Friday, 24 March 2023

திருமறை – குறிப்புகள் சில – 2 பகுதி (ஜூஸு)2






 திருமறை – குறிப்புகள் சில – 2

பகுதி (ஜூஸு)2
25032023
2பெயர் சயக்கூல் Sayaqool
துவக்கம் 2.அல் பகரா Al-Baqarah Verse 142
நிறைவு அல் பக்ரா2. Al-Baqarah Verse 252
1.உங்களை ஒரு நடு நிலையுள்ள சமுதயமாக ஆக்கியுள்ளோம் (2:143)
நடு நிலையுள்ள சமுதயம் என்ற பொருள் உள்ள
وَّسَطًاwasatan
என்ற அரபுச் சொல் மிகப்பரந்து விரிந்த பொருள் கொண்டது .அந்த அரபுச் சொல்லுக்கு இணையான வேறு மொழி சொல் கிடயாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
நீதி, சமத்துவம், பணிவு, நிலை தவறாமை போன்ற பல நற்பண்புகள் கொண்ட ஒரு சமுதாயம், இந்த பண்புகளோடு விளங்கும் மற்ற சமுதாயங்களோடு நட்பு கொண்டு , தவறுக்கு ஒருபோதும் துணை போகாத ஒரு சமுதாயம் என்று கொள்ளலாம்
2தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது இறைவன் கட்டளைப்படி தொழும் திசை மாற்றப்பட்டதை விவரிக்கும் வசனங்கள் 2:148- 151
3“என்னை நீ நினைவு கூர்ந்தால் உன்னை நான் நினைப்பேன்” என்கிறான் இறைவன் (2:152)
4.இறைவனின் பாதையில் உயிரிழப்பவர்கள் உயிருடனே இருக்கிறார்கள், மரிப்பதில்லை ((2:154)
5..சபா ,மர்வா குன்றுகள் இறைவனின் அடையாளச்சின்னங்கள் அவற்றி ன் இடையே சயி செய்வது குற்றமில்லை )(2:158)
6.இறைவன், இறுதித் தீர்ப்பு நாள் ,இறை தூதர்கள் ,திருமறை நபிமார்கள் என்பவற்றில் முழுமையாக நம்பிக்கை கொள்வது ,
இறைவணக்கத்தை முறையாகக் கடைப்பிடித்து இறைவன் ஆணைப்படி தான தருமங்கள் தாராளமாகச் செய்வது
,வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, துன்பத்திலும் பொறுமை காப்பது இவையெல்லாம் நன்னெறியாலர்களின் பண்புகளாகும் .முகத்தை மேற்கிலும் கிழக்கிலும் திருப்புவது மட்டும் நன்னெறி ஆகாது (2:177)
7.ரமலான் மாதம் நோன்பு,பற்றி 2:185
. (2:185 EN 186) பயணத்தின்போது நோன்பு நோற்க வேண்டுமா என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு .இது பற்றி பொது விதி ஏதும் இல்லை . நபி பெருமான் பயணத்தில் நோன்பு நோற்றதும் உண்டு, விட்டதும் உண்டு.
8. “நான் என் அடியார்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறேன் .அவன் என்னை அழைத்தால் அதற்கு மறுமொழி சொல்கிறேன் .அவர்களும் என் அழைப்பை ஏற்று என் மேல் நம்பிக்கை வையுங்கள்” இறைவன் (2:186)
9.பிறர் பொருளைக் கவர்வதும் , அதற்கு துணை போக அதிகாரிகளுக்கு கையூட்டுக் கொடுப்பதும் மிகப்பெரிய பாவங்களாகும் (2:188)
10......தேய்ந்து, வளரும்) பிறைகள் மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், புனித ஹஜ் பயணத்தை அறிவிப்பவையாகவும் உள்ளன.-----(2:189)
11.புனிதப் பயணத்தின்போது வணிகத்தில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவது அனுமதிக்கப்படுகிறது (2:198)
12.. நீங்கள் இசுலாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;., (2:208)
(உங்கள் எண்ணங்கள், அறிவத் தேடல், நடத்தை ,மற்ற்வர்களோடு பழகும் விதம் உங்கள் முயற்சிகள் போன்ற அனைத்தும் முழுக்க முழுக்க முழுக்க இசுலாமிய வழியிலேயே இருக்க வேண்டும் )
13..ஆதி மனிதன் அறியாமை இருளில் மூழ்கியிருந்ததாய் பல மதக்கோட்பாடுகள் சொல்கின்றன .ஆனால் திருமறை கூற்று இதனில் முற்றிலும் மாறுபடுகிறது .இறைவன் மனித குலத்தைப் படைக்கும்போதே அவனுக்கு உண்மையின் ஒளியைக் கொடுத்து நேர்வழியிலேயே படைத்தான் (2:213 EN 230) ------
14..சுய நல நோக்கமின்றி முழு மனதுடன் இறைவனின் வழியில் பிறருக்கு செய்யும் உதவியை இறைவன் தனக்குக் கொடுக்கப்பட்ட அழகிய கடன் என்று சொல்வதோடு, அதை பன் மடங்காகத் திருப்பி அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறான் (2:245)
15..உருவத்திலும் குணத்திலும் அரக்கன் போல் இருந்த கோலியாத்தை சிறுவனாகிய தாவீது கொன்று வீழ்த்திய நிகழ்வு (2:251)ல் குறிப்பிடப்படுகிறது
இது குரான் ஜூசு இரண்டின் சுருக்கமோ, தொகுப்போ ,விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
நேற்றைய வினாவுக்கு விடை
“இஸ்ரயிலின் சந்ததியினரே (பனி இஸ்ராயில்) “
குர்ஆனில் 33 இடங்களில் வருகிறது (22, 33,43 என பல சொல்லப்படுகிறது இறைவன் நாடினால் தெளிவான விடை பின்பு )
இன்றைய வினா
ரமலான் புனித மாதமாகக் கருதப்படுவது ஏன்?
க (இ)டைச்செருகல் :
“குர்ஆனில் 26 வசனங்கள் வன்முறையைத் தூண்டுவதாய் இருக்கின்றன . எனவே அவற்றை நீக்க வேண்டும் “
என்று ஒரு வழக்கு உச்ச நீதி மன்றத்தில்
வழக்குத் தொடுத்தவர் பெயர் வாசிம் ரிஸ்வி
“Absolutely frivolous “என்று வழக்கை தள்ளுபடி செய்ததோடு வழக்குத் தொடுத்தவருக்கு ரூ 50000/ தண்டமும் விதித்தது உச்ச நீதி மன்றம் (The Hindu 13042021)
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
02 ரமளான் (9)1444
25032023சனிக்கிழமை
சர்புதீன் பீ

No comments:

Post a Comment