Friday, 10 March 2023

எப்போது வருகிறாய் ? எப்போது வருகிறாய் வீட்டுக்கு ? சகோ ஷர்மதா அனுப்பிய பதிவு

 எப்போது வருகிறாய் ?

எப்போது வருகிறாய் வீட்டுக்கு ?
சகோ ஷர்மதா அனுப்பிய பதிவு
என்னுரை
காதல் ,மண வாழ்வில் பிரிக்க முடியாதது பிரிவு
பிரிவு பற்றி சொல்லாமல் இலக்கியமே இல்லை
பிரிவாற்றாமை என ஒரு அதிகாரமே இயற்றியுள்ளார் வள்ளுவர்
சங்க இலகியங்களுடன் போட்டி போடும்
திரைப்பாடல்கள்
“பொன் மணிமேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும்
கைவளை சோர்ந்து விடும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும்
காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும்
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த் என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி “
இனி சகோ ஷர்மதா
“பார்டர் படத்தில் பிரபலமான இராணுவ வீரர்கள்
வீட்டைப் பிரிந்து நாட்டிற்காக தங்களை
அர்ப்பணித்து வாழும்
இவர்களுடைய வாழ்க்கையில் குடும்பத்தாரிடம் ,ஒவ்வொருவருக்கும் வரும்
கடிதங்கள் அவர்களை
எவ்வாறு மகிழ்ச்சியாக
வைக்கின்றன என்பதை
மிக அழகாக உணர்த்தும் உணர்வுப்பூர்வமான
பாடல். Ke Ghar Kab Aaoge
இந்தப் பாடலுடன்
எனக்குத் தெரிந்த அளவுள்ள
இதனை மொழிபெயர்த்துள்ளேன்நன்றி😊
பாடல்
-
எங்களைத் துடிக்க வைக்கிறது
கடிதம் வருகின்றது அதில்
கேட்கப்படுகின்றது
வீட்டிற்கு எப்போது வருகிறாய்...
வீட்டிற்கு எப்போது
வருகிறாய்..
கடிதம் வருகின்றது அதில்
கேட்கப்படுகின்றது
வீட்டிற்கு எப்போது வருகிறாய்...
எழுதி அனுப்பு எப்போது
வருகிறாய்
நீ இல்லாத இந்த வீடு
வெறுமையாய் இருக்கின்றது
என்னிடம் மனதைப்
பறி கொடுத்தவள்
மயக்கம் கொண்டவள் எனக்குக் கடிதம் எழுதுகிறாள்
என்னிடம் கேட்கிறாள்
யாருடைய சுவாசத் துடிப்போ
யாருடைய வளையோசையோ
யார் கையில் காப்பு
அணிந்தவளோ
யாருடைய கூந்தலின்
பூமணமோ
அவள் கேட்கிறாள்
புலரும் காலைப்பொழுதும்
இரவுக்கும் பகலுக்கும்
இடைப்பட்ட
பொழுது சாயம்
நேரமும்
தனியாக இருந்த இரவுகளும்
பாதியில் விட்ட
பேச்சுக்களும்
தாங்குவதற்காக
ஏங்கும் தோள்களும்
பார்த்துப் பார்த்து பூத்த
விழிகளும்
கேட்கின்றன
வீட்டிற்கு எப்போது வருகிறாய்
வீட்டிற்கு எப்போது
வருகிறாய்...
எழுதி அனுப்பு
எப்போது வருகிறாய்
நீ இல்லாமல் மனம்
வெறுமையாய்
இருக்கிறது.
தகவல் வருகின்றது
அது எங்களை
துடிக்க வைக்கின்றது
கடிதம்வருகின்றது
அதில் கேட்கப்படுகின்றது
வீட்டிற்கு எப்போது வருகிறாய்
வீட்டிற்கு எப்போது
வருகிறாய்
நீ இல்லாத இந்த
வீடு வெறுமையாய்
இருக்கின்றது
அன்பான என் நண்பர்கள்
கடிதம் எழுதி
இருக்கிறார்கள்
என்னிடம்
கேட்கிறார்கள்
என் கிராமம்
அதில் உள்ள மாமர நிழல்
பழைய அரச மரம்
மழை பொழியும்
மேகங்களும்
வயல் வரப்புக்கள்
பசுமையான
புல்வெளிகள்
வசந்த காலத்தில்
பசுமையாய்
வளைந்திடும் கொடிகள்
சறுக்கி விடும்
மணல் மேடுகள்
மணம் வீசக்கூடிய
மலர்கள்
சட்டென்று பூக்கும்
மொட்டுக்கள்
இன்னும்
கேட்கின்றன
கிராமத்து
சந்து பொந்துகள்
வீட்டிற்கு எப்போது
வருகிறாய்
வீட்டிற்கு எப்போது
வருகிறாய்
கடிதம் எழுது எப்போது
வருகிறாய்
நீ இல்லாத இந்த
வீடு வெறுமையாய்
இருக்கின்றது
ஓ....ஓ....ஓ.....
அன்பான தாயிடமிருந்து
பாசத்தின் கங்கையிடமிருந்து
அந்தக் கடிதம்
வருகின்றது
அதனுடன் வருகின்றது
என் குழந்தைப்பருவ நினைவுகள்
விளையாடிய
மைதானம் அதன்
நிழலின் மடியில்
கரு மையில் வைத்த
அந்தக்கருப்புப்புள்ளி
அந்த தாலட்டிய
இரவுகள்
அந்த மென்மையான
கைகள்
அந்த பாசத்தில்
பொங்கி வழியும்
விழிகள்
அந்த கவலை
தோய்ந்த பேச்சக்கள்
வெளியில் கண்டிப்பையும்
உள்ளே பாசத்தையும்
நிரப்பிய தேவி உருவிலான அம்மா
ஒவ்வொரு
கடிதத்திலும் கேட்பது
இதுதான்
வீட்டிற்கு எப்போது வருகிறாய்
வீட்டிற்கு எப்போது
வருகிறாய்
எழுதி அனுப்பு
எப்போது வருகிறாய்
நீ இல்லாத மைதானம்
வெறுமையாய்
இருக்கிறது
தகவல் வருகின்றது
அது எங்களை
துடிக்க
வைக்கின்றது
கடிதம் வருகின்றது
அதில் கேட்கப்படுகின்றது
வீட்டிற்கு எப்போது வருகிறாய்
வீட்டிற்கு எப்போது
வருகிறாய்
எழுதி அனுப்பு
எப்போது வருகிறாய்
நீ இல்லாத வீடு
வெறுமையாய்
இருக்கின்றது
ஏ வீசிச் செல்லும்
தென்றலே
எனக்கு ஒரு
வேலை செய்கிறாயா
என் ஊரில்
என் நண்பர்களிடம்
என் வணக்கத்தை
தெரிவி
என் ஊரில் உள்ளது
அந்தத் தெரு
அங்கே என் காதலி
இருக்கிறாள்
அவனிடம் என் காதலைச் சொல்
அவளிடம் என்
காதலைச்சொல்
அங்கிருந்து சிறிது
தொலைவில்
என் வீடு
இருக்கிறது
என் வீட்டில்
என் வயோதிகத்
தாய்இருக்கிறாள்
என் தாயின் காலைத்
தொட்டு வணங்கி
அவளிடம் அவள்
மகனின் பெயரைச்சொல்
ஏ வீசிச் செல்லும் தென்றலே
என்நண்பர்கள்
என்காதலி
என் தாய்க்கும்
என் செய்தியைச்
சொல்
அவர்களிடம் சென்று
இந்தச் செய்தியைச் சொல்
நான் திரும்பி வருவேன்
நான் திரும்பி வருவேன்
மீண்டும் என்ஊரில்
அதன் மைதானத்தில்
அம்மாவின் முந்தியிடம்
ஊரின் அரச மரத்திடம்
கண்ணுக்கு மை போட்டவளிடம்
நான் சொன்ன வாக்கை
நிறைவேற்றுவேன்
நான் ஒரு நாள் வருவேன்
நான் ஒரு நாள்
வருவேன்
நான்ஒரு நாள்
வருவேன்
நான் ஒரு நாள்
வருவேன்
நான் ஒருநாள்
வருவேன்
நான் ஒரு நாள் வருவேன்
நான் ஒரு நாள்
வருவேன்.
நான் ஒரு நாள்
வருவேன்.
Write by Javed Aktar,Anu Malik and it's a National award song
Profile of Ms. Sharmatha
I am Sharmamatha Ayub Khan,
We lived in Maharastra
Many places we went and stayed on transfer
I speak Hindi, Marathi well,
I translate some things into
Tamil.😊
நிறைவாக என்னுரை
அழகான பாடலை பொருள், சுவை மாறாமல் மொழி மாற்றம் செய்து அனுப்பிய சகோ ஷர்மதாவுக்கு நன்றி, பாராட்டுகள்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
11032023 சனிக்கிழமை
சர்புதீன் பீ
May be an image of text that says "मेल मिलाप सेना सेवा डाक"
4

No comments:

Post a Comment