Thursday, 23 March 2023

திருமறை –குறிப்புகள் சில பகுதி (ஜூஸு)1






 திருமறை –குறிப்புகள் சில

பகுதி (ஜூஸு)1
24032023
பெயர் Alif Lam Meem அலிப் லாம் மீம்
துவக்கம் சூராஹ் 1. அல் பாத்திஹா Al-Fatiha Verse 1 நிறைவு 2. அல் பக்ராAl-Baqarah Verse 1411
குரான் முழுக்க முழுக்க இறைவனின் படைப்பு .
இதில் இது முக்கியம் அது முக்கியம் என்று பிரித்துப்பார்க்க முடியாது
குர்ஆனில் வரும் ஒவ்வொரு எழுத்தும் அதை படிப்பவருக்கு நன்மை பயக்கும் .
எடுத்துக்காட்டாக வெறுக்கப்படும் விலங்கின் பெயர் கூட குர்ஆனில் வரும்போது அதைப்படிப்பவருக்கு ஒரு எழுத்துக்கு ஒன்று என மூன்று நன்மை கொடுக்கும் என்பார்கள்
இப்போது எதற்கு அதெல்லாம் என்கிறீர்களா ?
குர்ஆனில் படிக்கும்போது என் சிற்றறிவுக்கு பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிய ஒரு சில செய்திகளை இங்கே தருகிறேன்
முதலில் முதலாம் ஜூசு
( சில குறிப்புகள் மட்டும்)
குரானின் துவக்கத்தில் வரும் அல்பாத்திஹா எனும் 7 வரிகள் கொண்ட சூராஹ் மிக மகத்துவம் பொருந்திய ஒரு சூராவாஹும்
தொழுகை , இன்னும் மற்ற மத நிகழ்வுகள் எதுவும் இந்த சூராஹ் ஓதாமல் நிறைவு பெறாது
குரானின் சுருக்கம் எனப்படும் இந்த சூராவின் ஒவ்வொரு வரிக்கும் நீண்ட விளக்கங்கள் இணையத்தில் காணலாம்
இங்கு அதன் தமிழ் பொருளை மட்டும் தருகிறேன்
“அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்)
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. !
அது) உன் சினத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.”
இனி சுராஹ் 2
1.”இஸ்ராயிலின் சந்ததியனரே (children of Israel):”
குர்ஆனில் பல இடங்களில் வரும் சொற்கள் (2:40)
இதற்கு என்ன பொருள் ?
இஸ்ராயில் (Israel) என்ற சொல்லுக்கு இறைவனின் அடிமை என்று பொருள்
இது யக்குப் (ஜாகப்) நபிக்கு இறைவனே வழங்கிய பட்டமாகும்
ஆப்ரஹாம் நபியின் மகன் இசாக் நபி (Issac) .இசாக் நபியின் மகன் யகூப் நபி
.யகுப் நபியின் சந்ததியனர் இஸ்ராயிலின் சந்ததியனர் (children of Israel) என்று அழைக்கப் படுகிறார்கள்
2.சப்பாத் (Sabbath) எனும் ஓய்வு தினமாகிய சனிக்கிழமையை ஓய்விலும் இறைவணக்கத்திலும் கழிக்க வேண்டும் என்ற இறைவனின் கட்டளையை மீறி வணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்டவர்களை குரங்கு போல் மாற்றிய செய்தி
வசனம் 2:65ல் வருகிறது
3.இறைவன் அருள் எனும் பரிசைப்பெற யாருக்கும் தனி உரிமை கிடையாது
முழுமையாக இறைவனுக்கு அடிபணிந்து நல்லது செய்யும் அனைவருக்கும்
இறையருள் எனும் பரிசைப்பெற முழு உரிமை உண்டு (2:112)
4.இறைவனை வணங்கும் திசையை மாற்றுவது ஒரு பெரிய செய்தி இல்லை .அது பற்றி விவாதமோ, கருத்து வேறுபாடோ தேவையில்லாத ஓன்று என்பதை வலியுறுத்தும் இறைவசனம்
“கிழக்கும் மேற்கும் இறைவனுக்கே உரியவை நீங்கள் எந்தத் திசையில் திரும்பினாலும் இறைவனை நோக்கியே திரும்புகிறீர்கள் –(2:115)
5.நுஹ் நபிக்குப் பின் ஏக இறைக் கொள்கையை பரப்ப தூதராக இறைவன் இப்ராகிம் நபி அவர்களை நியமித்தான்
இப்ராகிம் நபியின் சந்ததியினர் இஸ்மாயிலின் மக்கள் Children of Ishmael , (அரபு தேசத்தில் வாழ்ந்தவர்கள் – குறைஷிகளும் மற்ற அராபிய வம்சங்களும் இந்தப்பிரிவினர்
இசாக்கின் மக்கள் Children of Isaac( யகுப், யூசுப் , மூசா ,தாவித் ,சுலைமான் ,யஹ்யா ,ஈசா என பல நபிபெருமக்கள்
இந்தப்பிரிவைச் சேர்ந்தவர்கள் – இஸ்ரவேலரின் சந்ததிகள் என அறியபட்டவர்கள் ) என இரு பிரிவினர் (2:122 EN 123)
இது முதல் ஜூசின் சுருக்கமோ, விரிவுரையோ,தெளிவுரையோ இல்லை . சில, வெகு சில குறிப்புகள் மட்டுமே
நிறைவாக ஒரு சிறிய வினா ஏற்கனவே ஒரு முறை கேட்டதுதான்
“இஸ்ராயிலின் சந்ததியனரே (children of Israel)”
குர்ஆனில் எத்தனை முறை வருகிறது , ?
முதல் சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தில் இறைவன் அள்ளிக்கொடுக்கும் அருட்கொடைகள்
அனைத்தும் நம்அனைவருக்கும் முழுமையாக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
( விளக்கங்கள் – இணையத்திலிருந்து )
01 ரமளான் (9)1444
2402023 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment