Tuesday, 27 September 2022

தமிழ் மொழி அறிவோம் வேப்பங்கனி 16 இலக்கணக் குறிப்பு அடுக்குத் தொடர் இரட்டைக் கிளவி

 தமிழ் மொழி அறிவோம்

வேப்பங்கனி 16
இலக்கணக் குறிப்பு
அடுக்குத் தொடர்
இரட்டைக் கிளவி
28092022 புதன்
நேற்றையபதிவில்
வினைத் தொகை
பற்றிப் பார்த்தோம்
நிறைவாக
காற்று சிலு சிலுவென்று வீசியது
கிளிகள் கூட்டம் கூட்டமாகப் பறக்கின்றன
சிலு சிலு , கூட்டம் கூட்டமாக என்ற சொற்கள் இவற்றில் இரு முறை வருகின்றன
இதற்கு இலக்கணக் குறிப்பு என்ன
என்று கேட்டிருந்தேன்
விடை
கூட்டம் கூட்டமாக – அடுக்குத் தொடர்
சிலு சில – இரட்டைக் கிளவி
வினாவைப்போல் விளக்கமும் மிக எளிதானது
கூட்டம் கூட்டமாக
இதை இரண்டாகப் பிரித்தாலும் பொருள் தரும்
எ-டு
மிகப் பெரிய கூட்டம்
கூட்டமாகத் திரியும் மான்கள்
இதுபோல் இரண்டாகப் பிரித்தாலும் பொருள் வந்தால்
அது அடுக்குத் தொடர்
சிலு சிலுவென்று
இதை இரண்டாகப் பிரித்தால் பொருள் வராது
சிலு காற்று வீசியது என்றோ
சிலுவென்று காற்று வீசியது என்றோ
சொல்ல முடியாது
இவ்வாறு பொருள் இல்லாவிட்டாலும் சொல்ல வந்ததை மேன்மைப் படுத்திச் சொல்வது
இரட்டைக் கிளவி
சிரித்தாள்
என்று சொல்வதற்கும்
கல கலகலவென்று சிரித்தாள்
என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை எளிதில் உணரலாம்
(யார் கண்டது போகிற போக்கில்
கல கலகலவென்று சிரித்தாள்
என்பதை
கல 2 என்று சிரித்தாள்
என்று எழுதலாம் என்று ஒரு புதிய விதி வந்தாலும் வரலாம்
அடையார் ஆனந்த் பவன் என்பதை A2B என்று சொல்வது போல் )
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் – முதல் சரியான விடை
ஹசன் அலி
சிராஜுதீன்
ஷர்மதா
ஷிரீன் பாருக்
செல்குமார்
செங்கை A சண்முகம்
பாதி விடை அனுப்பிய சகோ நஸ்-ரீனுக்கு 50% பாராட்டுகள்
இந்த வினாவுக்கு பலரும்
இரட்டைக் கிளவி என்று மட்டும் விடை அனுப்பியிருந்தார்கள்
கிளவி என்ற சொல் ஒரு மூதாட்டி என்ற பொருளில் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கும் எனநினைக்கிறேன்
கிளவி= சொல்
மூதாட்டியைக் குறிப்பது கிழவி என்ற கிளவி (சொல்)
இன்றைய வினா
குற்றிய லுகரம் என்றால் என்ன ?
(எளிய வினா என்று சொல்ல மாட்டேன்
தெளிவாக எளிமையாக விளக்கும் அளவுக்கு புரிந்து கொள்ள எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது
எனவேதான் சகோ நெய்வேலி ராஜா நான் கேட்டவுடனே விளக்கமான விடை அனுப்பி விட்டார் என்றாலும் ஒரு வார இடைவெளி இருக்கும்படி இன்று வினாவைப் போட்டிருக்கிறேன் )
விடை அனுப்பும் அறிஞர் பெருமக்கள் எளிய விளக்கமும் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்
இறைவன் நாடினால் சகோ ராஜாவின் விடை விளக்கக் உங்கள் விடை விளக்கம் அதற்கு மேல் தேவைபட்டால் என் விளக்கம் எல்லாவற்றையும் 0410 2022 செவ்வாயன்று வேப்பங்கனியில் சிந்திப்போம் சுவைப்போம்
௨௮௦௯௨௦௨௨
28092022 புதன்
சர்புதீன் பீ


[28/09, 09:33] Noushsad: சலசல சலசல
இரட்டைக் கிளவி தகதக
தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில்
உண்டல்லோ
பிரித்து வைத்தால்
நியாயம் இல்லை பிரித்துப்
பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
[28/09, 09:33] Noushsad: Jeans movie song - கண்ணோடு காண்பதெல்லாம்
சகோ நௌசாத்
அனுப்பிய எளிய விளக்கம்
May be an image of text that says "இரட்டைக்கிளவி அடுக்குத்தொட"
3 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment