திரு மறை சில குறிப்புகள் 5
பகுதி(ஜூஸு) 5
பெயர் வல் மோசனட் 5 Wal Mohsanat துவக்கம் 4:24 4. An-Nisa Verse 24 நிறைவு 4:147 4. An-Nisa Verse 147
28032023 செவ்வாய்
1.திருமணம்
– அனுமதிக்கப்பட்டவை, த்டுக்கப்ட்டவை ..-வசனம் 4:23-25)
2..இறைவன் நேர்வழி பற்றித் தெளிவாகச் சொல்லி மக்களை நல்வழிப்
படுத்தி தவறுகளை மன்னித்து வலுவற்றவனாக இருக்கும் அவர்களின் சுமையை எளிதாக்க
விரும்புகிறான் (26-28)
3.பெரும்பாவங்களைத் தவிர்த்து விட்டால் சிறிய பாவங்களை மன்னித்து சுவன
பதவியை இறைவன் வழங்குவான் (4:31)
4...ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுக்கு
உரியதை இறைவன் குறைவின்றி வழங்கி விடுவான் .எல்லாம் அறிந்த அவனிடம் உங்கள்
தேவைகளிக் கேளுங்கள் .சிலருக்கு அவன் அதிகமாக வழங்கினால் அதற்கு ஆசைப்படாதீர்கள் (4:32)
5.ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர் ..
(.4..34)
قَوَّامُوۡنَ
கவ்வாம் = ஒரு நிறுவனம் அல்லது ஒரு தனி மனிதனை மேலாண்மை செய்து ,மேற்பார்வைஇட்டு
பாதுகாத்து தேவைகளை நிறைவு செய்பவர்
6..சொத்துப்பங்கீடு இறைவன் விதித்தபடியே
இருக்கவேண்டும் . இதைத் தாண்டி வேறு யாருக்காவது கொடுக்க விரும்பினால் சொத்தின்
உரிமையாளர் தன் வாழ்நாளில் அவர் விருப்பம் போல கொடுக்கலாம் (4:33)
7....பிறர் பாராட்ட வேண்டும்
என்பதற்காக வீண் ஆடம்பரச் செலவு செய்வதை இறைவன் மிகவும் வெறுக்கிறான்
அவர்கள் இறை நம்பிக்கையாளர்களே இல்லை என்கிறான் (4:38)
8..இறைவன் யாருக்கும் அணு அளவும்
தீங்கிழைப்பதில்லை .மனிதன் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் பலமடங்கு நன்மையை
வழங்குகிறான் (4:40)
9..வேறு எந்தத்
தவறையும் இறைவன் நாடினால் மன்னித்து விடுவான் –தனக்கு இணை வைக்கும் பெரும் பொய்யான
தவறைத் தவிர (4:48)
10.வேதத்தின் ஒரு பகுதி தரப் பெற்றவர்கள்
அடிப்படை இல்லாத மூட நம்பிக்கைகள் ,பொய்களை நம்பி தவறான செய்திகளைப்
பரப்புகிறார்கள் (4:51)
11.அரசியல் , மதத் தலைமைப்
பொறுப்புகளை தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் ஒப்படையுங்கள் என்பது
இறைவன் கட்டளை (4:58)
12..இறைவன் ,இறைதூதருக்கு கீழ்படிப்வதோடு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்
படியுங்கள் ( 4:59)
13.இறை தூதரரின் வழி நடப்பது இறைவழியில் நடப்பதாகும்
.இறைவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள் .மனிதர்களுக்கு அல்ல . நீங்கள் எவ்வளவு
பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும் (4:77-81)
14.உங்களுக்கு சலாம் என்னும் வாழ்த்துச்
சொல்பவர்களுக்கு அதை விட அழகிய முறையில் பதில் சொல்ல்லுங்கள் .இறைவன் ஒவொரு
நற்செயலையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறான் (4:86)
15.12.4:101-104 வசனங்களில் பயணத்தில்
தொழுகையை சுருக்கிக் கொள்வது பற்றி சொல்லப்படுகிறது
16..நம்பிக்கை துரோகம் செய்து பாவத்தில் மூழ்கி
இருப்பவர்களை இறைவன் வெறுக்கிறான் .அவர்களுக்குப் பரிந்து பேசாதீர்கள் (4:107)
17..இறை நம்பிக்கையோடு நற்செயல் புரிபவர்கள் –
அவர்கள் ஆணோ பெண்ணோ –அவரகளுக்கு சுவனத்
தோட்டத்தில் இடம் உண்டு , அவர்களுக்கு இம்மியளவும் தீங்கு
செய்யப்படமாட்டது (4:124)
18..இறைவனின் தோழனாய்
இருந்த இப்ராஹிம் நபி வழியில் ,தன்னை முழுமையாக இறைவனிடம்
ஒப்படைத்து நற்செயல்கள் செய்பவரை விட நல்ல
வாழ்க்கை யாருக்குக் கிடைக்கும் ?(4:125)
19..வசனங்கள் 4:127-130ல் பெண்களுக்கான குறிப்பாக ஆதரவற்ற
பெண்களுக்கான சட்டங்கள் சொல்லப்படுகின்றன
இது குரான் ஜூசு ஐந்தின் சுருக்கமோ, தொகுப்போ ,விளக்கமோ இல்லை .சில குறிப்புகள்
மட்டுமே
குரானைப் படித்து உணர ஒரு
தூண்டுதலாக இருக்கலாம்
குரான் வசனங்களின் கருத்து
மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்றைய வினா
“இறைவன் ஏழை ஆகிவிட்டான்
.நாங்கள் செல்வந்தர்கள் ஆகி விட்டோம் “இது யார் சொன்னது ? பொருள்
என்ன ?
எந்த வசனம் ?
விடை
நீங்கள் பிறருகுக் கொடுத்து உதவுவது நீங்கள் எனக்குக் கொடுக்கும்
அழகிய கடன் என்ற(2:245) இறைவன் கூற்றை கேலி செய்து இறைவன் ஏழை ஆகி விட்டான் நாங்கள்
செல்வந்தராகிவிட்டோம் என்று சொனவர்களுக்கு நரக நெருப்பின் வேதனை காத்திருக்கிறது ( 3{181)
"நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ்
கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து
கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின்
வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
சரியான விடை அனுப்பி வாழ்த்தும் பாராட்டும்
பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை
ஷர்மதா
இன்றைய வினா
அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு
வருவான்;
இது எந்த வசனம் ?
ஐந்தாம் சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம்
அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
05 ரம்ஜான் (9)1444
28032023 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment