திருமறை குரான் 3:13
சகோ தல்லத் அனுப்பியது
17032023
“----------------------பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது” குரான் வசனத்தின் பகுதி
இது குரானில் எங்கு வருகிறது ?
விடை
சுராஹ் ஆலு இம்ரான் (3) வசனம் 13
(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓரு சான்று நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை இறைவனின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று இறை நம்பிக்கை இல்லாதாராக இருந்தது;
அவர்கள் இறைவனின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், இறைவன் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் உறுதியாக ஒரு படிப்பினை இருக்கிறது.
(அல்குர்ஆன் : 3:13)
விளக்கம்
பத்ருப்போரின் நிகழ்வுகளை நம்பிக்கை கொண்டோருக்கு நினைவூட்டுகிறான் இறைவன்
படை பலத்திலும் ஆயுதங்களின் எண்ணிக்கை , தரத்திலும் பன்மடங்கு உயர் நிலையில் இருந்தது எதிரிகள் கூட்டம்
ஆனால் இறைவன் நாடியபடி வலிமை குறைந்த இறை நம்பிக்கையாளர் படை மிக எளிதாக எதிரிப்படையை வீழ்த்தி அதி ரடியாக வெற்றி வாகை சூடியது
இறைவனை முழுமையாக நம்பினால் வெற்றி என்று வலியுறுத்தும் இந்த வசனம் எக்காலத்துக்கும் பொருந்தும்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி முதல் சரியான விடை
ஷர்மதா
பதிவை அனுப்பிய சகோ தல்லத்துக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
24 ஷாபான் ( 1444
17.032023 வெள்ளி
சர்புதீன்
No comments:
Post a Comment