Sunday, 26 March 2023

திரு மறை சில குறிப்புகள் பகுதி பகுதி (ஜூஸு4

 





திரு மறை  சில குறிப்புகள் 

பகுதி பகுதி (ஜூஸு) 4

 

 

பெயர் லன்தனா லூ   4   Lan Tana Loo         துவக்கம் 3:93 3. Al-Imran Verse 93        நிறைவு 4:23 4. An-Nisa Verse 23

27032023

1.நீங்கள் விரும்பும் பொருளை இறைவழியில் செலவு செய்தால்தான் நேர்வழி அடைய முடியும்(3:92)

2.இறைவன் விதித்ததைத் தாண்டி மற்ற எந்த உணவையும் தடுக்கப்பட்டது என அறிவிக்க யாருக்கும் உரிமை இல்லை (யூதர்கள் ஒட்டகம், முயல் கறியை தடை செய்தது இறைவன் கட்டளையை மீறிய செயல் )(3:93)

3.மனிதர்களுக்குக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவில் உள்ளது (காபா)

அதில் நுழைந்தவர் அச்ச்சமற்றவராகி விடுகிறார்

சக்தி உடையவர்கள் ஹஜ் எனும் புனித்ப்பயணம் செய்வது  இறைவன் விதித்த கட்டாயக்கடமை  ஆகும் (3:96,97)

 

4..இறை நம்பிக்கை என்னும் கயிறை உறுதியாகப்பற்றிகொண்டு, இறை அச்சத்துடன் வாழ்ந்து ,இறைவனுக்குப் பணிந்த நிலையிலேயே உயிர் துறக்க வேண்டும் (3:102, 103)

5..மன உறுதியுடன் இறை நம்பிக்கையில் நிலைத்து நிற்பவர்களுக்கு துணை புரிய ஆயிரக்கணக்கான வான் தூதர்களை இறைவன் அனுப்பி வைப்பன் என்று உஹுத் யுத்த நிகழ்வுகளை இறைவன் எடுத்துரைக்கிறான் (3:125)

6..பொருளை பன்மடங்காக்கும் வட்டியைத்துறந்து ,நரக நெருப்புக்குப் பயந்து இறைவனுக்கும் இறைதூதருக்கும் பணிந்து மன உறுதியுடன் கடுமையாக உழைப்பவர்கள்தான் சொர்க்கம் புக முடியும் (3:130,131,139,142)

7..முகமது நபி ஸல் அவர்கள் ஒரு இறை தூதர்தான் அவருக்கு முன் வந்த நபி மார் போல அவரும் மரணிப்பார் (3:144,145)

8..வாழ்வும் மரணமும் , இன்பமும் துன்பமும் இறைவன் கொடுப்பதே .(154-158)

9..ஒரு முடிவு எடுக்குமுன் கலந்தாலோசிக்க வேண்டும் .முடிவு எடுத்துவிட்டால் அதை உறுதியாக செயல்படுத்த வேண்டும் (3:159)

10..இறைவன் உங்களுக்கு உதவினால் உங்களை யாரும் வெல்ல முடியாது . அவன் உங்களைக் கைவிட்டு விட்டால் உங்களுக்கு யாரும் உதவ முடியாது . எனவே முழுமையாக இறை நம்பிக்கை கொள்ளுங்கள்(3:160)

11.இறைவன் அருளிய அருட்கொடைகளில் பிறரு

க்குக் கொடுத்து உதவாமல் கருமித்தனம் புரிவோருக்கு அவர்கள் பாதுகாத்த செல்வம் அவர்கள் கழுத்துக்கு விலங்காகும் (3:180)

12.செய்யாத ஒன்றை செய்ததாய்ப் பெருமை பேசுபவருக்கு கடும் தண்டனை  உண்டு (3:187,189)

13.இறைநம்பிக்கை இல்லாதவர்களின் சுக வாழ்வைப் பார்த்து மயங்கிவிடாமல் இறை நம்பிக்கை உடையவர்கள் பொறுமை காக்க வேண்டும் (3:196-200)

14.இறைவன் ஒரு உயிரில் இருந்து மனித இனத்தைப் படைத்து அதில் இருந்து அதன் துணையைப் படைத்தான் . அந்த இருவரிளிருந்து ஆண்களும் பெண்களும் உருவானார்கள் (4:1)

15.  மணப்பெண்ணுக்கு உரிய மகர் கொடுப்பதை ஒரு கடமையாக நினைத்து மகிழ்ச்சியுடன் கொடுக்க வேண்டும் (4:4)

16.சொத்துப்பிரிக்கும்போது வாரிசு அல்லாதவர்கள், ஆதரவற்றோர் ,வசதி இல்லாதவர்கள் அங்கு வந்தால் அவர்களுக்கு சிறிது கொடுத்து அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்

இது போன்ற நிலை நாளை நமது வாரிசுகளுக்கும் வரலாம் (4:8,9)

 16.4:11 -14 வசனங்களில் சொத்துப்பிரிவினை பற்றி சட்டங்கள் சொல்லப்பட்டு இவற்றை மீற யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லப்படுகிறது

17.வரம்பு மீறும் பெண்களுக்கு உரிய தண்டனை, அவர்களை மன்னிப்பது பற்றி வசனங்கள் 4:15-18ல் வருகிறது

மேலும்பாவமன்னிப்புக் கோருவோரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வதே இறைவனின் பொறுப்பாகும் என்றும் வருகிறது

18.பெண்களுக்குக் கொடுத்த மகர் ஒரு பொற்குவியலாக இருந்தாலும் மண முறிவின்போது அதைத் திரும்ப வாங்க வேண்டாம்(4:20)

இது குரான் ஜூசு நான்கின் சுருக்கமோதொகுப்போ ,விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

குரானைப் படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும்

 

நேற்றைய வினா

“ஒரு சிலரிடம் ஒரு பொற்குவியலை ஒப்படைத்தாலும் நீங்கள் கேட்டவுடன் திருப்பிக்கொடுத்து விடுவார்கள் --------“

இது எந்த இறை வசனத்தில் வருகிறது ? பொருள் என்ன ?

விடை :

(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்;. அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும்அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல்கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்;. அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும்நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழியஅவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், 'பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லைஎன்று அவர்கள் கூறுவதுதான்;. மேலும்அவர்கள் அறிந்து கொண்டே

இறைவனின்  பேரில் பொய் கூறுகிறார்கள்(3:75)

சரியான விடை எழுதிய  சகோ

சிராஜுதீன் (முதல் சரியான விடை)

ஷர்மதா

இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்

இன்றைய வினா

“இறைவன் ஏழை ஆகிவிட்டான் .நாங்கள் செல்வந்தர்கள் ஆகி விட்டோம் “இது யார் சொன்னது ? பொருள் என்ன ?

எந்த வசனம் ?

நான்காவது சகரை நிறைவேற்றிக்கொடுத்த இறைவனுக்கு நன்றி

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

04 ரமலான்(9) 1444

27032023 திங்கள்

சர்புதீன் பீ

 


No comments:

Post a Comment