திருமறை குரான்
தொழுகை 5
மறதி, ஐயம்
ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகை குர்ஆனில் மிகவும் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
தொழுகை பற்றிய சில அடிப்படை செய்திகளை வினா விடை வடிவில் சில வாரங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
முந்தைய பகுதி வினா
தொழுகும் போது மறதி, ஐயம் ஏற்படுவது மிக இயல்பான ஓன்று
பெரிய பெரிய இமாம்களும் இதற்கு விலக்கு இல்லை
நாம் தொழுவது முதல் ரக் அத்தா , இரண்டாவதா மூன்றாவதா இல்லை நான்கவதா என்ற ஐயம் அடிக்கடி வரும்
இப்படி ஒரு ஐயம் (சந்தேகம் ) வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
விடை
வீட்டில் தனியாக 4 ரக்கத் தொழும் ஒருவருக்கு
தொழுவது/ தொழுதது முதலாவதா அல்லது இரண்டாவது ரக்கத்தா என்ற ஐயம் வந்தால் அதை முதல் என்று வைத்துக்கொள்ள வேண்டும்
மேலும் 3 ரக்கத் தொழுக வேண்டும்
அதே போல் இரண்டாவதா இல்லை மூன்றவதா என்று சந்தேகம் வந்தால் இரண்டு என்றும்
மூன்றா நாலா என்ற குழப்பம் வந்தால் மூன்று என்று வைத்துக்கொள்ளவேண்டும்
மீதமுள்ள ரக்கத் தொழுது தொழுகையை நிறைவு செய்யவேண்டும்
4 ரக்கத் தொழுகையில் நாலுக்கு அதிகமான ரக்கத் தொழுதால் அது குற்றமில்லை
அதிகமாகத் தொழுதவற்றை இறைவன் விருப்பத் தொழுகை (நபீல்) ஆக ஏற்றுக்கொள்வான்
ஆனால் நாலுக்குப் பதில் 3 தொழுதால் தொழுகை நிறைவேறாது
இந்த அடிப்படையில்தான் மேல்சொன்ன விடை விளக்கம்
சரியான விடை அனுப்பிய ஒரே சகோ
தல்லத்துக்கு
வாழ்த்துகள்
பாராட்டு கள் அவர் சொன்னபடி நானும் இந்த செய்தி ஒரு சொற்பொழிவில் கேட்டுத் தெரிந்து கொண்டதுதான்
மற்றபடி எந்த நூலிலும் இதற்கான விடை என் கண்ணில் படவில்லை
அதனால்தான் பெரும்பாலும் வீட்டிலேயேதொழும் பெண்களுக்கு இது போன்ற செய்திகள் தெரியாமல் போய்விடுகின்றன என நினைக்கிறன்
வேறு ஏதாவது விடை ஆதாரத்துடன் இருந்தால் தெரிவிக்கவும்
முயற்சித்த சகோ
ராஜாத்தி, ஷர்மாதா வுக்கு நன்றி
இன்றைய வினவும் ஒரு ஐயம், சந்தேகம் பற்றித்தான்
தொழுக ஆயத்தமாகி நிற்கையில் மனதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்படும்
“உடல் சுத்தாமாக ஒலுவுடன் இருக்கிறோமா
இல்லை திரும்ப ஒலு செய்ய வேண்டுமா “
என்று
இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்து நாளை தொழுகையில் சிந்திப்போம்
11 ஸfபர் (2) 1444
08 09 2022 வியாழன்
சர்புதீன் பீ
4 shares
Like
Comment
Share
No comments:
Post a Comment