திருமறை குரான்
2:255 ஆயத்துல் குர்ஸி
12082022
“-----------அவன் தூங்குவதும் இல்லை
சிறு நித்திரை அவனைப் பிடிப்பதும் இல்லை ---------
இது குரானின் எந்தபகுதியில் வருகிறது ?
விடை
சூராஹ் அல்பக்ரா வசனம் 255
2:255
(ஆயத்துல் குர்ஸி)
சரியான விடை அனுப்பி வாழ்த்து, பாராட்டுப் பெறவோர்
சகோ
ஹசன் அலி - முதல் சரியான விடை
&
தல்லத்
பெரும்பாலும் எல்லோருக்கும் விடை தெரிந்த எளிய வினா
என்று எழுதியிருந்தேன்
ஆனால் விடை அனுப்பியது இந்த இருவர் மட்டுமே
வசனம்
“ இறைவன் என்றும் நிலைத்திருப்பவன்
பேரண்டம் அனைத்தையும் ) நன்கு நிர்வகிப்பவன்
அவன் தூங்குவதும் இல்லை சிறு நித்திரை அவனைப் பிடிப்பதும் இல்லை
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியன
அவனுடைய அனுமதி இன்றி அவனுடைய திருமுன் யார்தான் பரிந்து பேச முடியும் ?
அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும் ,பின்னால் மறைவாக இருப்பவற்றையும் அவன் நன்கு அறிவான்
அவன் நாடியதைத் தவிர அவன் ஞானத்தில் இருந்து வேறு எதையும் யாரும் அறிந்து கொள்ள முடியாது
அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கிறது
அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை
மேலும் அவன் மிக உயர்ந்தவனும் மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கிறான் “ (2:255)
இதுதான்
ஆயத்துல் குர்ஸி
எனும் பெயரில் மிகப்பரவலாக ஓதப்படும் வசனமாகும்
இறைவனின் முழுமையான ஞானம் பற்றிச் சொல்லும் இந்த வசனம் குரானின் மிகச் சிறந்த வசனமாகப் போற்றப்படுகிறது
உலக அளவில் மிக அதிகமாக மனனம் செய்யப்படும், ஓதப்படும் வசனம் இது என்று சொல்லப்படுகிறது
இதன் சிறப்புப் பற்றி நிறைய எழுதலாம்
இப்போதைக்கு இவ்வளவு போதும்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
13முஹர்ரம் (1) 1444
12082022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment