திரு மறை சில குறிப்புகள்
8
பகுதி (ஜூஸு) 8
பெயர் வாலவ் அண்ணந 8 Wa
Lau Annana
துவக்கம் 6:111 6. Al-An'am Verse
111 நிறைவு 7:87 7.
Al-A'raf Verse 87
31032023
1.இறை
தூதர்கள் அனைவருமே சைத்தானிடமிருந்தும் அவனைப் பின் பற்றுபவர்களிடமிருந்தும்
கடுமையான எதிர்ப்பை சந்தித்தவர்கள்தான்(6:112)
2.இறைவனின்
கூற்று முழுமையான உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கிறது . எல்லாவற்றையும்
கேட்பவனாகவும் ,அறிந்தவனாகவும் இருக்கும் அவன் கூற்றை யாரும்
மாற்ற முடியாது (6:-115)
3.ஒவ்வொரு
ஊரிலும் உள்ள மிகப்பெரிய குற்றவாளிகள் சூழ்ச்சி செய்கிறார்கள் .உண்மையில் அவர்கள்
தங்களுக்கே தீமை செய்து கொள்கிறார்கள் என்று உணர்வதில்லை
(6:123)(6:130-135) தீர்ப்பு நாளன்று
இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொள்வார்கள்
4. 5. (6:132) உங்கள் இறைவன் நீங்கள் செய்யும் அனைத்தையும் அறிந்தவன். அவரவர் செயல்கள்
உழைப்புக்கு ஏற்ற நிலையை அவன் அளித்து விடுவான்
6. (6141-142 )விவசாயப் பொருட்களுக்கு உரிய சக்காத் எனும் தருமத்தை அறுவடை நாள் அன்றே
கொடுத்து விடுங்கள்
. 7. (6:149)முழுமையான அத்தாட்சி இறைவனிடமே இருக்கிறது . அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும்
சத்திய வழியில் நடத்தியிருப்பான்
8. (6:151)"இறைவன் தன் அடியார்களுக்குக் கட்டளை இடுகிறான் எப்பொருளையும் அவனுக்கு
இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்.
உங்களுக்கும் அவர்களுக்கும்
நாமே உணவளிக்கின்றோம்;
வெளிப்படையான இரகசியமான
மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்;
எந்த ஒரு மனித உயிரையும் நியாயமானதற்கு அல்லாமல் கொலை
செய்யாதீர்கள்
9. 6:159) மதத்தைக்
கூறு போடுபவர்கள் இறை நம்பிக்கையின் எதிரிகள்
10. (6:162)” என் வணக்கம், என் அர்ப்பணிப்பு, என் வாழ்வு, என் மரணம் எல்லாமே ஏக இறைவனுக்காகவே
என்று கூறும்
11. (6:165) அவனே உங்களை பூமியில் தன் பிரதிநிதிகளாக நியமித்தான் .சிலருக்கு உயர்
நிலைகளையும் கொடுத்தான் அவன் உங்களுக்கு அளித்தவற்றைக் கொண்டே உங்களை சோதிக்கவும்
செய்வான்
12. (7 : 1-10)தீர்ப்பு நாளன்று மக்களும் நபிமார்களும் கேள்விகேட்கப்படுவார்கள் .சரியான
நீதி முழுமையாக நிறைவேற்றப்படும்
13.இறைவன்
முதல் மனிதனைப்படைத்து, அவனுக்கு உருவம் கொடுத்து
உயிரூட்டியது , இறைவன் ஆணைப்படி, மலக்குமார்கள்
அனைவரும் மனிதனுக்கு சிரம் பணிந்தது , இப்லிஸ் மட்டும் நெருப்பில்
இருந்து படைக்கப்பட்ட தான் மண்ணில் இருந்து படைக்கப்பட்ட மனிதனை விட உயர்ந்தவன்
எனவே மனிதனை வணங்க மறுத்தது ,இறைவன் இப்லிசை வெளியேறுமாறு
கட்டளை இட்டது ,இப்லிஸ் மனித குலத்தை வழிகெடுக்க உறுதி
மேற்கொண்டது, இறைவன் ஆதாமுக்கும் அவர் துணைக்கும் பூங்காவில்
உள்ளவற்றில் ஒரு மரத்தின் கனியை மட்டும் தடை செய்தது , இப்லிசின்சொல்லில்
மயங்கி இருவரும் தடுக்கப்பட்ட அந்தக் கனியைப் புசித்தது அதனால் குற்றவாளிகளாகி
பூமிக்கு அனுப்பப்பட்டது , நீங்கள் ஒருவொருக்கு ஒருவர்
எதிரிகல் ஆவீர்கள் என இறைவன் சொல்லியது எல்லாம் வசனம் 7:11-25ல்
14.(7:26-31) மக்களுக்கு இறைவன் ஆடை அலங்காரங்களைக் கொடுத்திருக்கிறான்
இறை அச்சம் என்பது எல்லாவற்றையும் விட சிறந்த ஆடையாகும்
15.32-34 இறைவன்
தன அடியார்களை நன்கு உடுத்திகொள்ளவும், அலங்கரித்துக்கொள்ளவும்,
தூய்மையான அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை உண்டு களிக்கவும் ஆணை
இடுகிறான்
16. (7:40) ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகம் போனாலும் இறைவனின் அடையாளங்களை
பொய்யென்று நிராகரித்தோருக்கு சுவனபதியில் நுழைவு கிடைக்காது..
17.(7:42) இறைநம்பிக்கை
கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு அவர்கள் மேல் அவர்கள் சக்திக்கு மேல் தாங்க முடியாத
சுமையை திணிக்க மாட்டோம் . அவர்கள் என்றென்றும் சுவனத்தில் வசிப்பார்கள்
18. (7:54) வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்து தன் உயர்ந்த ஆசனத்தில் ஏறி
அமர்ந்த அந்த ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் கிடையாது .இரவு, பகல்.
கதிரவன், நிலவு, விண்மீன்கள் அனைத்தும்
அவன் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகின்றன
19.வசனம்7:
59-64 நுஹ் நபி பற்றி சொல்கிறது . இதில் முக்கியமான செயதி
என்னவென்றால் நபிகள் நாயகம் போலவே நுஹ் நபி அவர்களும் பல இன்னல்கள் ,கேலிகள் கிண்டல்களுக்கு ஆளானர்கள்.
நுஹ் நபியின் அறிவுரைகளை
கேட்டு இறைவழி நடந்தவர்களை இறைவன் Noah’s Ark எனப்படும் கப்பலில் ஏற்றித் தப்பிக்க
வைத்தான் . நம்பாத மற்றவர்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர்
2O.7:6572 “ ஹுத் நபி ஆத் இன மக்களை எச்சரித்து நல்வழிப்படுதுவததற்காக் அனுப்பி
வைக்கப்பட்டார் . மற்ற நபிகள் போல இந்த நபியும் கேலி, கிண்டலுக்கு
ஆளானார் இறுதியில் ஆத இனம்முழுமையாக .அழிக்கப்பட்டது
இதேபோல் தமுத்( ஸமூத்)
இனத்துக்கு ஸாலிஹ் நபியும் மற்றொரு சீரழிந்து போன சமூகத்துக்கு லூத் நபிபும்
அனுப்பபட்டார்கள் நபிகளின் சொற்களைக் கேளாமல் இரு சமதாயமும் முழுமையாக அழிக்கபட்டன
நில நடுக்கம் ஸமூத் சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து விட்டது
இது குரான் ஜூசு
8 ன்
சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை
.சில குறிப்புகள் மட்டுமே
குரானைப்ப்படிக்க ஒரு
தூண்டுதலாக இருக்கலாம்
குரான் வசனங்களின்
கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்றைய வினா
ஏக இறைவன் அல்லாத பிற
தெய்வங்களைத் திட்டாதீர்கள் என்ற கருத்து வரும் வசனம் எது ?
விடை (6:108) .
“அவர்கள்
அழைக்கும் ஏக இறைவன் (அல்லாஹ்) அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள் அப்படித்
திட்டினால் அவர்களும் வரம்பு மீறி ஏக இறைவனைத் திட்டுவார்கள் –
சரியான விடை எழுதி
வாழ்த்து பாராட்டுப்பெறுவோர்
சகோ
ஷர்மதா –முதல் சரியான
விடை
சிராசுதீன்
இன்றைய வினா
லூத் சமுதாயத்தினர்
எப்படி அழிக்கப்பட்டனர்?
எட்டாவது சகரை நிறைவேற்றிக்கொடுத்த
இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின்
நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன்
அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும்
சிந்திப்போம்
08 ரம்ஜான் (9) 1444
31032023 வெள்ளி
சர்புதீன் பீ
--------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment