Friday, 31 March 2023

திரு மறை சில குறிப்புகள் 9 பகுதி (ஜூசு) 9

 

 

 

 

 

 

 

 

 

 

 





திரு மறை சில குறிப்புகள் 9

பகுதி (ஜூசு) 9

பெயர்காலால் மாளவ்

 

9       Qalal Malao

         துவக்கம் 7:88   7. Al-A'raf Verse 88  நிறைவு 8:17  817. Al-Anfal Verse

0104223

 

1.    (7:85-93)ஷுஐப் நபி அவர்கள் மத்தியன் (Midian) நகர வாசிகளிடம் அனுப்பப்பட்டார்கள் . .பெரிய வணிக மையமாக இருந்த அந்த நகர மக்களிடம் வணிகத்தில் அளவிலும் நேர்மையாக இருங்கள் என்று சொன்ன நபியை அவர்கள ஏளனம் செய்து இவர் பேச்சைக் கேட்டால் நமக்கு வணிகத்தில் இழப்பே ஏற்படும் என்று கிண்டல் செய்தார்கள் .இறுதியில் நில நடுக்கம் அவர்களை ஆட்கொண்டு உருத் தெரியாமல் அழித்து விட்டது

 

2.    7:94-99 இறைவனின் சூழ்ச்சி நம்மையெல்லாம் வந்து அடையாது என அச்சம் இன்றி இருப்பவர்கள மிகப் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் .

 

3.     

3.முந்தைய கூட்டத்தினர் பலரிடம் இறை தூதர்கள் உண்மை நெறியை விளக்க அனுப்பபட்டா ர்கள் .அவர்கள் உண்மையை ஏற்க மறுத்து விட்டர்கள் .அவர்கள் இதயங்களை இறைவன் மூடி முத்திரை இட்டு விட்டான் (7:102-108)

 

4.மூசா நபிக்கு இறைவன் கொடுத்த அற்புதங்கள் – அவர் கைத்தைடி பாம்பு போல் தோற்றமளித்தது , அவர் கை ஒளி மயமாய்த் தோன்றியது .

 

.கொடுங்கோல் மன்னன் பிர் அவுன் இவற்றை இறை அற்புதங்கள் என ஏற்றுக்கொள்ள மறுத்தான்

.இது மந்திரச் செயல் என்று கருதி மூசாவின் மந்திரத்தை முறியடிக்க , நாட்டில் உள்ள அனைத்து மந்திர வாதிகளையும் அழைத்து இவரைத் தோற்கடித்தல் நீங்கள் எனக்கு நெருக்கமாணவர்களாக ஆகி விடுவீர்கள் என்று சொல்கிறான்.

 

வந்த அந்த மந்திவாதிகள் அனைவரும் தங்கள் கைத்தடிகளை கீழே வீசுகிறார்கள் .

 

 இறைவன் கட்டளைப்படி மூசா தன் கைத்தடியை வீச அது பெரிய பாம்பு போல் தோற்றமளித்து மற்ற அனைத்துத் தடிகளையும் விழுங்கி விட, ஏக இறைவனின் மாட்சிமையை அறிந்து கொண்ட மந்திரவாதிகள் சிரம் தாழ்த்தி அந்த இறைவனை வணங்குகிறார்கள்

 

 .இதனால் சினம் கொண்ட பிர் அவுன் அவர்கள்

அனைவருக்கும் மாறுகால் , மாறு கை வெட்ட ஆணைஇடுகிறான் அவர்களோ ,நாங்கள் உண்மையான இறை வழியில் சேர்ந்து விட்டோம்,. எங்கள் உயிர் அவனிடமே போகும் . என்று சொல்லிவிட்டனர் (7:109-126)

 

5.மூஸா நபியைப் பின்பற்றுபவர்களை சிறுமைப் படுத்துவத்ற்காக அவர் குலத்தின்  ஆண் குழந்தைகளை கொன்று விடுமாறு பிர் அவுன் ஆணை இடுகிறான்

 

. அவனுக்குத் தண்டனையாக இறைவன் நாட்டில் பஞ்சத்தை உண்டாக்குகிறான் . மேலும் வெள்ளப்பெருக்கு, பலவிதமான பூச்சிகள் தவளைகள் படை எடுப்பு, எங்கு பார்த்தாலும் குருதி வெள்ளம் என பல சோதனைகளை இறைவன் அனுப்புகிறான்

 

. தாங்க முடியாத சோதனை வந்து இறங்கும்போது அவர்கள் மூசாவிடம் தங்களுக்காக ஏக இறைவனிடம் வேண்டுமாறு கேட்கிறார்கள் .தங்கள் வேதனை தீர்ந்து விட்டால் மூசா காட்டும் இறைவழியில் சேர்ந்து விடுவதாகவும் வாக்களிக்கிறார்கள் ..வழக்கம் போல் வாக்கை அவர்கள் மீறி விட இறைவன் அவர்களை கடலில் மூழ்கடித்து அழித்து விடுகிறான் (7:127-137)

 

6.மூசாவைப் பின்பற்றுபவர்களை இறைவன் காப்பாற்றி விடுகிறான்

 

7.இறைவன் விதித்தபடி மூசா நாற்பது நாட்கள் தவம் இருந்த பின் இறைவன் அவரிடம் பேசும்போது தாம் இறைவனைக் கான விரும்புவதாய் மூசா சொல்ல தன்னைக் காண்பது இயலாத செயல் என்று சொன்ன இறைவன் – அந்த மலையைப் பாருங்கள் – அது அப்படியே நிலையாக இருந்தால் நீங்கள் என்னைப்பார்க்கலாம் என்று சொல்லிய இறைவன் அந்த மலையின் மீத தன் ஒளியைப் பாய்ச்ச , மலை நொறுங்கி தூளாகி விடுகிறது . மூஸா மூர்ச்சை ஆகி விடுகிறார் .தெளிந்த எழுந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறார் மூஸா . பிறகு இறைவன் மூசாவை தன் தூதராக நியமித்து நல்லுரைகளை வழங்குகிறான்

 

8.மூஸா நாற்பது நாள் தவம் இருந்த காலத்தில் அவரைப் பின்பற்றுவோர் வழி தவறி காளைக்கன்றை வணங்கி, இறைவனின் சினத்துக்கு ஆளாகி பின் தவறை உணர்ந்து மன்னிப்பு கோருகிறார்கள் 7:138-156)

 

 

9..மனித குலம் முழுமைக்கும் நபியாக உள்ள முகமது ஸல் அவர்கள் வருகை பற்றி தவ்ராத் இன்ஜீல் வேதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது (7:157,158)

 

10..சப்பாத் என்னும் ஒய்வு நாளாகிய சனிக்கிழமையில் இறைவன் கட்டளையை மீறி அதிக அளவிலான மீனுக்கு ஆசைப்பட்டு , மீன் பிடிக்கச் சென்று யூதர்கள் இறைவனின் சாபத்துக்கு ஆளாகி குரங்கு போல் மாற்றப்பட்ட நிகழ்வு மீண்டும் சொல்லப்படுகிறது (7:163-168 )

 

11.(7:169-171) இறைவன் எப்போதும் தங்கள் தவறுகளை மன்னிப்பான் என்ற யூதர்களின் பொய்யான நம்பிக்கை பற்றிச் சொல்கிறது

 

12.இறைவனுக்கு மிக அழகான உயர்வான பல பெயர்கள் உள்ளன. அவற்றைச் சரியாக உச்சரித்து அவனை அழையுங்கள் (7:180)

 

13(7:179-181)வழி தவறிய மக்கள் விலங்கு போன்றவர்கள் – இன்னும் விலங்கை விட மோசமானவர்கள்

 

14 .(7:182-188) இறைவனின் மறை மொழிகளை நம்பாதவர்கள் அழிவை நெருங்கிகொண்டிருக்கிறார்கள் . நபியால் கூட அவர்களைக் காப்பற்ற முடியாது

 

15 .(7:189-198) ஒரு உயிரில் இருந்து மனித குலத்தைப் பல்கிப் பெருகச் செய்த அவன் ஒருவனே ஏக இறைவன் .மற்ற எல்லாம் பொய்,

 

16 .(7:199-206 ) பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து விடுங்கள் ;

 

நீதிக்காகப் பரிந்து பேசுங்கள் ;

அறியாமையில் இருப்பவர்களை விட்டு விலகி இருங்கள்

 

குரான் ஓதப்டும்போது முழு அமைதியுடன் அதற்கு செவி சாயுங்கள்

 

17. (8:1-10) போர் வெற்றிப்பொருட்கள் பிரிக்கப்படுவது பற்றியும் பத்ரு யுத்தம் உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நடந்த யுத்தம் என்றும் விளக்குகிறது C

 

18 .(8:11-19 எப்படி இறைவன் பத்ருப் போரில் இறை நம்பிகை கொண்டர்வகளுக்கு உதவினான் எனபது சொல்லப்படுகிறது )

 

19 .(8:20-28 ) தங்கள் சுய அறிவால் தீய வழியில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளதவர்கள் விலங்கினும் கீழானவர்கள் மேலும் அமானிதப் பொருட்களில் எந்த வித மோசமும் செய்யக்கூடாது

 

20 .(8:29-37) தன்னை அஞ்சி நடப்பவருக்கு இறைவன் நேர்வழியைக் காட்டி நல்லது கெட்டதை பிரித்துப் ப்பார்க்கும் அறிவை கொடுப்பாண் .

 

இறைவனை அஞ்சி நடப்பவர்கள் மட்டுமே புனித காபாவின் உண்மையான, சட்டபூர்வமான பாதுகாவலர்கள்

 

இது குரான் ஜூசு

9 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே குரானைப்ப்படிக்க ஒரு தூண்டுதலாக அமையலாம்

 

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

 

நேற்றைய வினா

லூத் சமுதாயத்தினர் எப்படி அழிக்கப்பட்டனர்?

விடை (7:84)”நாம் அவர்கள் மீது கல் மழை பொழியச் செய்து அவர்களை அழித்தோம் -----

 

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்

சகோ

ஷர்மதா – முதல் சரியான விடை

 

சிராஜுதீன்

 

மனிதகுலத்துக்கு ஒரு எச்சரிக்கை போல இறை கட்டளையை மீறியதால் அழிக்கப்பட்ட  சமுதாயங்கள் பற்றி திரு மறையில் பல இடங்களில் சொல்லப்படுகிறது

 

இன்றைய வினா

கை தட்டுவதும் சீட்டியடிப்பதுமே அவர்கள் தொழுகை

என்ற கருத்துள்ள வசனம் எது?

 

9 ஆம் சகரை நிறைவேற்றிக் கொடுத்த  இறைவனுக்கு நன்றி

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

09 ரம்ஜான் (9) 1444

01042023 சனிக்கிழமை

சர்புதீன் பீ

Thursday, 30 March 2023

திரு மறை சில குறிப்புகள் 8 பகுதி (ஜூஸு) 8

 






திரு மறை சில குறிப்புகள் 8

பகுதி (ஜூஸு) 8

 

 

பெயர் வாலவ் அண்ணந 8      Wa Lau Annana

துவக்கம்  6:111         6. Al-An'am Verse 111   நிறைவு 7:87 7. Al-A'raf Verse 87

31032023

 

1.இறை தூதர்கள் அனைவருமே சைத்தானிடமிருந்தும் அவனைப் பின் பற்றுபவர்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பை சந்தித்தவர்கள்தான்(6:112)

 

2.இறைவனின் கூற்று முழுமையான உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கிறது . எல்லாவற்றையும் கேட்பவனாகவும் ,அறிந்தவனாகவும் இருக்கும் அவன் கூற்றை யாரும் மாற்ற முடியாது (6:-115)

 

3.ஒவ்வொரு ஊரிலும் உள்ள மிகப்பெரிய குற்றவாளிகள் சூழ்ச்சி செய்கிறார்கள் .உண்மையில் அவர்கள் தங்களுக்கே தீமை செய்து கொள்கிறார்கள் என்று உணர்வதில்லை

 

(6:123)(6:130-135) தீர்ப்பு நாளன்று இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொள்வார்கள்

 

4. 5. (6:132) உங்கள் இறைவன் நீங்கள் செய்யும் அனைத்தையும் அறிந்தவன். அவரவர் செயல்கள் உழைப்புக்கு ஏற்ற நிலையை அவன் அளித்து விடுவான்

 

6. (6141-142 )விவசாயப் பொருட்களுக்கு உரிய சக்காத் எனும் தருமத்தை அறுவடை நாள் அன்றே கொடுத்து விடுங்கள்

 

. 7. (6:149)முழுமையான அத்தாட்சி இறைவனிடமே இருக்கிறது . அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் சத்திய வழியில் நடத்தியிருப்பான்

 

8. (6:151)"இறைவன் தன் அடியார்களுக்குக் கட்டளை இடுகிறான் எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்.

 

உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;

 

வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்;

 

எந்த ஒரு  மனித உயிரையும் நியாயமானதற்கு அல்லாமல் கொலை செய்யாதீர்கள்

9. 6:159) மதத்தைக் கூறு போடுபவர்கள் இறை நம்பிக்கையின் எதிரிகள்

 

10. (6:162)” என் வணக்கம், என் அர்ப்பணிப்பு, என் வாழ்வு, என் மரணம் எல்லாமே ஏக இறைவனுக்காகவே என்று கூறும்

 

11. (6:165) அவனே உங்களை பூமியில் தன் பிரதிநிதிகளாக நியமித்தான் .சிலருக்கு உயர் நிலைகளையும் கொடுத்தான் அவன் உங்களுக்கு அளித்தவற்றைக் கொண்டே உங்களை சோதிக்கவும் செய்வான்

 

12. (7 : 1-10)தீர்ப்பு நாளன்று மக்களும் நபிமார்களும் கேள்விகேட்கப்படுவார்கள் .சரியான நீதி முழுமையாக நிறைவேற்றப்படும்

 

13.இறைவன் முதல் மனிதனைப்படைத்து, அவனுக்கு உருவம் கொடுத்து உயிரூட்டியது , இறைவன் ஆணைப்படி, மலக்குமார்கள் அனைவரும் மனிதனுக்கு சிரம் பணிந்தது , இப்லிஸ் மட்டும் நெருப்பில் இருந்து படைக்கப்பட்ட தான் மண்ணில் இருந்து படைக்கப்பட்ட மனிதனை விட உயர்ந்தவன் எனவே மனிதனை வணங்க மறுத்தது ,இறைவன் இப்லிசை வெளியேறுமாறு கட்டளை இட்டது ,இப்லிஸ் மனித குலத்தை வழிகெடுக்க உறுதி மேற்கொண்டது, இறைவன் ஆதாமுக்கும் அவர் துணைக்கும் பூங்காவில் உள்ளவற்றில் ஒரு மரத்தின் கனியை மட்டும் தடை செய்தது , இப்லிசின்சொல்லில் மயங்கி இருவரும் தடுக்கப்பட்ட அந்தக் கனியைப் புசித்தது அதனால் குற்றவாளிகளாகி பூமிக்கு அனுப்பப்பட்டது , நீங்கள் ஒருவொருக்கு ஒருவர் எதிரிகல் ஆவீர்கள் என இறைவன் சொல்லியது எல்லாம் வசனம் 7:11-25ல்

 

14.(7:26-31)  மக்களுக்கு இறைவன் ஆடை அலங்காரங்களைக் கொடுத்திருக்கிறான்

இறை அச்சம்  என்பது எல்லாவற்றையும் விட சிறந்த ஆடையாகும்



 

 

 

15.32-34 இறைவன் தன அடியார்களை நன்கு உடுத்திகொள்ளவும், அலங்கரித்துக்கொள்ளவும், தூய்மையான அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை உண்டு களிக்கவும் ஆணை இடுகிறான்

 

16. (7:40) ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகம் போனாலும் இறைவனின் அடையாளங்களை பொய்யென்று நிராகரித்தோருக்கு சுவனபதியில் நுழைவு கிடைக்காது..

 

17.(7:42) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு அவர்கள் மேல் அவர்கள் சக்திக்கு மேல் தாங்க முடியாத சுமையை திணிக்க மாட்டோம் . அவர்கள் என்றென்றும் சுவனத்தில் வசிப்பார்கள்

 

18. (7:54) வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்து தன் உயர்ந்த ஆசனத்தில் ஏறி அமர்ந்த அந்த ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் கிடையாது .இரவு, பகல். கதிரவன், நிலவு, விண்மீன்கள் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகின்றன

 

19.வசனம்7: 59-64 நுஹ் நபி பற்றி சொல்கிறது . இதில் முக்கியமான செயதி என்னவென்றால் நபிகள் நாயகம் போலவே நுஹ் நபி அவர்களும் பல இன்னல்கள் ,கேலிகள் கிண்டல்களுக்கு ஆளானர்கள்.

 

நுஹ் நபியின் அறிவுரைகளை கேட்டு இறைவழி நடந்தவர்களை இறைவன் Noah’s Ark எனப்படும் கப்பலில் ஏற்றித் தப்பிக்க வைத்தான் . நம்பாத மற்றவர்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர்

 

2O.7:6572 “ ஹுத் நபி ஆத் இன மக்களை எச்சரித்து நல்வழிப்படுதுவததற்காக் அனுப்பி வைக்கப்பட்டார் . மற்ற நபிகள் போல இந்த நபியும் கேலி, கிண்டலுக்கு ஆளானார் இறுதியில் ஆத இனம்முழுமையாக .அழிக்கப்பட்டது

இதேபோல் தமுத்( ஸமூத்) இனத்துக்கு ஸாலிஹ் நபியும் மற்றொரு சீரழிந்து போன சமூகத்துக்கு லூத் நபிபும் அனுப்பபட்டார்கள் நபிகளின் சொற்களைக் கேளாமல் இரு சமதாயமும் முழுமையாக அழிக்கபட்டன நில நடுக்கம் ஸமூத் சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து விட்டது

 

 

இது குரான் ஜூசு

8 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

குரானைப்ப்படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கலாம்

 

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

 

நேற்றைய வினா

ஏக இறைவன் அல்லாத பிற தெய்வங்களைத் திட்டாதீர்கள் என்ற கருத்து வரும் வசனம் எது ?

விடை (6:108) .

அவர்கள் அழைக்கும் ஏக இறைவன் (அல்லாஹ்) அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள் அப்படித் திட்டினால் அவர்களும் வரம்பு மீறி ஏக இறைவனைத் திட்டுவார்கள் –

 

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப்பெறுவோர்

 

சகோ

ஷர்மதா –முதல் சரியான விடை

 

சிராசுதீன்

 

இன்றைய வினா

லூத் சமுதாயத்தினர் எப்படி அழிக்கப்பட்டனர்?

 

எட்டாவது சகரை நிறைவேற்றிக்கொடுத்த இறைவனுக்கு நன்றி

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

08 ரம்ஜான் (9) 1444

31032023 வெள்ளி

சர்புதீன் பீ

--------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

Wednesday, 29 March 2023

தோட்டத்தில் புது மலர் Peace Lily






தோட்டத்தில் புது மலர்
இதன் பெயர்
Peace Lily
வீட்டில் அமைதி நிலவச் செய்யும்
என்று சொல்கிறார்கள்
30032023









 

திரு மறை சில குறிப்புகள் 7 பகுதி (ஜூஸு) 7

 




திரு மறை சில குறிப்புகள் 7

பகுதி (ஜூஸு) 7
30032023
7 பெயர் வல்ஜா சாம்லு Wa Iza Samiu
துவக்கம் 5:82 5. Al-Ma'idah Verse 8 நிறைவு 6:110 6. Al-An'am Verse 110
1,ஒருவர் தீய செயல் செய்யும்போது அதைத் மற்றவரும் குற்றம் புரிந்தவரே என்கிறது வசனம் 5:79.சில தனிமனிதர்கள் தவறு செய்யும்போது அதை சமூகம் தடுக்காவிட்டால் அது வளர்ந்து ஒருநாட்டையே சீரழித்து விடுகிறது
2.இறைவன் ஆகுமானதாக அறிவித்த உணவுகளை தடுக்கப்பட்டது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
3.தீயவை அளவில் மிக அதிகமாக இருந்து கருத்தைக் கவர்ந்தாலும் சிறிய அளவில் இருக்கும் நல்லதுக்கு சமமாகாது (5:100)
4.புனித ஹஜ் பயணம் கட்டாயமாக்கப்பட்டகாலத்தில் நபி பெருமானிடம் ஒரு இறை நம்பிக்கையாளர்”ஒவ்வொரு ஆண்டும் புனிதப்பயணம் கட்டாயாமா ?” என்று பலமுறை கேட்டும் நபி பெருமான் அமைதி காத்து விட்டு பிறகு சொல்கிறார் “ நான் ஆம் என்று சொல்லியிருந்தால் அது ஒரு கட்டளை ஆகி பலருக்கும் சிரமத்தையும் மன உளைச்சளையும் உண்டாக்கியிருக்கும் என்கிறார் .இதுதான் வசனம் 5:101 ல் சில செய்திகள் பற்றி கேட்பது உங்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் என்று வருகிறது
5.பிறர் செயல்கள் பற்றி அதிகம் கவனம் செலுத்தாமல் உங்கள் செயல்களை நல்வழிப் படுத்திக் கொள்ளுங்கள் என்கிறது 5:105
6.ஈசா நபி அவர்கள் இறைவன் அருளால் பெற்ற சக்திகள் மூலம் நிகழ்த்திய அற்புதங்கள்
- தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசியது
- மண்ணால் செய்த பறவைக்கு உயிர் கொடுத்த்தது
- பிறவிக்குருடர் பார்வை பெற்றது
- தொழுநோயாளி குணம் அடைந்தது
- இறந்தவர் உயிர் பெற்றது
7.ஈசா நபியிடம் இறைவன் மறுமைநாளில் வினவுகிறான் :” “இறைவனோடு , நானும் என் தாயும் கடவுள்கள் என்று மக்களிடம் சொன்னீர்களா?” என்று
அதற்கு ஈசா நபி அவர்கள்
“ நான் அப்படி சொல்லியிருந்தாலோ ,நினைதிருந்தாலோ இறைவனாகிய உனக்குத் தெரியாமல் இருக்காது . அப்படிச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது “ என்று சொல்கிறார்கள்
8.வானத்துக்கும் பூமிக்கும் இறைவன் ஒருவனே .உங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் அவன் நன்கு அறிவான் (63)
8.கருணை புரிவதை இறைவன் தனக்குரிய கடமையாக ஆக்கிக் கொண்டான்
அதனால்தான் குற்றம் புரிவோரை உடனே தண்டிக்காமல் அவ்ர்களுக்கு ஒரு கால அவகாச்தைக் கொடுக்கிறான் (6:12)8.
9.பெற்றோர் தம் குழந்தைகளை அடையாளம் கண்டு அறிவது போல் இறை நம்பிக்கை உடையவர்கள் ,இந்தத் திருமறையையும் இறைவனின் திருத்தூதரையும் அறிந்து கொள்வார்கள் (6:20)
10.மறுமை நாளில் இறைவன் இது (மறுமை நாள் ) உண்மைதானே என்று கேட்க ,ஆம் இறைவனே என்று ஒப்புக்கொள்வார்கள் .இவ்வளவு நாள் இந்த உண்மையை மறுத்ததற்கான தண்டனையை அனுபவியுங்கள் என இறைவன் கூறுவான் (6:30)
11.இறை தூதரை மறுப்பவர்கள் இறைமறுப்பளர்கள் என்ற கருத்து திரு மறையின் பல இடங்களில் வலியுறுத்திச் சொல்லபடுகிறது
12.சற்று சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு நன்கு விளங்கும் – மறுமையின் வேதனையில் இருந்து காப்பாற்ற இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும் (6:36-41)
13. (6:50) நபியே கூறும்
“நான் இறைவனின் பொருட் செல்வத்தைக் கொண்டிருக்கவில்லை
மனித அறிவுக்கு அப்பாற்பட்ட எதுவும் எனக்குத்தெரியாது . நான் ஒரு மலக்கும் இல்லை
எனக்கு அறிவிக்க்கப்பட்டதை மட்டுமே நான் பின்பற்றுகிறேன் “
14.ஏழை எளிய மக்களை இறை நம்பிக்கையாளர்கள் கூட்டத்தில் முந்தச் செய்து செல்வச் செருக்கில் திரிபவர்களை இறைவன் சோதனை செய்கிறான் (6:53)
15.6:60) அவனே இரவில் உங்கள் உயிர்களைக் கைப்பற்றிவிட்டு காலையில் தினமும்உயிர்த்தெழச் செய்கிறான்
16.இறைவழியாகிய மதத்தையும், திரு மறையையும் வேடிக்கை ,பொழுது போக்காக நினைபவர்களோடு நீங்கள் உறவு கொள்ள வேண்டாம்( 6: 68-70)
17. (6:79) விண்மீன்களையும் , நிலவையும் , பிறகு கதிரவனையும் பார்த்து , இவை எல்லாம் இறைவன் என்று எண்ணி , பிறகு அவை மறைவதைக்கண்டு அவை இறைவன் அல்ல என்று தெளிவடைந்த நபி இப்ராகிம் கூறினார்
“வானங்களையும் ,பூமியையும் படைத்த இறைவனை நோக்கி நான் முழுமையான ஈடுபாட்டுடன் திரும்பி இருக்கிறேன் .அவனுக்கு கண்டிப்பாக நான் இணை வைக்க மாட்டேன் “
18.6:83-90 இப்ராகிம் நபி வழிவந்த நபி மூஸா , ஈசா மகமது அனைவரும் ஏக இறை நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்தனர்
19.6:91-91 தவ்ராத்தையும் , குரானையும் படைத்தவன் ஒரே இறைவன்தான்
20. (6:93) வஹி எனும் இறை செய்தி தனக்கு வந்ததாக பொய் சொல்பவன் மிகக் கடும் தண்டனைக்கு உட்படுவான்
21.(6:103) எல்லாம் அறிந்தவன் , மிகவும் நுட்பமானவன் இறைவன் .அனைத்தையும் பார்க்கும் திறன் படைத்த அவனை யாரும் பார்க்க முடியாது
இது குரான் ஜூசு
7 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரானைப்படிக்க ஒரு தூண்டுதலாக அமையலாம்
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்றைய வினா
சத்திய வழி என்பது ஒரு சமுதாயத்துக்கு சொந்தம் அல்ல .இறை நம்பிக்கையோடு செயல்படும் அனைவருக்கும் இது பொதுவானது என்ற கருத்தில் வரும் இறை வசனம் எது ?
விடை
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், (விண் மீன்களை வழிபட்ட கூட்டம்)கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்(5:69)
சரியான விடை அனுப்பிய சகோ
சிரசுதீனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
இன்றைய வினா
ஏக இறைவன் அல்லாத பிற தெய்வங்களைத் திட்டாதீர்கள் என்ற கருத்து வரும் வசனம் எது ?
ஏழாவது ஸகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
07 ரம்ஜான்( 09)1444
30032023வியாழன்
சர்புதீன் பீ