முன்னேற்றப் பாதையிலே
10 09 2022 சனிக்கிழமை
நல்ல செய்திகள் ,குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி தொடரந்து வருகின்றன
அவற்றில் ஓன்று
“ஏப்ரல் –ஜூன் 2022 காலாண்டில் இந்தியப் பொருளாதாரம்
13.5% வளர்ந்துள்ளது
கடந்த 4 காலாண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி இந்த ஏப்ரல் ஜூன் 2022 காலாண்டில்தான் “.
இது அரசின் அறிவிப்பு
ஏதாவது விளங்குகிறதா ?
எனக்கு விளங்கவில்லை
பொருளாதார வளர்ச்சி என்று இங்கே குறிப்பிடப்படுவது
Gross Domestic Product – சுருக்கமாக GDP
தமிழில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று சொல்லாம்
(எப்படிச் சொன்னாலும் விளங்கவில்லை )
இன்னொரு அறிவிப்பு
“உலகின் 5 ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா
இங்கிலாந்தைபின்னுக்குத் தள்ளியது
இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு ரூபாய் 69 லட்சம் கோடி
இங்கிலாந்து 66லட்சம் கோடி”
இதிலும் பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை
ஆனால் ஓன்று நினைவில் வருகிறது – மக்கள் தொகை
இந்தியா 141 கோடி
இங்கிலாந்து வெறும் 6 கோடிக்கும் குறைவு
பிறகு எப்படி இரண்டையும் ஒப்பிட முடியும் என்பது பொருளாதார வல்லுனர்களுக்ககே வெளிச்சம்
இன்னும் சில செய்திகளைப் பார்க்குமுன் ஒரு சிறிய கற்பனை கணக்கு –வீட்டுக் கணக்கு
ஒரே வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர்
அதில் 3 பேர் நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறார்கள்
அவர்கள் ஆண்டு வருமானம் ரூபாய் 15 கோடி 10 கோடி 5 கோடி
மற்ற 7 பேருக்கும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை
இப்போது அந்த வீட்டின் மொத்த வருமானம் 30 கோடி
சரிதானே
சரி ஆளுக்கு சராசரி வருமானம் 3 கோடி இதுவும் கணக்கு சரிதான்
ஆனால் அந்த 7 பேரும் 3 கோடி பற்றி கனவு கூடக் காண முடியாது என்பது தானே உண்மை நிலவரம்
சரி இன்னொரு வீட்டில் இரண்டே பேர்
ஆளுக்குப் பத்து கோடி என அந்த வீட்டின் மொத்த வருமானம் 20 கோடி
எனவே 30 கோடி மொத்த வருமானம் உள்ள முதல் வீடு
20 கோடி வீட்டை பின் தள்ளி பொருளாதரத்தில் உயர்ந்து நிற்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா !
இதற்கும் வல்லுனர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்
தொடர்ந்து வெளி வந்த இன்னும் சில செய்திகள் :
சமூக ஏற்றத் தாழ்வில் இந்தியா மிக மோசமான நிலையில் இருக்கிறது என்கிறது The Institute of Competitiveness
கொடுத்த அறிக்கை
பெரும்பாலான மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு சமூக பொருளாதார ஏற்றத தாழ்வு இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் இருந்து பெரிதாகிக் கொண்டே இருக்கிறது
ஊட்டச்சத்து , கல்வி , ஆண் பெண் இன வேறுபாடு பொது சுகாதாரம் என எல்லாவற்றிலும் மிக தாழ்ந்த நிலையில் இருக்கிறது நம் நாடு
Oxfam report மே 2022 சொல்கிறது
கொள்ளை நோய் காலத்தில் முப்பது மணி நேரத்துக்கு ஒரு பில்லியனர் உருவானார் (பில்லியன் = 100 கோடி)
அதே முப்பது மணி நேரத்தில் ஒரு மில்லியன்(10 லட்சம் ) மக்கள் மிக மிக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்
55 கோடி= 1௦௦
இதுவும் ஆக்ஸ் பாம் சொல்லும் ஒரு கணக்கு
அதாவது அடித்தட்டு நிலையில் இருக்கும் 55 கோடி மக்களின் செல்வம் --
ஒரு பேச்சுக்கு 55 கோடி மக்களின் மொத்த செல்வம்
55 கோடி பில்லியன் என்று வைத்துக்கொள்வோம்
அதே 55 கோடி பில்லியன் உச்சத்தில் இருக்கும் 100 பேரிடம் இருக்கிறது
இந்த 100 பேரின் சொத்து மதிப்பில் ஒரே ஒரு % வரியாக வசூல் செய்தால்
நாடு முழுதுக்கும் , அனைத்து மக்களுக்குமான பொது சுகாதாரக் காப்பிட்டு நிதியமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் செலவுக்குப் போதுமானது - - ஒரு ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு அல்ல
7 ஆண்டுகளுக்குப் போதுமானது
இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால் மிகப் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பில் 1௦௦ ரூபாய்க்கு 15பைசா
(0 . 15 %) வசூல் செய்தால் அது நாட்டு மக்கள் முழுதுக்குமான
ஒரு ஆண்டு சுகாதாரச் செலவை ஈடு கட்டும்
ஒரு ஆண்டுக் காலத்தில் இரண்டு நிகழ்வுகள்
நாட்டில் 84 % ( அதாவது மிகப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் ) குடும்பங்களின் வருமானம் மிகத் தாழ்ந்த நிலைக்குப் போய் விட்டது
அதோடு சேர்ந்து மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள் , வாழ்வாதாரம் பறிபோதல்
இதே ஓராண்டு காலத்தில் 42 புதிய புதிய பில்லியனர்கள் உருவானாரகள் ( பில்லியன் = 100 கோடி)
Inequality Kills’ என்று இதைக்குறிப்பிடுகிறது ஆக்ச்பாம்
இந்த ஏற்றத் தாழ்வு வசதியற்றவர்களை மட்டும் பாதிக்கும் என்ற நிலை மாறி நாளடைவில் it is also killing the planet என்கிறர்கள்
விளைவு செல்வச் செழிப்பும் பொருளாதார வளர்ச்சியும் யாருக்கும் ,
மிகுந்த பணபலம் அதிகாரம் உள்ளவர்களுக்க்ம் கிடைக்காமல் போய் விடும்
உயிரற்ற நிலத்தில் எந்த விதையும் முளைக்க முடியாதது போல்
அதாவது எனக்கென்ன , நான் மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கிறேன்
என்னை எதுவும் பாதிக்காது என யாரும் பொறுப்பின்றி இருக்க வேண்டாம்
(Now it appears that inequality is not just killing those with less political voice;. This makes the strategy of privileging profits over people not just unjust but monumentally stupid. Economies will not “grow,” and markets will not deliver “prosperity” to anyone, no matter how powerful, on a dead planet.)
எது எப்படிப்போனால் என்ன !
உலகின் மூன்றாவது பெரிய செல்வந்தாராய் நம்மில் ஒருவர் ஆகி விட்டார்
அவருடைய சொத்து மதிப்பு (Hindu 04092022)
Net worth $140 பில்லியன்
1 பில்லியன்=100 கோடி
140X100 கோடி = 140௦௦ கோடி
1 டாலர் =80 ரூபாய்
(
1400 கோடி X 80= ?
பெருக்கிப் பார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள்
ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே என்று அடையாத சுதந்திரத்தை கனவிலும் கற்பனையிலும் கண்டு மகிழ்ந்த பாரதி போல்
நாமும் ஆடுவோம் பாடுவோம் மகிழுவோம்
(Oxfam is a confederation of 20 independent charitable organizations focusing on the alleviation of global poverty, founded in 1942 and led by Oxfam International.[3] It is a major nonprofit group with an extensive collection of operations.)
Institute for Competitiveness, India is the Indian knot in the global network of the Institute for Strategy and Competitiveness at Harvard Business School)
செய்தித்தாள் .இணையத்தில் கண்ட செய்திகளைத்தான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்
என் கருத்து எதுவும் சொல்லவில்லை
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
10 09 2022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
4 shares
Like
Comment
Share
No comments:
Post a Comment