Wednesday, 29 March 2023

திரு மறை சில குறிப்புகள் 7 பகுதி (ஜூஸு) 7

 




திரு மறை சில குறிப்புகள் 7

பகுதி (ஜூஸு) 7
30032023
7 பெயர் வல்ஜா சாம்லு Wa Iza Samiu
துவக்கம் 5:82 5. Al-Ma'idah Verse 8 நிறைவு 6:110 6. Al-An'am Verse 110
1,ஒருவர் தீய செயல் செய்யும்போது அதைத் மற்றவரும் குற்றம் புரிந்தவரே என்கிறது வசனம் 5:79.சில தனிமனிதர்கள் தவறு செய்யும்போது அதை சமூகம் தடுக்காவிட்டால் அது வளர்ந்து ஒருநாட்டையே சீரழித்து விடுகிறது
2.இறைவன் ஆகுமானதாக அறிவித்த உணவுகளை தடுக்கப்பட்டது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
3.தீயவை அளவில் மிக அதிகமாக இருந்து கருத்தைக் கவர்ந்தாலும் சிறிய அளவில் இருக்கும் நல்லதுக்கு சமமாகாது (5:100)
4.புனித ஹஜ் பயணம் கட்டாயமாக்கப்பட்டகாலத்தில் நபி பெருமானிடம் ஒரு இறை நம்பிக்கையாளர்”ஒவ்வொரு ஆண்டும் புனிதப்பயணம் கட்டாயாமா ?” என்று பலமுறை கேட்டும் நபி பெருமான் அமைதி காத்து விட்டு பிறகு சொல்கிறார் “ நான் ஆம் என்று சொல்லியிருந்தால் அது ஒரு கட்டளை ஆகி பலருக்கும் சிரமத்தையும் மன உளைச்சளையும் உண்டாக்கியிருக்கும் என்கிறார் .இதுதான் வசனம் 5:101 ல் சில செய்திகள் பற்றி கேட்பது உங்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் என்று வருகிறது
5.பிறர் செயல்கள் பற்றி அதிகம் கவனம் செலுத்தாமல் உங்கள் செயல்களை நல்வழிப் படுத்திக் கொள்ளுங்கள் என்கிறது 5:105
6.ஈசா நபி அவர்கள் இறைவன் அருளால் பெற்ற சக்திகள் மூலம் நிகழ்த்திய அற்புதங்கள்
- தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசியது
- மண்ணால் செய்த பறவைக்கு உயிர் கொடுத்த்தது
- பிறவிக்குருடர் பார்வை பெற்றது
- தொழுநோயாளி குணம் அடைந்தது
- இறந்தவர் உயிர் பெற்றது
7.ஈசா நபியிடம் இறைவன் மறுமைநாளில் வினவுகிறான் :” “இறைவனோடு , நானும் என் தாயும் கடவுள்கள் என்று மக்களிடம் சொன்னீர்களா?” என்று
அதற்கு ஈசா நபி அவர்கள்
“ நான் அப்படி சொல்லியிருந்தாலோ ,நினைதிருந்தாலோ இறைவனாகிய உனக்குத் தெரியாமல் இருக்காது . அப்படிச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது “ என்று சொல்கிறார்கள்
8.வானத்துக்கும் பூமிக்கும் இறைவன் ஒருவனே .உங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் அவன் நன்கு அறிவான் (63)
8.கருணை புரிவதை இறைவன் தனக்குரிய கடமையாக ஆக்கிக் கொண்டான்
அதனால்தான் குற்றம் புரிவோரை உடனே தண்டிக்காமல் அவ்ர்களுக்கு ஒரு கால அவகாச்தைக் கொடுக்கிறான் (6:12)8.
9.பெற்றோர் தம் குழந்தைகளை அடையாளம் கண்டு அறிவது போல் இறை நம்பிக்கை உடையவர்கள் ,இந்தத் திருமறையையும் இறைவனின் திருத்தூதரையும் அறிந்து கொள்வார்கள் (6:20)
10.மறுமை நாளில் இறைவன் இது (மறுமை நாள் ) உண்மைதானே என்று கேட்க ,ஆம் இறைவனே என்று ஒப்புக்கொள்வார்கள் .இவ்வளவு நாள் இந்த உண்மையை மறுத்ததற்கான தண்டனையை அனுபவியுங்கள் என இறைவன் கூறுவான் (6:30)
11.இறை தூதரை மறுப்பவர்கள் இறைமறுப்பளர்கள் என்ற கருத்து திரு மறையின் பல இடங்களில் வலியுறுத்திச் சொல்லபடுகிறது
12.சற்று சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு நன்கு விளங்கும் – மறுமையின் வேதனையில் இருந்து காப்பாற்ற இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும் (6:36-41)
13. (6:50) நபியே கூறும்
“நான் இறைவனின் பொருட் செல்வத்தைக் கொண்டிருக்கவில்லை
மனித அறிவுக்கு அப்பாற்பட்ட எதுவும் எனக்குத்தெரியாது . நான் ஒரு மலக்கும் இல்லை
எனக்கு அறிவிக்க்கப்பட்டதை மட்டுமே நான் பின்பற்றுகிறேன் “
14.ஏழை எளிய மக்களை இறை நம்பிக்கையாளர்கள் கூட்டத்தில் முந்தச் செய்து செல்வச் செருக்கில் திரிபவர்களை இறைவன் சோதனை செய்கிறான் (6:53)
15.6:60) அவனே இரவில் உங்கள் உயிர்களைக் கைப்பற்றிவிட்டு காலையில் தினமும்உயிர்த்தெழச் செய்கிறான்
16.இறைவழியாகிய மதத்தையும், திரு மறையையும் வேடிக்கை ,பொழுது போக்காக நினைபவர்களோடு நீங்கள் உறவு கொள்ள வேண்டாம்( 6: 68-70)
17. (6:79) விண்மீன்களையும் , நிலவையும் , பிறகு கதிரவனையும் பார்த்து , இவை எல்லாம் இறைவன் என்று எண்ணி , பிறகு அவை மறைவதைக்கண்டு அவை இறைவன் அல்ல என்று தெளிவடைந்த நபி இப்ராகிம் கூறினார்
“வானங்களையும் ,பூமியையும் படைத்த இறைவனை நோக்கி நான் முழுமையான ஈடுபாட்டுடன் திரும்பி இருக்கிறேன் .அவனுக்கு கண்டிப்பாக நான் இணை வைக்க மாட்டேன் “
18.6:83-90 இப்ராகிம் நபி வழிவந்த நபி மூஸா , ஈசா மகமது அனைவரும் ஏக இறை நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்தனர்
19.6:91-91 தவ்ராத்தையும் , குரானையும் படைத்தவன் ஒரே இறைவன்தான்
20. (6:93) வஹி எனும் இறை செய்தி தனக்கு வந்ததாக பொய் சொல்பவன் மிகக் கடும் தண்டனைக்கு உட்படுவான்
21.(6:103) எல்லாம் அறிந்தவன் , மிகவும் நுட்பமானவன் இறைவன் .அனைத்தையும் பார்க்கும் திறன் படைத்த அவனை யாரும் பார்க்க முடியாது
இது குரான் ஜூசு
7 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரானைப்படிக்க ஒரு தூண்டுதலாக அமையலாம்
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்றைய வினா
சத்திய வழி என்பது ஒரு சமுதாயத்துக்கு சொந்தம் அல்ல .இறை நம்பிக்கையோடு செயல்படும் அனைவருக்கும் இது பொதுவானது என்ற கருத்தில் வரும் இறை வசனம் எது ?
விடை
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், (விண் மீன்களை வழிபட்ட கூட்டம்)கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்(5:69)
சரியான விடை அனுப்பிய சகோ
சிரசுதீனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
இன்றைய வினா
ஏக இறைவன் அல்லாத பிற தெய்வங்களைத் திட்டாதீர்கள் என்ற கருத்து வரும் வசனம் எது ?
ஏழாவது ஸகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
07 ரம்ஜான்( 09)1444
30032023வியாழன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment