Wednesday, 14 September 2022

திருமறை குரான் தொழுகை 7 ஜமாஅத் தொழுகை – தாமதமாக வந்தால் ?

 திருமறை குரான்

தொழுகை 7
ஜமாஅத் தொழுகை – தாமதமாக வந்தால் ?
15 09 2022 வியாழன்
ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகை குர்ஆனில் மிகவும் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
தொழுகை பற்றிய சில அடிப்படை செய்திகளை வினா விடை வடிவில் சில வாரங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
முந்திய பதிவின் எளிய வினா –
ஜமாஅத் எனும் கூட்டுத் தொழுகை பற்றி
இஷா தொழுகைக்கு ஒருவர் பள்ளிக்குப் போகிறார்
தொழுகை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது
இப்போது அவர் என்ன செய்ய வேண்டும் ?
விடை
தொழுகை எந்த நிலையில் இருந்தாலும் ( ருக்கு ,சஜ்தா ,அத்தஹியாத் )
எத்த னையாவது ரக்கத் ஆக இருந்தாலும்
தாமதமாக வந்தவர் நிய்யத் ,தக்பீர் செய்து தொழுகையில் சேர்ந்து கொள்ள வேண்டும்
இமாம் ருக்குவில் குனித்து நிமிர்வதற்குள் தொழுகையில்
சேர்ந்து விட்டால் அந்த ரக்கத் தும் தாமதமாக வந்தவர் ஜமாஅத்தில் சேர்ந்து தொழுததாகக் கருதப்படும்
இமாம் ருக்குவில் இருந்து நிமிர்ந்த பின் சேர்ந்தால் அந்த ரக்கத் தொழுத கணக்கில் சேராது
தொழுகை முடிந்து இமாம் சலாம் கொடுக்கும்போது தாமதமாக வந்தவர் சலாம் கொடுக்காமல் எழுந்து விட்டுப்போன ரக்கத்களை தொடர்ந்து தொழுது சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்
மேலே சொன்ன இஷா தொழுகையை வைத்து இன்னும் சிறிது விளக்கமாக
ஜமாத்தில் முதல் ரக்கத் தொழுகை நடக்கிறது
இமாம் ருக்குவில் குனித்து நிமிர்வதற்குள் தாமதமாக வந்தவர் ஜமாஅத் தொழுகையில்சேர்ந்து விட்டால் அவர் முதல் ரக்கத்தும் தொழுததாகக் கணக்கு
இமாம் சலாம் கொடுக்கும்போது இவரும் சலாம் கொடுத்து விடலாம்
இமாம் ருக்குவில் இருந்து நிமிர்ந்த பிறகு இவர் ஜமாத்தில் சேர்ந்தால்
இவருக்கு முதல்ரக்கத் தொழுததாகக் கணக்கில் வராது
இமாம் சலாம் கொடுக்கும்போது இவர் சலாம் சொல்லாமல் எழுந்து விட்டுப்போன ஒரு ரக்கத் தொழுது சலாம் கொடுத்து நிறைவு செய்யவேண்டும்
இதே போல இரண்டு, மூன்று நான்காவது ரக்கத்தில் சேருபவர்கள் கணக்கு செய்து கொள்ள வேண்டும்
இதில் முக்கியமான செய்தி ருக்கு தான்
ருக்குவில் இருந்து நிமிர்வதற்கு முன் / பின் என்பது தொழுகையின் ரக்கத்தின் அளவீடாக இருக்கிறது
இவ்வளவு குழப்பம் ஏன் ?
கொஞ்சம் பொறுத்திருந்து ஜமாஅத் முடிந்த பின் தனியாகத் தொழுகலாமே என்ற எண்ணம் வரும்
எளிதான வழிதான்
ஆனால் ஜமாத் தொழுகை தனியாகத் தொழுவதை விட பற்பல மடங்கு நன்மை பயப்பதாய்ச் சொல்கிறார்கள்
அந்த நன்மைகளை முடிந்த அளவுக்கு கைப்பற்றத்தானே இந்த தொழுகை ,நோன்பு எல்லாம்
50% சரியான விடை அனுப்பிய
சகோ ராஜாத்திக்கும் , ஷர்மதாவுக்கும்
பாதி பாராட்டு
முயற்சித்த சகோ நஸ் ரீனுக்கு நன்றி
சரி இன்றைய வினாவைப் பார்ப்போம்
இதுவும் ஜமாஅத் தொழுகை பற்றித்தான்
ஜமாத்தில் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் மயங்கி விழுந்து விடுகிறார்
அப்போது இமாமும் மற்றவர்களும் என்ன செய்ய வேண்டும் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை தொழுகையில் சிந்திப்போம்
18 ஸfபர் (2) 1444
15 09 2022 வியாழன்
சர்புதீன் பீ
May be an image of 1 person
4 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment