சொல்லவே
மயக்கம் வருகிறது 0 களை எண்ணிப்பார்க்க
அதாவது நமக்கெல்லாம் மிக உயர்வாகத் தெரியும்
ஒரு நாளைக்கு 4 கோடி என்பதைப்போல் நான்கு ஆயிரம் மடங்கு
இன்னும் தெளிவாக
சுந்தரின் 10 ஆண்டு (நான்காயிரம் நாள்) ஊதியத்தை ஒரே நாளில் பெறுகிறார்
இந்தியப் பொருளாதாரம் உயர்ந்து மிக மிக உயரத்தில் பறக்கிறது
இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் எல்லோரும் கேள்விப்பட்டோம்
ஒரு உலக சாதனையான வேகத்தில் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு போய்விட்டார்
அதே வேகத்தில் மிக விரைவில் முதலாம் இடத்தை அடைந்து
நாட்டுக்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகள்
அந்த திருநாளை நாடு முழுதும்
, இல்லை
உலகம் முழுதும் உள்ள நம் நாட்டவர்கள் விழாவாகக் கொண்டாடவேண்டும்
“தேசியப் பொருளாதார நிறைவு நாள் “ என அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்
என்றோ ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்த இலவச கொ கடலையை அன்று நமக்கெல்லாம் கொடுத்து
“We Care for you also “
என்பதை நினைவூட்டி நம்மை மகிழ்சிக் கடலில் திக்கு முக்காட வைக்க வேண்டும்
இந்த வியத்தகு முன்னேற்றத்தை பொறுக்க முடியாத சில வெளி நாட்டு நிறுவனங்கள்
இந்தியாவில் வறுமையும் ஏழ்மையும் தலை விரித்து ஆடுகிறது
பட்டினிச் சாவு அதிகரித்து வருகிறது
ஏழ்மை குறியீட்டில் ஏழ்மை நாடுகள் என்று அறிவிக்கப்பட்ட பல நாடுகளை விட பின் தங்கி உள்ளது
என்றெலாம் புள்ளி விவரம் கொடுப்பார்கள்
அதை எல்லாம் நம்பக்கூடாது
வாழ்ந்காலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
இது தானே வையகம்
இறைவான் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
24092022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment