திரு மறை சில குறிப்புகள் 6
பகுதி (ஜூஸு) 6
29032023
துவக்கம் 4:148 4. An-Nisa Verse 1485. நிறைவு 5:81 5. Al -Ma'idah Verse 81
1 வஞ்சகர்களின்.(முனாகிபின்களின் ) குணங்களை எடுத்துரைக்கும் இறைவன்
“:இறைவனை ஏமாற்ற நினைத்து அவர்கள் இறைவனிடம் ஏமாந்து போகிறார்கள் . மிகவும் குறைவாகவே இறைவனை நினைக்கும் அவர்கள் இறைவணக்கத்தில் பிறர் பார்ப்பார்கள் என்பதற்காக மிகத் தயக்கத்துடன் ஈடுபடுகிறார்கள் “ என்கிறான் (4 142-147)
2.ஈசா நபி சிலுவையில் அறையப் படவோ கொல்லப்படவோ இல்லை இறைவன் அவரை தன் பக்கம் உயர்த்திக் கொண்டான் .இது பற்றிப் பொய் சொல்பவர்கள் மனம் திருந்தி ஏக இறைவழியில் சேர்ந்தால் மீட்புப் பெறலாம்( 4}153-162)
3.முந்தைய நபிமார்களான நுஹ், இப்ராகிம், மூசா ஈசாவுக்கு இறைவன் அனுப்பிய அதே செய்திதான் புனித மறை குரானிலும் வருகிறது என்று சொல்லும் இறைவன் குரானின் புனிதத்துவத்துக்கும் உண்மைக்கும் அவனே சான்று சொல்கிறான் .ஏக நிறையில் நம்பிக்கை கொள்ளவும் கட்டளை இடுகிறான் (4:163-171)
4.ஈசா நபி ஏக இறைவனை வணங்கும் உண்மையான இறைத் தூதராய் இருந்தார் (4 172-173)
5.குழந்தை இல்லாதவர்களின் சொத்துப்பிரிவினை பற்றி வசனம் 4:176ல் வருகிறது
6.வசனம் 5:3
தடுக்கப்ப்ட்ட உணவுகள் பற்றி முழுமையாகச் சொல்கிறது
.மேலும் ஒரு மிக முக்கியமானசெய்தி இறைவன் சொல்கிறான்
“இன்று நான் உங்கள் மதத்தை முழுமை அடையச் செய்து விட்டேன் .இந்த அருட் கொடையை முழுமையாக உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் .உங்களை இசுலாத்தில் இணைத்து விட்டேன் ‘
இந்த வசனம் பெருமானாரின் நிறைவுப் பேருரையின்போது ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறக்கியருlளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது
7.உடல் சுத்தி (வுது) செய்யும் முறை, தண்ணீரில்லாமல் உடல் சுத்தி செய்யும் (தயம்மும்) முறை வசனம் 5:6ல்
8.எதிரிகள் நாயகங்களையும் அவர்களுடைய தோழர்களையும் கொல்ல செய்த சூழ்ச்சி , எப்படி இறைவன் அவர்களைக் காப்பாற்றினான் என்பது 5:7-11ல்
9.முந்தய வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வேதங்களை புறந்தள்ளி, இறைவணக்கம், தருமத்தை மறந்து தங்களைக் கடவுளின் குழந்தைகள் என்று பொய் சொன்னார்கள்(5:18)
10.ஆதம் நபியின் இரு மகன்களுக்குள் பகை ஏற்பட்டு, அது கொலையில் முடிந்து, இறை அருளால் ஒரு காக்கை தரையைத் தோண்டியதைப்பர்த்து பாடம் கற்று தரையைத் தோண்டி கொலையுண்டவரின் உடலைப் புதைத்த நிகழ்வு 5:27-31)
இதன் தொடர்ச்சியாக
தகுந்த காரணம் இன்றி ஒரு மனிதனைக் கொலை செய்தவன் உலகமக்கள் அனைவரையும் கொன்றவனாவான்
ஒரு உயிரைக் காப்பாற்றியவன், உலக மக்கள் அனைவரையும் காத்தவ்னாவான் என்ற வசனம் வருகிறது (5:32)
11.சமூகக் குற்றமான திருட்டுக்கு கை வெட்டப்படும் கடுமையான தண்டனை 5:38
அற்பமான திருட்டு, உணவுப் பொருள் திருட்டுக்கு இந்தத் தண்டனை பொருந்தாது என்பது நபிகள் நாயகம் சொன்ன விளக்கம்
12.எந்த சமுதாயமாக இருந்தாலும் இறைவன் விதித்த விதிகளின் படியே தீர்ப்பு, நீதி வழங்க வேண்டும் (5:48-50)
13.ஏக இறைவன், நபி பெருமான் உங்களோடு இருக்கும் இறை நம்பிக்கையாளர்கள் இவர்கள் மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பாய் இருப்பவர்கள்
இது குரான் ஜூசு
6 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்றைய வினா:
அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்
;
இது எந்த வசனம் ?
விடை
மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன். (4:133)
சரியான விடை அனுப்பி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை
ஷர்மதா
இன்றைய வினா
சத்திய வழி என்பது ஒரு சமுதாயத்துக்கு சொந்தம் அல்ல .இறை நம்பிக்கையோடு செயல்படும் அனைவருக்கும் இது பொதுவானது என்ற கருத்தில் வரும் இறை வசனம் எது ?
ஆறாம் சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
06 ரம்ஜான் ( 9 ) 1444
29032023 புதன்
சர்புதீன் பீ
Like
Comment
Share
பணம் 10ம் செய்யும் என்பதற்கு ஏற்ப, எ.ப.சாமி
No comments:
Post a Comment