திருமறை குரான்
தொழுகை 6
மறதி, ஐயம்
ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகை குர்ஆனில் மிகவும் வலியுறுத்தி சொல்லப்படுகிறது
தொழுகை பற்றிய சில அடிப்படை செய்திகளை வினா விடை வடிவில் சில வாரங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
நேற்றைய வினா மீண்டும் ஒரு ஐயம், சந்தேகம் பற்றித்தான்
தொழுக ஆயத்தமாகி நிற்கையில் மனதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்படும்
“உடல் சுத்தாமாக ஒலுவுடன் இருக்கிறோமா
இல்லை திரும்ப ஒலு செய்ய வேண்டுமா “
என்று
இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் ?
விடை
மிக எளிதான வினா , வினாவில் விடையும் இருக்கிறது
“சுத்தமாக இருக்கிறோம் என மனதில் தெளிவாக ஐயம் இன்றி உறுதியாகத் தெரிந்தால் அப்படியே தொழுது விடலாம்
ஒரு துளி சந்தேகம் வந்துவிட்டாலும் மீண்டும் ஒலு செய்ய வேண்டும்
சரியானவிடை அனுப்பிய ஒரே சகோ
நஸ் ரீனுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
விடையோடு
“இப்படி எல்லாம் சந்தேகம் வருமா ?
என்று ஒரு வினாவும் அனுப்பி இருந்தார்
அசர் தொழுகைக்கு செய்த ஒளுவோடு மக்ரிப் இஷா தொழுபவர்களுகக்கு இது போல் குழப்பம் வரலாம்
“நபி பெருமான் அவர்கள் காலை பஜ்ர் ஜமாஅத் தொழுகை நடத்த ஜமாஅத் முன் நிற்கிறார்கள்
ஏதோ நினைவு தோன்ற போய் உடல் சுத்தி செய்து விட்டுத் தொழுகை நடத்துகிறார்கள் “ என்று படித்த நினைவு
“ எண்ணம் போல் வாழ்வு “
“ எண்ணமே வாழ்வு “
என்பது போல்
“எண்ணமே செயல் – Thought is deed”
என்பது இஸ்லாத்தில் ஒரு கோட்பாடு
இதன் அடிப்படையில்தான் “ நிய்யத் “ என்னும்
முழு மனதோடு உறுதி கொள்வது அவசியமாகிறது
நிய்யத் இல்லாத தொழுகை , நோன்பு, சக்காத் , ஹஜ் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது என்கிறார்கள்
மேலும் ஒருவர் ஹஜ் செய்வதாய் நிய்யத் செய்து விட்டு அதை நிறைவேற்றுமுன் உயிர் பிரிந்து விட்டால் அவருக்கு ஹஜ் செய்த பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்
இந்த நிய்யத் எனும் மன உறுதி அடிப்படையில் ஒலு பற்றிய செய்தி அமைகிறது
இன்த நிய்யத் பற்றி விளக்கும் கொடுக்கவே இவ்வளவு எளிய வினா போட்டிருந்தேன்
இனி மீண்டும் ஒரு எளிய வினா –
ஜமாஅத் எனும் கூட்டுத் தொழுகை பற்றி
இஷா தொழுகைக்கு ஒருவர் பள்ளிக்குப் போகிறார்
தொழுகை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது
இப்போது அவர் என்ன செய்ய வேண்டும் ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் அடுத்த வியாழன் -15092022 அன்று தொழுகையில் சிந்திப்போம்
தொழுகையின் தவறுகள் விடுதல்களுக்கா செயும் சஜ்தா சஹ்வு பற்றி பின்பொருநாள் இறைவன் நாடினால் பார்ப்போம்
12 ஸfபர் (2) 1444
09 09 2022 வெள்ளி
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment