தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 10
அணி--- அந்தாதி அணி
உயர்வு நவிற்சி அணி பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்
அடுத்து அந்தாதி அணி
இந்த அணி வரும் திரைபடப்பாடல்கள் பற்றி நான் ,முன்பு எழுதியிருக்கிறேன்
அவை என்ன பாடல்கள் ?
இதுவே நேற்றைய எளிய நிறைவு வினா
விடை
மூன்று முடிச்சு படத்தில் வரும் இரண்டு அழகிய பாடல்கள்
1. ஆடி வெள்ளி தேடி உன்னை
2. வசந்த கால நதிகளிலே
சரியான விடை எழுதி வாழ்த்து ,பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹிதயத் – முதல் சரியான விடை
சிராஜுதீன்
சிவசுப்ரமணி
பாடல் இதோ
“ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்…
காவிரியின் ஓரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் கேட்குமது
ஆசை என்னும் வேதம்..
ஆசை என்னும் வேதம்
..
ஆசை என்னும் வேதம்
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தை பல நாடும்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்”
முதல் பத்தியில் நிறைவுச் சொல்லாக வரும்
ஓரம் என்பது அடுத்த பத்தியின் துவக்கச் சொல்லாக வருக்றது
இப்படியே வரிசையாக
வேதம் ,நாடும், சின்னம் காலம் என்ற சொற்கள்
நிறைவு , துவக்கச் சொல்லாக வருகின்றன
இதற்கு மேல் அந்தாதி அணிக்கு விளக்கம் தேவை இல்லை
அந்தாதியில் பல வகைகள் இருக்கின்றன
அவை பற்றி நான் சொல்லப்போவது இல்லை
அபிராமி அந்தாதி என்றொரு சிற்றிலக்கியம் 100 பாடல்கள் கொண்ட இந்த நூல் முழுதும் அந்தாதி முறையில் அமைத்துள்ளது
நூலின் நிறைவுச் சொல்லாக நூறாவது பாடலில் வரும்
உதிக்கின்ற என்ற சொல் நூலின் துவக்கச் சொல்லாக முதல் பாடலில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு
இந்த நூலுக்கு கண்ணதாசன் உரை எழுதியிருக்கிறார் . அதுவே அவர் அந்தாதி பாடல்கள் இயற்றத் தூண்டுகோலாய் இருந்தது என்று சொல்வார்கள்
அந்தாதி = அந்தம் +ஆதி
அந்தம் – முடிவு
ஆதி – துவக்கம்
இனி இன்றைய வினா
காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ-நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை.
இந்த நளவெண்பா பாடலில் உள்ள அணி என்ன
அணி ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வேப்பங்கனியை மீண்டும் செவ்வாய் (13 09 2022) அன்று சுவைப்போம்
௦௭௦௯௨௦௨௨
07092022 புதன்
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment