திருமறை குர்ஆன்
03032023
'(அவர்கள் )
---இறைவனையும் -------ஏமாற்ற நினைக்கிறார்கள் -------"
என்று குரானில் எங்கு வருகிறது?
விடை
சூராஹ் 2 அல் பக்ரா
வசனம் 9
"இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.'. (2:9)
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹஸன் அலி
முதல் சரியான விடை
ஷர்மதா
பீர்ராஜா
சிராஜுதீன்
தல்லத்
விளக்கம்
நயவஞ்சகர்கள் எனப்படும் முனாபிக்குகள் பற்றி
சூரா 2 வசனம் 8 முதல் 20 வரை வருகிறது
ஏக இறைவனையும் இறுதித்தீர்ப்பு நாளையும் நம்பாமல் சிலர் நம்புவதாய் சொல்கிறார்கள்
(வசனம் 8)
இதன் தொடர்ச்சியாக வரும் வசனம் 9 பற்றி மேலே பார்த்தோம்
"அவர்கள் உள்ளங்கள்(நம்பிக்கை இன்மை எனும்) நோயுற்று விட்டன
இம்மையிலும் அவர்கள் எந்த நற்பலனையும் அடைய முடியாது
கடும் தண்டனை அவர்களுக்குக் காத்திருக்கிறது"
என இறைவன் எச்சரிக்கிறான்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
1008(ஷாபான்)1444
03032023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment